ஆர்தர் மோரிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர்தர் மோரிஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஆர்தர் ராபர்ட் மோரிஸ்
பிறப்பு(1922-01-19)19 சனவரி 1922
போண்டி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா
இறப்பு22 ஆகத்து 2015(2015-08-22) (அகவை 93)
சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா
உயரம்1.75 m (5 அடி 9 அங்)
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைஇடதுகை வழமையில்லாச் சுழல்
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 171)29 நவம்பர் 1946 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு11 சூன் 1955 எ. மேற்கிந்தியத் தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1940/41–1954/55நியூ சவுத் வேல்ஸ் துடுப்பாட்ட அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே து முதது
ஆட்டங்கள் 46 162
ஓட்டங்கள் 3,533 12614
மட்டையாட்ட சராசரி 46.48 53.67
100கள்/50கள் 12/12 46/46
அதியுயர் ஓட்டம் 206 290
வீசிய பந்துகள் 111 860
வீழ்த்தல்கள் 2 12
பந்துவீச்சு சராசரி 25 49.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 1/5 3/36
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
15/– 73/–
மூலம்: கிரிக் அர்சிவ், 24 நவம்பர் 2007

ஆர்தர் ராபர்ட் மோரிஸ் MBE (Arthur Robert Morris 19 ஜனவரி 1922 - 22 ஆகஸ்ட் 2015) ஒரு முன்னாள் ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். அவர் 1946 மற்றும் 1955 க்கு இடையில் 46 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். ஒரு தொடக்க ஆட்டக்காரரான மோரிஸ் ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த இடது கை மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 1948 இல் தோல்வியுற்ற இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட டான் பிராட்மேனின் இன்விசிபில்சில் கலந்துகொண்டதன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார். அந்தச் சுற்றுப் பயணத்தில் மூன்று நூறுகள் எடுத்து அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இவர் முதலிடம் பெற்றார்.ஹெடிங்லேயில் நடந்த நான்காவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவரின் உதவியின் மூலமாக எதிரணிக்கு 404 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வாரியத்தின் நூற்றாண்டு அணியில் மோரிஸ் இடம்பெற்றார்.மேலும் 2001 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய துடுப்பாட்டம் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார் .

ஆரம்ப ஆண்டுகளில்[தொகு]

இவரது தந்தை சிட்னியில் வேவர்லி துடுப்பாட்ட சங்கத்தில் விரைவு வீச்சாளராக விளையாடிய பள்ளி ஆசிரியர் ஆவார். மோரிஸ் 1922 இல் சிட்னி கடலோர புறநகர்ப் பகுதியான பாண்டியில் பிறந்தார் . தனது ஆரம்ப ஆண்டுகளை நகரத்தில் கழித்தார். பெவர்லி ஹில்ஸின் புறநகரில் உள்ள சிட்னிக்குத் திரும்புவதற்கு முன்பு, அவர் ஐந்து வயதாக இருந்தபோது அவரது குடும்பம் துங்காக், பின்னர் நியூகாசில் ஆகிய நகரங்களுக்குச் சென்றது. இந்த நேரத்தில், மோரிஸின் பெற்றோர் திருமண முறிவு பெற்றனர். [1] [2]

அவரது தந்தை அவரை துடுப்பாட்டம் விளையாடுவதை ஊக்குவித்தார்.மேலும் அவர் பலவிதமான பந்து விளையாட்டுகளில், குறிப்பாக துடுப்பாட்டம், ரக்பி மற்றும் டென்னிஸில் சிறப்பாக விளையாடினார். 12 வயதில், அவர் நியூகேஸில் பாய்ஸ் உயர்நிலைப்பள்ளியின் துடுப்பாட்ட அணி சார்பில் பந்து வீச்சாளராக அறிமுகமானார் .[3]மோரிஸ் 1936 முதல் 1939 வரை கேன்டர்பரி சிறுவர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.அங்கு அவர் துடுப்பாட்ட மற்றும் ரக்பி அணி சார்பாக பள்ளியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், மேலும் 11 ஆம் ஆண்டில் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தனது உயர்நிலைப் பள்ளியின் கடைசி இரண்டு ஆண்டுகளில், அவர் இரண்டு அனிகளிலும் , உஅயர்நிலைப் பள்ளி துடுப்பாட்ட அணி மற்றும் ரக்பி போட்டிக்கும் தலைவராக இருந்தார் . [2] [1] 14 ஆம் வயதில், செயின்ட் ஜார்ஜ் துடுப்பாட்ட அணிக்காக அறிமுகமானார், 1937-38 இல் அவர் இரண்டாவது லெவன் அணிக்கு தேர்வானார். 16 வயதிற்குட்பட்ட ஒரு போட்டியில், ஏ.டபிள்யூ கிரீன் ஷீல்ட் போட்டியில், மோரிஸ் 5.23 எனும் சராசரியில் 55 இழப்புகளைக் கைப்பற்றினார்.அந்த தற்போது வரை இது ஒரு சாதனையாக உள்ளது. அடுத்த ஆண்டு அவர் ஒரு மட்டையாளரக அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், கேப்டன் பில் ஓ ரெய்லி தனது இடது கை வழக்கமில்லாச் சுழல் பந்துவ்வீச்சாளரான இவர் குறைந்த திறன் கொண்டவர் என்று முடிவு செய்தார். மேலும் எதிர்கால தேர்வுத் துடுப்பாட்ட பந்துவீச்சில் உலக சாதனை படைத்தவர் ரே லிண்ட்வாலும் அணியில் பந்துவீச்சாளராக இவருக்கு வாய்ப்புகள் இருக்காது என்று குறிப்பிட்டார்.

ஓ'ரெய்லி விரைவாக மோரிஸை மட்டை வரிசையில் 6 வது இடத்திற்கு நகர்த்தினார். சிட்னி பல்கலைக்கழகத்திற்கு எதிராக ஒரு சதம் அடித்த பிறகு, ஓ'ரெய்லி அவரை முன் அறிவிப்பின்றி தொடக்க நிலைக்கு மாற்றினார், அங்கு அவர் துவக்க வீரராக இருந்தார். [4]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Perry (2001), pp. 76–79.
  2. 2.0 2.1 Robinson, p. 212.
  3. Chad Watson, "School reunion – Newcastle Boys' High." The Newcastle Herald, 17 August 2002, p 5
  4. "Wisden 1949 – Arthur Morris". Wisden. 1949. Archived from the original on 6 சனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 21 மே 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்தர்_மோரிஸ்&oldid=2895009" இலிருந்து மீள்விக்கப்பட்டது