ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம்
ALAnumbering.svg
Linolenic-acid-3D-vdW.png
பெயர்கள்
வேறு பெயர்கள்
லினோலெனிக் அமிலம்; அனைத்து ஒருபக்க-9,12,15-ஆக்டாடெக்காடிரையீனோயிக் அமிலம்; (9Z,12Z,15Z)-9,12,15-ஆக்டாடெக்காடிரையீனோயிக் அமிலம்; (9Z,12Z,15Z)-ஆக்டாடெக்கா-9,12,15-டிரையீனோயிக் அமிலம்[1]; இண்டஸ்டிரீன் 120
இனங்காட்டிகள்
463-40-1 Yes check.svgY
ChEBI CHEBI:27432 Yes check.svgY
ChEMBL ChEMBL8739 Yes check.svgY
ChemSpider 4444437 Yes check.svgY
DrugBank DB00132 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 5280934
UNII 0RBV727H71 Yes check.svgY
பண்புகள்
C18H30O2
வாய்ப்பாட்டு எடை 278.44 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references
உணவிலுள்ள கொழுப்பு வகைகள்
இவற்றையும் காண்க

ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் (α-Linolenic acid; ALA) என்னும் கரிமச் சேர்மம் பல்வேறு பொதுவான தாவர எண்ணெய்களிலும், கொழுப்புகளிலும் காணப்படுகின்றது. இதன் கட்டமைப்பைக் கொண்டு அனைத்து ஒருபக்க-9,12,15-ஆக்டாடெக்காடிரையீனோயிக் அமிலம் என்றும்[2], உடலியக்கவியலில் ஒமேகா-3 (18:3; n−3) என்றும் அழைக்கப்படுகின்றது.

ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் மூன்று ஒருபக்க இரட்டைப்பிணைப்புகளைக் கொண்ட பதினெட்டு கார்பன் தொடரி கார்பாக்சிலிக் அமிலமாகும். முதலாவது இரட்டைப்பிணைப்பானது கொழுப்பு அமிலத்தின் மீத்தைல் முனையிலிருந்து மூன்றாவது கார்பனில் அமைந்துள்ளது. இதை ஒமேகா (ω அல்லது n) முனை என்கிறோம். எனவே, ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் ஒரு பல்நிறைவுறா ஒமேகா-3 கொழுப்பு அமிலமாகும். இது பல்நிறைவுறா ஒமேகா-6 கொழுப்பு அமிலமான காமா-லினோலெனிக் அமிலத்தின் மாற்றியனாகும்.

வரலாறு[தொகு]

ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் முதன்முதலாக ரோல்லெட் என்பவரால் பிரித்தெடுக்கப்பட்டது[3],[4]. கிரீன்-ஹில்டிட்ச்சின் 1930-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் குறிக்கப்பட்டுள்ளது[5]. ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் முதன்முதலாக 1995-ஆம் ஆண்டு செயற்கையான முறையில் தொகுக்கப்பட்டது[6].

உணவு மூலங்கள்[தொகு]

விதைகளிலிருந்துப் பெறப்படும் எண்ணெய்கள் ஆல்ஃபா-லினோலெனிக் அமிலத்தின் வளமையான மூலங்களாகும்; உதாரணமாக, காட்டுக்கடுகு, ரேப் விதை, சோயா அவரை, அக்ரூட் பருப்பு, ஆளிவிதை எண்ணெய், சணல்விதை, பெரில்லா எண்ணெய், உருத்திர சடை(சப்ஜா) மற்றும் நார்ச்செடி. ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் அகன்றஇலைத் தாவரங்களின் பச்சை இலைகளின், ஒளிச்சேர்க்கைக்குக் காரணியாக உள்ள, தைலகாய்டு சவ்வுகளிலிருந்தும் பெறப்படுகிறது[7]. ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் இரண்டு மணி நேரத்திற்கு வெண்ணெயைப் போன்று 177 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்டுள்ளதால், பல்வேறு சமையல்களில் உபயோகமாக உள்ளது [8].

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Loreau, O; Maret, A; Poullain, D; Chardigny, JM; Sébédio, JL; Beaufrère, B; Noël, JP (2000). "Large-scale preparation of (9Z,12E)-1-(13)C-octadeca-9,12-dienoic acid, (9Z,12Z,15E)-1-(13)C-octadeca-9,12,15-trienoic acid and their 1-(13)C all-cis isomers". Chemistry and physics of lipids 106 (1): 65–78. doi:10.1016/S0009-3084(00)00137-7. பப்மெட்:10878236. 
  2. Beare-Rogers (2001). "IUPAC Lexicon of Lipid Nutrition" (pdf). 4 February 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. Rollett, A. (1909). "Zur kenntnis der linolensäure und des leinöls". Z. Physiol. Chem. 62 (5–6): 422. doi:10.1515/bchm2.1909.62.5-6.422. 
  4. J. W. McCutcheon (1955). "Linolenic acid". Organic Syntheses. ; Collective Volume, 3, p. 351
  5. Green, TG; Hilditch, TP (1935). "The identification of linoleic and linolenic acids". Biochem. J. 29 (7): 1552–63. பப்மெட்:16745822. 
  6. Sandri, J.; Viala, J. (1995). "Direct preparation of (Z,Z)-1,4-dienic units with a new C6 homologating agent: synthesis of alpha-linolenic acid". Synthesis 3 (3): 271–275. doi:10.1055/s-1995-3906. https://archive.org/details/sim_synthesis_1995-03_3/page/271. 
  7. Chapman, David J.; De-Felice, John and Barber, James (May 1983). "Growth temperature effects on thylakoid membrane lipid and protein content of pea chloroplasts 1". Plant Physiol 72 (1): 225–228. doi:10.1104/pp.72.1.225. பப்மெட்:16662966. 
  8. http://www.aaoobfoods.com/graininfo.htm