ஆனந்த மோகன் சக்ரபர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்த மோகன் சக்ரபர்த்தி
ஆனந்த மோகன் சக்ரபர்த்தி கொல்கத்தா அறிவியல் நகரில், 8 நவம்பர் 2009-ல்
பிறப்பு(1938-04-04)4 ஏப்ரல் 1938
சைந்தியா, மேற்கு வங்காளம், இந்தியா
இறப்பு10 சூலை 2020(2020-07-10) (அகவை 82)[1]
சிக்காகோ, இலினொய், ஐக்கிய நாடுகள்[2]
தேசியம்இந்தியா
துறைநுண்ணுயிரியல்
கல்வி கற்ற இடங்கள்கொல்கத்தா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுமரபணுப் பொறியியல் சூடோமோனசு பாக்டீரியா

ஆனந்த மோகன் சக்ரபர்த்தி (Ananda Mohan Chakrabarty)(வங்காள மொழி: আনন্দমোহন চক্রবর্তী)(4 ஏப்ரல் 1938 - 10 சூலை 2020) என்பவர் இந்திய அமெரிக்க நுண்ணுயிரியலாளர், அறிவியலாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் இயக்கிய பரிணாம வளர்ச்சி மற்றும் ஜெனரல் எல்க்ட்ரிக்கில் பணிபுரியும் போது கணிமி பரிமாற்றத்தைப் பயன்படுத்தி மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட உயிரினத்தை வளர்ப்பதில் இவரது பங்கிற்காக மிகவும் குறிப்பிடத்தக்கவர். இதற்கான காப்புரிமைக்காக டயமண்ட் v. சக்கரபர்தி[3] என்ற முக்கிய உச்ச நீதிமன்ற வழக்குக்கு வழிவகுத்தது, .

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஆனந்த் (பொதுவாக அறிவியலாளர்கள் "அல்" என்று அழைக்கின்றனர்) சக்ரபர்த்தி 4 ஏப்ரல் 1938-ல் சைந்தியாவில் பிறந்தார். இவர் தனது இளங்கலைக் கல்வியின் போது சைந்தியா உயர்நிலைப் பள்ளி, இராமகிருஷ்ணா ம்டத்தின் வித்யாமந்திர் மற்றும் கல்கத்தா தூய சவேரியார் கல்லூரியில் பயின்றார். சக்ரபர்த்தி தனது முனைவர் பட்டத்தினை 1965-ல் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆய்வின் மூலம் பெற்றார்.

அறிவியல் பணி[தொகு]

பேராசிரியர் சக்கரபர்த்தி 1971ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள ஷெனெக்டாடியில் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் பணிபுரியும் போது,[4][5][6][7][8][9] ஒரு புதிய வகை சூடோமோனாசு பாக்டீரியாவை (" எண்ணெய் உண்ணும் பாக்டீரியா") உருவாக்கினார்.[10]

இக்காலத்தில் நான்கு வகையான எண்ணெய்-வளர்சிதை மாற்றப் பாக்டீரியாக்கள் இருப்பதாக அறியப்பட்டது. ஆனால் இவற்றை எண்ணெய் கசிவுக்குள் அறிமுகப்படும்போது, இவை ஒன்றுக்கொன்று போட்டியிட்டு, இவை சிதைக்கும் கச்சா எண்ணெய்யின் அளவைக் கட்டுப்படுத்தின. எண்ணெய்யைச் சிதைப்பதற்குத் தேவையான மரபணுக்கள் கணிமியில் இருப்பதும் இவை பாக்டீரியாக்கள் மத்தியில் மாற்றப்படலாம். கணிமி பரிமாற்றத்திற்குப் பிறகு புற ஊதாக் கதிர் ஒளியுடன் மாற்றப்பட்ட உயிரினத்தைக் கதிர்வீச்சு செய்வதன் மூலம், சக்கரபர்த்தி எண்ணெய்யினை உண்ணும் நான்கு பாக்டீரிய கணிமியின் மரபணுக்களையும் நிலைநிறுத்தி, புதிய, நிலையான, பாக்டீரியா இனத்தை (இப்போது சூடோமோனாஸ் புடிடா என்று அழைக்கிறார்கள்) மரபணு குறுக்கு இணைப்பிற்கான ஒரு முறையின் மூலம் இதனைச் சக்ரபார்த்தி தோற்றுவித்தார். இது முந்தைய நான்கு எண்ணெய் உண்ணும் பாக்டீரியாக்களை விட ஒன்று அல்லது இரண்டு மடங்கு வேகத்தில் எண்ணெய்யை உட்கொள்ளும் திறன் கொண்டது. சக்ரபார்த்தி உருவாக்கிய இந்த "பல கணிமி நீரகக்கரிமம்-சிதைவு சூடோமோனாசு " நுண்ணுயிர், வழக்கமான எண்ணெய் கசிவில் காணப்படும் கைட்ரோகார்பன்களில் மூன்றில் இரண்டு பங்கினை உண்ண முடியும்.

