உள்ளடக்கத்துக்குச் செல்

பாய்ச்சங் பூட்டியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாய்ச்சங் பூட்டியா
சுய தகவல்கள்
முழுப் பெயர்பாய்ச்சங் பூட்டியா[1]
உயரம்1.73 m (5 அடி 8 அங்) (5 அடி 8 அங்)[2]
ஆடும் நிலை(கள்)Striker
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
United Sikkim
எண்15
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
1993–1995East Bengal Club9(4)
1995–1997JCT Mills20(14)
1997–1999East Bengal Club31(15)
1999–2002Bury37(3)
2002–2003Mohun Bagan11(6)
2003Perak FA8(4)
2003–2005East Bengal Club38(21)
2005Selangor MK Land5(1)
2005–2006East Bengal Club16(12)
2006–2009Mohun Bagan45(19)
2009–2011East Bengal Club3(0)
2012-United Sikkim0(0)
பன்னாட்டு வாழ்வழி
1995–2011India107(43)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 10 January 2012 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 10 January 2012 அன்று சேகரிக்கப்பட்டது.

பாய்ச்சங் பூட்டியா (Baichung Bhutia) (பிறப்பு: திசம்பர் 15, 1976) என்பவர் இந்திய கால்பந்து வீரராவார். இவர் ஒரு முன்கள வீரராவார். உலக அளவில் அறியப்படும் இந்திய கால்பந்து வீரர் இவரே. மூன்று முறை, ஆண்டிற்கான சிறந்த வீரர் விருதை வென்ற ஐ.எம். விசயன் இவரைப் பற்றி, இந்திய கால்பந்தாட்டத்துக்குக் கடவுளின் பரிசு - பூட்டியா எனக் கூறியுள்ளார்.

பாய்ச்சங் பூட்டியா முதன்முதலில் ஐ-கூட்டிணைவு அணியான ஈஸ்ட் பெங்கால் கிளப்புக்கு விளையாடினார்; மொத்தமாக, வெவ்வேறு காலகட்டங்களில் நான்குமுறை அக்கழகத்திற்காக ஆடியுள்ளார். 1999-ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த பரி கால்பந்துக் கழகத்துக்கு விளையாட ஒப்பந்தமானார்; இதன்மூலம் ஓர் ஐரோப்பிய கால்பந்து கழகத்துக்காக விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் இவர் மலேசியாவைச் சேர்ந்த கால்பந்துக் கழகமான பெராக் எஃப்ஏ-வுக்கும் விளையாடியுள்ளார். இந்தியாவில் ஜெசிடு மில்சு மற்றும் மோகன் பகன் ஆகிய கழகங்களுக்காகவும் இவர் ஆடியுள்ளார்.

இந்திய தேசிய அணிக்காக விளையாடி நேரு கோப்பை, எல்ஜி கோப்பை, தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பின் வாகைத்தொடர் (மூன்று முறை) மற்றும் ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பின் சாலஞ்ச் கோப்பை ஆகியவற்றை வென்றுள்ளார். மேலும் இவரே, இந்திய தேசிய அணிக்காக அதிகமுறை விளையாடியவர்; 2009 நேரு கோப்பையில் விளையாடும்போது 100-வது போட்டியில் பங்கேற்றார்.

இவரது பெயர், சிக்கிம் மாநிலத்தில் நாம்ச்சி நகரிலுள்ள கால்பந்து விளையாட்டரங்கத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. இவர் அர்ஜுனா விருது (1998) மற்றும் பத்மசிறீ விருது (2008) பெற்றவராவார்.

குறிப்புதவிகள்

[தொகு]
  1. Hugman, Barry J. (2005). The PFA Premier & Football League Players' Records 1946-2005. Queen Anne Press. p. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85291-665-6.
  2. "IndianFootball.com Profile". IndianFootball.com. பார்க்கப்பட்ட நாள் 2009-06-24.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாய்ச்சங்_பூட்டியா&oldid=3783138" இலிருந்து மீள்விக்கப்பட்டது