ரே லிண்ட்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரேமண்ட் ரஸ்ஸல் லிண்ட்வால் (Raymond Russell Lindwall 3 அக்டோபர் 1921 - 23 ஜூன் 1996) 1946 முதல் 1960 வரை 61 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணியினை பிரதிநிதித்துவப்படுத்திய துடுப்பாட்ட வீரர் ஆவார் . இவர் எல்லா காலத்திற்குமான மிகச்சிறந்த விரைவு வீச்சாளர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். இவர் செயின்ட் ஜார்ஜ் அணிக்காக ரக்பி லீக் கால்பந்து விளையாடியுள்ளார்.[1]2009 ஆம் ஆண்டில், லிண்ட்வால் ஐ.சி.சி துடுப்பாட்ட ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார் . [2]

ஆரம்ப ஆண்டுகளில்[தொகு]

லிண்ட்வால் சிட்னியின் தென்கிழக்கு புறநகர்ப் பகுதியான மாஸ்காட்டில் பிறந்தார். [3] ஐந்து குழந்தைகளில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு ஒரு தங்கை , இரண்டு மூத்த சகோதரிகள் இருந்தனர்.

தனது 11 ஆம் வயதில், லிண்ட்வால் மற்றும் இவரது மூத்த சகோதரர் ஜாக் ஆகியோர் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் 1932–33 ஆஷஸ் தொடரின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் இரண்டாவது நாளில் பார்வையாளர்களாக இருந்தனர்.இந்தப் போட்டியில் ஸ்டான் மெகபே இறுதிவரை ஆட்டமிழக்காமல் 187 ஓட்டங்களை எடுத்தார்.

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

ரக்பி லீக்கில் இருந்து ஓய்வு பெற்ற லிண்ட்வால் , பிரிஸ்பேன் துடுப்பாட்ட அரங்கத்தில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். டான் பிராட்மேனின் தலைமையில் இது இவரது முதல் போட்டி ஆகும். லிண்ட்மேன் பிராட்மனின் ரசிகராக இருந்தார். இவரைப் பற்றி கூறும் போது இவர் நமது அணியில் இருந்தால் அதுவே அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது.ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி 559 ஓட்டங்களுக்கு 7 இழப்புகளை எடுத்திருந்த வேளையில் இவர் களமிறங்கினார்.[4] இவர் 31 பந்துகளில் ஓர் ஓட்டம் எடுத்தார். ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி 645 ஓட்டங்களை எடுத்தது.[5] பின் பந்துவீச்சில் 23 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இழப்பினைக் கைப்பற்றவில்லை. [6] [7] இவர் சின்னம்மை நோயினால் பாதிக்கப்பட்டார்.

போருக்குப் பிந்தைய[தொகு]

குயின்ஸ்லாந்து மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லிண்ட்வால் தனது முதல் தர துடுப்பாட்ட வாழ்க்கையை மீண்டும் தொடங்கினார். [8] விக்டோரியா துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் மலேரியா நோய் இருப்பது கன்டறியப்பட்டது. அந்தப் போட்டியில் நான்கு ஓவர்களை வீசி மூன்று இழப்புகளைக் கைப்பற்றினார்.சிட்னி துடுப்பாட்ட அரங்கத்தில் குயீன்சுலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியின் போது 180 நிமிடங்களில் இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 134 ஓட்டங்களை எடுத்ததார். பின்னர் தெற்கு ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் 77 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 9 இழப்புகளைக் கைப்பற்றினார்.[9]பின்னர் இவர் நியூசவுத் வேல்சு துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார். 1945 ஆம் ஆண்டில் ஆத்திரேலியன் சர்விசஸ் அணிக்கு எதிரான போட்டியின் ஒவ்வொரு ஆட்டப் பகுதியிலும் இவர் மூன்று இழப்புகளை வீழ்த்தியதன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார்.மொத்தமாக அந்தத் தொடரின் முடிவில் இவர் 33 இழப்புகளைக் கைப்பற்றினார்.[10] இந்தத் தொடரில் இவர் சிறப்பாக விளையாடியதன் மூலம் இவர் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவர் தேர்வானார்.1948 ஆம் ஆண்டு வரை நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிக்கான தகுதி வழங்கப்படவில்லை [11]இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா ஏழு அறிமுக வீரர்களை களமிறக்கியது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரே_லிண்ட்வால்&oldid=2881794" இருந்து மீள்விக்கப்பட்டது