சக்ரபர்த்தி காப்புரிமைக்கு விண்ணப்பித்தபோது இந்தப் பாக்டீரியா சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இது மரபணு மாற்றப்பட்ட உயிரினத்திற்கான முதல் அமெரிக்கக் காப்புரிமை ஆகும். (லூயிசு பாஸ்டரால் காப்புரிமை பெற்ற இரண்டு தூய பாக்டீரிய வளர்ப்பு உட்பட, முன்னர் வாழும் உயிரினங்களுக்கு அமெரிக்கப் பயன்பாட்டுக் காப்புரிமைகள் வழங்கப்பட்டன. சக்ரபர்த்தியின் மரபணு மாற்றியமைக்கப்பட்ட பாக்டீரியத்திற்கு அமெரிக்கக் காப்புரிமை வருவதற்கு முன்பு இங்கிலாந்தில் காப்புரிமை வழங்கப்பட்டது). இவரது காப்புரிமை விண்ணப்பம் காப்புரிமை அலுவலகத்தால் ஏற்றுக்கொள்ள மறுக்கப்பட்டது. ஏனெனில் காப்புரிமை குறியீடு உயிரினங்களின் காப்புரிமைகளைத் தடுக்கும் என்று கருதப்பட்டது. ஐக்கிய நாடுகளின் சுங்கம் மற்றும் காப்புரிமை நீதிமன்றத்தில் சக்கரபர்த்தியின் மேல்முறையீட்டிற்கு ஆதரவான முடிவு கிடைத்தது. இதில்:

...காப்புரிமைச் சட்டத்தின் நோக்கங்களுக்காக நுண்ணுயிரிகள் உயிருடன் உள்ளன என்பது சட்டப்பூர்வ முக்கியத்துவம் இல்லாமல் உள்ளது.

சிட்னி ஏ. டயமண்ட், காப்புரிமைகள் மற்றும் வர்த்தக முத்திரைகள் ஆணையர், பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்ற வழக்கு 17 மார்ச் 1980-ல் வாதிடப்பட்டு 16 சூன் 1980 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த காப்புரிமை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது (டயமண்ட் எதிர் சக்ரபர்த்தி), 5-4 முடிவில், இது தீர்மானித்தபோது:

ஒரு உயிருள்ள, மனிதனால் உருவாக்கப்பட்ட நுண்ணுயிர் என்பது [தலைப்பு 35 U.S.C.] 101-ன் கீழ் காப்புரிமை பெறக்கூடிய பொருளாகும். எதிர்மனுதாரரின், நுண்ணுயிர் அந்தச் சட்டத்திற்குள் "உற்பத்தி" அல்லது "பொருளின் கலவை" ஆகும்.

பேராசிரியர் சக்ரபர்த்தியின் முக்கிய ஆராய்ச்சியானது மரபணு மாற்றப்பட்ட நுண்ணுயிரிகள் மற்றும் பிற உயிர் வடிவங்கள் மீதான பல காப்புரிமைகளுக்கு வழி வகுத்தது, மேலும் இவரைச் சர்வதேச கவனத்திற்குக் கொண்டு வந்தது.[11]

இறுதி பணி[தொகு]

