இது நம்ம ஆளு (2016 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இது நம்ம ஆளு
இயக்கம்பாண்டிராஜ்
தயாரிப்புடி. ராஜேந்தர்
உஷா ராஜேந்தர்
கதைபாண்டிராஜ்
இசைடி. ஆர். குறளரசன்
நடிப்புசிலம்பரசன்
நயன்தாரா
ஆண்ட்ரியா
சூரி
ஜெயபிரகாஷ்
ஒளிப்பதிவுபாலசுப்பிரமணியம்
படத்தொகுப்புபிரவீன் கே. எல்.
கலையகம்சிம்பு சினி ஆர்ட்சு
விநியோகம்ஸ்ரீ தேனாண்டாள் சினிமா
வெளியீடுமே 27, 2016 (2016-05-27)
நாடு இந்தியா
மொழிதமிழ்

இது நம்ம ஆளு என்பது 2016 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். பாண்டிராஜ் இயக்கிய இத்திரைப்படத்தில் சிலம்பரசன், நயன்தாரா, ஆண்ட்ரியா ஜெரெமையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் சூரி, ஜெயபிரகாஷ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை டி. ராஜேந்தர் தயாரித்துள்ளார். டி. ராஜேந்தரின் இளைய மகனும், சிலம்பரசனின் தம்பியுமான குறளரசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 2013 ஆவது ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டுவந்த இப்படம் 2016 இல் வெளியானது. இப்படம் 2017 [1] ல் தெலுங்கில் சரசூடு எனும் பெயரில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டது.

கதைச்சுருக்கம்[தொகு]

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தனது நண்பனும் சாரதியுமான வாசுவுடன் (சூரி) பணிபுரிகிறான் சிவா (சிலம்பரசன்). சிவா மைலாவின் (நயன்தாரா) மேல் விருப்பம் கொள்ள அவளிடம் தனது விருப்பத்தை தெரிவிக்கிறான். மைலா சிவாவிடம் அவனுடைய முன்னாள் காதலி பற்றி வினவுகிறாள். முன்னாள் காதலி சிவாவினுடைய காதலை அங்கிகரிப்பதுடன் பின்னர் அவர்களுடைய திருமணம் நிகழாது என்றவுடன் இருவரும் பிரிகின்றனர். ஆனால் மைலாவோ திருமணத்திற்கு சம்மதிக்கிறாள். அதன் பின்னர் மைலா சிவாவிடம் அவனுடைய முன்னாள் காதல் பற்றி கேட்டு அவனை மிக ஆழமாக காதலிக்கிறாள். ஒரு சிறிய பிரச்சினை காரணமாக இருவரின் திருமணமும் நிற்கிறது. இதனால் மைலா தற்கொலை செய்ய முயன்றபோது சிவாவினுடைய தந்தை அவளை காப்பாற்றுகின்றார். பின்னர் இருவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தை பிறக்கிறது.

நடிகர்கள்[தொகு]

இசையமைப்பு[தொகு]

இப்படத்திற்கான இசையை குறளரசன் அமைத்திருந்தார். மொத்தமாக ஆறு பாடல்கள் இப்படத்தில் உள்ளன[2]. குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமான இப்படத்தின் சில பாடல்களை அவரே எழுதி, பாடியுமிருந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.123telugu.com/reviews/sarasudu-telugu-movie-review.html
  2. "Idhu Namma Aalu movie songs Review". MovieTet. 27 ஜனவரி 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Idhu Namma Aalu review". liveagle.in.[தொடர்பிழந்த இணைப்பு]