ஆர். எல். பாட்டியா
இரகுநந்தன் லால் பாட்டியா | |
---|---|
2005இல் பாட்டியா | |
23வது [[பீகார் ஆளுநர்]] | |
பதவியில் 10 ஜூலை 2008 – 28 ஜூன் 2009 | |
முதலமைச்சர் | நிதிஷ் குமார் |
முன்னையவர் | ஆர். எஸ். கவாய் |
பின்னவர் | தேவானந்த் கொன்வர் |
163வது [[கேரளாவின் ஆளுநர்]] | |
பதவியில் 23 ஜூன் 2004 – 10 ஜூலி 2008 | |
முதலமைச்சர் | அ. கு. ஆன்டனி உம்மன் சாண்டி வி. எஸ். அச்சுதானந்தன் |
முன்னையவர் | டி. என். சதுர்வேதி (கூடுதல் பொறுப்பு) |
பின்னவர் | ஆர். எஸ். கவாய் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அமிருதசரசு, பஞ்சாப் மாகாணம், பிரித்தானியாவின் இந்தியா | 3 சூலை 1920
இறப்பு | 14 மே 2021 அமிருதசரசு, பஞ்சாப், இந்தியா | (அகவை 100)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பெற்றோர் | அரூரமால் பாட்டியா, லால் தேவி பாட்டியா |
முன்னாள் கல்லூரி | பஞ்சாப் பல்கலைக்கழகம் |
இரகுநந்தன் லால் பாட்டியா (Raghunandan Lal Bhatia) (3 ஜூலை 1920 - 14 மே 2021)[1][2] ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் 23 ஜூன் 2004 முதல் 10 ஜூலை 2008 வரை கேரளாவின் ஆளுநராக இருந்தார். மேலும் 10 ஜூலை 2008 முதல் 28 ஜூன் 2009 வரை பீகாரின் ஆளுநராகவும் இருந்தார்.
சுயசரிதை
[தொகு]பாட்டியா அரூரமால் பாட்டியா - லால் தேவி பாட்டியா ஆகியோருக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் ஜூலை 3, 1920இல் பிறந்தார்.[3] இவர் இலாகூரிலுள்ளபஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். மேலும் சட்டமும் பயின்றார். இதற்குப் பிறகு, இவர் ஒன்பது ஆண்டுகள் அமிர்தசரசின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றினார்.
வகித்த பதவிகள்
[தொகு]பாட்டியா, 1972ஆம் ஆண்டு அமிர்தசரசு நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1980, 1985, 1992, 1996 , 1999 தேர்தல்களில் அதே தொகுதியிலிருந்து மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நேரத்தில் இவர் வேறு பல பதவிகளையும் வகித்தார். இவர் 1975 முதல் 1977 வரை காங்கிரசு நாடாளுமன்றக் கட்சியின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்தார், ஜூலை 1992 முதல் 1993 வரை இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், 1983இல் மக்களவையில் மனுக்கள் குழுவின் தலைவராகவும், 1982 முதல் 1984 வரை பஞ்சாப் பிரதேச காங்கிரசு குழுவின் தலைவராகவும், 1991இல் காங்கிரசு கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராகவும், அரசியலமைப்பு திருத்தத்திற்காக 1992இல் அமைக்கப்பட்ட தேர்வுக் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
மாநிலங்களவையில் இருந்த காலத்தில் இவர் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியாக இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். நவம்பர் 1983 இல் புது தில்லியில் நடந்த பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாட்டில் பிரதிநிதியாக பங்கேற்றார். மேலும், 1991இல் கொழும்பில் நடந்த ஆறாவது தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, 1986இல் தில்லியில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்புக்கான செயல் திட்டத்தின் ஒருங்கிணைப்பு நாடுகளின் 5 வது கூட்டம் ஆகியவற்றிலும் பங்கேற்றார்.
பாட்டியா, 1983 முதல் 1984 வரை கலாச்சார உறவுகளுக்கான இந்தியக் குழுவின் உறுப்பினராக இருந்தார். இவர் 1983 முதல் 1990 வரை இந்தியா பல்கேரியா நட்பு சங்கத்தின் தலைவராக இருந்தார். 1983 முதல் 1990 வரை இந்திய-இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு நட்பு சங்கத்தின் தலைவராக இருந்தார். இவர் 1981 முதல் 1983 வரை அகில இந்திய அமைதி மற்றும் ஒற்றுமை அமைப்பின் இணைத் தலைவராகவும், 1983 முதல் 1984 வரை சோவியத் ஒன்றியத்தின் நட்புச் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார்.
2004இல் சிக்கந்தர் பக்தின் மரணத்தைத் தொடர்ந்து பாட்டியா, கேரளாவின் ஆளுநரானார். அந்த பதவியில் நான்கு ஆண்டுகள் கழித்த பிறகு,பீகார் ஆளுநர் ஆர். எஸ். கவாயுடன் பதவிகளை மாற்றி 26 ஜூன் 2008 அன்று பீகார் ஆளுநராக பாட்டியா நியமிக்கப்பட்டார்.[4] இவர் 10 ஜூலை 2008 அன்று பதவியேற்றார்.[5] பின்னர் 2009இல் ஆளுநர் அலுவலகத்தை விட்டு வெளியேறி, தனது சொந்த வாழ்க்கையை நடத்தினார்.
இறப்பு
[தொகு]பாட்டியா , கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2021 இல் இறந்தார். [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bihar observes day-long state mourning for its former governor". Madan Kumar. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16 May 2021. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.
- ↑ Ex-Union minister RL Bhatia dies of Covid-19 in Amritsar
- ↑ "Members : Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-18.
- ↑ "R.S. Gavai is new Kerala Governor", The Hindu, 27 June 2008.
- ↑ "New Governor R. L. Bhatia Sworn-in" பரணிடப்பட்டது 4 ஆகத்து 2008 at the வந்தவழி இயந்திரம், PatnaDaily.com, 10 July 2008.
- ↑ https://www.tribuneindia.com/news/punjab/congress-veteran-and-six-time-former-amritsar-mp-rl-bhatia-dies-of-covid-at-100-253237