புற்றுநோய் பின்னடைவில் பாக்டீரியா குப்ரெடாநச்சு மற்றும் சைட்டோக்ரோம்களின் பங்கைத் தெளிவுபடுத்துவது மற்றும் கல வட்டம் முன்னேற்றத்தைத் தடுப்பதில் இவரது ஆய்வகம் ஆய்வு செய்தது.[12] புரதங்கள் முன்பு பாக்டீரியா எலக்ட்ரான் போக்குவரத்தில் ஈடுபடுவதாக அறியப்பட்டது. பாக்டீரியா புரதம், அசுரின், சாத்தியமான வேதிச்சிகிச்சை பண்புகளைத் தனிமைப்படுத்தினார். நெய்சீரியா, பிளாஸ்மோடியா மற்றும் அசிடிதியோபாகிலசு பெரோஆக்சிடன்சு உள்ளிட்ட பல நுண்ணுயிரியல் இனங்களை உள்ளடக்குவதற்காக இவர் தனது ஆய்வகத்தின் பணியை விரிவுபடுத்தினார்.[11][13] 2001-ல், பேராசிரியர். சிகாகோவில் உள்ள இல்லினாய்சு பல்கலைக்கழகத்தில் தனது பணியால் உருவாக்கப்பட்ட ஐந்து காப்புரிமைகள் தொடர்பான தனியுரிமை தகவல்களை வைத்திருக்கும் சிடிஜி தெரபியூட்டிக்ஸ்[11][13] (டெலாவேரில் இணைக்கப்பட்டது) என்ற நிறுவனத்தை சக்ரபார்த்தி நிறுவினார். காப்புரிமைகளுக்கான உரிமைகளை இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் கொண்டுள்ளது. ஆனால் சிடிஜி சிகிச்சைக்கான பிரத்தியேக உரிமங்களை வழங்கியுள்ளது.[11]

2008-ல், பேராசிரியர் சக்ரபர்த்தி, குசராத்தின் அகமதாபாத்தில் பதிவுசெய்யப்பட்ட இரண்டாவது உயிரி மருந்து கண்டுபிடிப்பு நிறுவனமான அமிர்தா தெரப்யூட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தை இணைந்து நிறுவினார். இது புற்றுநோய்கள் மற்றும்/அல்லது மனித உடலில் காணப்படும் பாக்டீரியா தயாரிப்புகளிலிருந்து பெறப்பட்ட பிற முக்கிய பொதுச் சுகாதார அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் பயனுள்ள சிகிச்சைகள், தடுப்பூசிகள் மற்றும் நோயறிதல்களை உருவாக்குகிறது.[14] அம்ரிதா தெரபியூட்டிக்ஸ் லிமிடெட் 2008ஆம் ஆண்டின் பிற்பகுதியில் குசராத்து வென்ச்சர் நிதி நிறுவனத்திடமிருந்து ஆரம்ப நிதியுதவியைப் பெற்றது.[15] பின்னர் 2010ஆம் ஆண்டில் உயிர்த்தொழில்நுட்ப தொழிலக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்திய அரசின் உயிர்த்தொழில்நுட்ப துறையிலிருந்து இரண்டு ஆண்டு ஆராய்ச்சி திட்டத்திற்கான மானியத்தைப் பெற்றது.[16]

கல்வி வாழ்க்கை[தொகு]

சக்ரபர்த்தி சிகாகோ மருத்துவக் கல்லூரியில் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் மற்றும் நோயெதிர்ப்புத் துறையில் புகழ்பெற்ற பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்தார்.[13] ஆனந்த சக்ரபர்த்தி நீதிபதிகள், அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் ஆலோசகராக இருந்துள்ளார். மரபணு பொறியியல் மற்றும் உயிர்தொழில்நுட்பவியல் பன்னாட்டு மையத்தை நிறுவ முன்மொழிந்த ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு நிறுவனக் குழுவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக, இவர் அதன் அறிவியல் ஆலோசகர்கள் குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் தேசிய நலக் கழக ஆய்வுப் பிரிவுகளின் உறுப்பினராகவும், தேசிய அறிவியல் கழகத்தின் உயிரியல் வாரியத்தின் உறுப்பினராகவும், தேசிய ஆராய்ச்சி குழுவின் உயிர்த்தொழில்நுட்பவியல் குழுவின் உறுப்பினராகவும் அமெரிக்க அரசாங்கத்திற்காகப் பணியாற்றியுள்ளார்.

சுவீடனின் ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். மிச்சிகன் உயிர்த்தொழில்நுட்ப்பவியல் நிறுவனம், மொன்டானா மாநிலப் பல்கலைக்கழகம், உயிர்ப்படலப் பொறியியல் மையம், மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழக நுண்ணுயிர் சூழலியல் மையம் மற்றும் கனடாவில் உள்ள ஆல்பர்ட்டாவின் கால்கேரியில் உள்ள கனேடிய பாக்டீரியல் நோய்கள் கூட்டமைப்பு போன்ற பல கல்வி நிறுவனங்களின் அறிவியல் ஆலோசனைக் குழுவில் இவர் பணியாற்றியுள்ளார்..சக்ரபர்த்தி பெல்ஜியத்தின் பிரசெல்சில் உள்ள வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பின் தொழில்துறை ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஐன்ஸ்டீன் அறிவியல் நிறுவனம், சுகாதாரம் மற்றும் நீதிமன்றங்களின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். இங்கு இவர் நீதித்துறை கல்வியில் பங்கேற்றார்.

