மரபணு மாற்றப்பட்ட உயிரினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரபணு மாற்றப்பட்ட உயிரினம் (Genetically Modified Organism) (GMO) எனப்படுவது மரபணு பொறியியல் மூலம் மரபணுக்களை மாற்றி உருவாக்கப்பட்ட உயிரினம் ஆகும். ’இயற்கையாக அல்லாமல் செயற்கையாக ஓர் உயிரினத்தின் மரபணுப் பொருளில் (DNA) மாற்றங்கள் செய்யப்பட்ட உயிரினம்’ என்று உலக சுகாதார அமைப்பு வரையறுக்கிறது.[1] மரபணு மாற்றுவதன் மூலம் விரும்பத்தக்க உயிர் பண்புகளுடன் புதுவகை உயிரினங்களை உருவாக்கலாம். எடுத்துகாட்டு கடலில் கசியும் எண்ணெயை உண்ணும் நுண்ணுயிர். இன்னுமொரு எடுத்துக்காட்டு அதிக விளைச்சல் தரும் கோதுமைப் பயிர்.

மரபணு மாற்றுப் பயிர்[தொகு]

இன்று பயிரடப்படும் பலவகைப் பயிர்கள் மரபணு மாற்றுப் பயிர்கள் தான். குறிப்பாக சோயா, தக்காளி, விதை அற்ற முந்திரி இவ்வாறு மரபணு மாற்றப்பட்டவை. குறைந்த உற்பத்திச் செலவு அல்லது அதிக விளைச்சல் தரக் கூடிய பக்கவிளைவுகள் அற்ற மாற்றுப் பயிர்கள் சந்தையில் வரவேற்பைப் பெறுகின்றன.

மரபணு மாற்றுப் பயிர்கள் மீது விமர்சனங்கள்[தொகு]

மரபணு மாற்றப் பயிர்களை பெரும் நிறுவனங்கள் பரப்பி மரபு வழி வேளாண்மைக்கு குந்தகம் விளைவிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு உண்டு. மேலும் ஒவ்வொரு முறையும் விதைக்க விதைகளை நிறுவனங்களிடம் பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த விதைகளை விவசாயி வேறு யாருக்கும் பகிர முடியாது. இவ்வாறு பொதுவில் இருக்கும் விதைகள் முழுமையாக நிறுவனங்களின் தனிச்சொத்தாக மாறக் கூடிய சாத்தியக்கூறு உண்டு.

மனித உடல்நலத்திற்கு ஏற்படக்கூடிய இடர்கள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன?[தொகு]

இவற்றின் பாதுகாப்பு மதிப்பீடு பின்வரும் விடயங்களை ஆராய்கின்றது:

  • நேரடியான உடல்நல விளைவுகள் (நச்சுத்தன்மை);
  • ஒவ்வாமையைத் தூண்டும் போக்கு (ஒவ்வாமைப்பண்பு);
  • ஊட்டம் அல்லது நச்சுத்தன்மையை உடையதாகக் கருதப்படும் குறிப்பிட்ட பகுதிகள்;
  • உட்செருகப்பட்ட மரபணுவின் நிலைத்தன்மை;
  • மரபணு மாற்றத்தால் விளைந்த ஊட்டச்சத்து விளைவுகள்;
  • மரபணு உட்செருகலால் விளையக்கூடிய வேறு எதிர்பாராத விளைவுகள்.[1]

சுற்றுச் சூழலில் ஏற்படுத்தும் பாதிப்புகள்[தொகு]

  • மரபணுமாற்றப்பட்ட உயிரிணத்திலிருந்து மரபணுக்கள் மகரந்தத்தின் வழியாக த்ண்ணுடைய சார்ந்த இணங்களை முற்றிலுமாக அழிக்கும் திறன் கொண்டது

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 WHO

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]