விருது[தொகு]

மரபணு பொறியியல் தொழினுட்பத்தில் இவர் ஆற்றிய பணிக்காக, 2007-ல் இந்திய அரசால் இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[17]

மேற்கோள்கள்[தொகு]

  1. Davey, Neil; Rader, Randall Ray; Chakravarti, Debabrata (January 2021). "Ananda Mohan 'Al' Chakrabarty 1938–2020". Nature Biotechnology 39 (1): 18–19. doi:10.1038/s41587-020-00785-4. 
  2. "Remembering Ananda Mohan Chakrabarty". The School of Molecular and Cellular Biology, University of Illinois Urbana-Champaign. 2 September 2020. பார்க்கப்பட்ட நாள் 4 April 2021.
  3. US Patent 4,259,444
  4. Chakrabarty, AM; Mylroie, JR; Friello, DA; Vacca, JG (1975). "Transformation of Pseudomonas putida and Escherichia coli with plasmid-linked drug-resistance factor DNA". Proceedings of the National Academy of Sciences of the United States of America 72 (9): 3647–51. doi:10.1073/pnas.72.9.3647. பப்மெட்:1103151. Bibcode: 1975PNAS...72.3647C. 
  5. Chakrabarty, AM; Friello, DA (1974). "Dissociation and interaction of individual components of a degradative plasmid aggregate in Pseudomonas". Proceedings of the National Academy of Sciences of the United States of America 71 (9): 3410–4. doi:10.1073/pnas.71.9.3410. பப்மெட்:4530312. Bibcode: 1974PNAS...71.3410C. 
  6. Chakrabarty, AM (1974). "Dissociation of a degradative plasmid aggregate in Pseudomonas". Journal of Bacteriology 118 (3): 815–20. doi:10.1128/JB.118.3.815-820.1974. பப்மெட்:4829926. 
  7. Chakrabarty, AM (1974). "Transcriptional control of the expression of a degradative plasmid in Pseudomonas". Basic Life Sciences 3: 157–65. doi:10.1007/978-1-4613-4529-9_13. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4613-4531-2. பப்மெட்:4823075. 
  8. Shaham, M; Chakrabarty, AM; Gunsalus, IC (1973). "Camphor plasmid-mediated chromosomal transfer in Pseudomonas putida". Journal of Bacteriology 116 (2): 944–9. doi:10.1128/JB.116.2.944-949.1973. பப்மெட்:4745436. 
  9. Rheinwald, JG; Chakrabarty, AM; Gunsalus, IC (1973). "A transmissible plasmid controlling camphor oxidation in Pseudomonas putida". Proceedings of the National Academy of Sciences of the United States of America 70 (3): 885–9. doi:10.1073/pnas.70.3.885. பப்மெட்:4351810. Bibcode: 1973PNAS...70..885R. 
  10. "Environment: Oil-Eating Bug". Time. 22 September 1975. Archived from the original on 21 April 2008. பார்க்கப்பட்ட நாள் 28 September 2009.
  11. 11.0 11.1 11.2 11.3 "Innovation gives you confidence and a respectable position across the globe". The Financial Express. 
  12. "Ananda Chakrabarty". 2006. Archived from the original on 5 October 2009. பார்க்கப்பட்ட நாள் 28 September 2009.
  13. 13.0 13.1 13.2 Plas, Joe Vanden (9 September 2006). "Father of life patents downplays historic role". Wisconsin Technology Network 28 September 2009 இம் மூலத்தில் இருந்து 8 February 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150208094857/http://wtnnews.com/articles/3305/. 
  14. Amritatherapeutics.com
  15. "Gujarat State Biotechnology Mission". Archived from the original on 3 August 2010.
  16. "Biotechnology Industry Partnership Programme (BIPP)". Archived from the original on 3 August 2010.
  17. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_மோகன்_சக்ரபர்த்தி&oldid=3784670" இலிருந்து மீள்விக்கப்பட்டது