ஆதிரா (தொலைக்காட்சித் தொடர்)
Appearance
ஆதிரா | |
---|---|
வகை | பரபரப்பூட்டும் திகில் மர்மம் |
திரைக்கதை | பாஸ்கர் சக்தி |
இயக்கம் | சி.ஜே.பாஸ்கர் (1-101) பிஜு வர்கீஸ் (102-313) |
நடிப்பு | ஸ்ரீ வாணி ஜெய் தனுஷ் அஞ்சு அரவிந்த் சாருதா கண்மணி |
முகப்பு இசை | தினா (தலைப்பு பாடல்) கிரண் (பின்னணி பாடல்) |
முகப்பிசை | ஆ தி ரா (பாடகர்) சின்மயி தினா யுகபாரதி (பாடல்) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 313 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ்நாடு கேரளா[1] |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | சினி டைம்ஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 30 மார்ச்சு 2015 24 சூன் 2016 | –
Chronology | |
முன்னர் | சக்தி |
ஆதிரா என்பது சன் தொலைக்காட்சியில் மார்ச்சு 30, 2015 முதல் சூன் 24, 2016 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி, 313 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற பரபரப்பூட்டும் திகில் மர்மம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[2]
இந்த தொடரை சினி டைம்ஸ் தயாரிக்க, சி.ஜே.பாஸ்கர் பிஜு வர்கீஸ் மற்றும் ஆகியோர் இணைந்து இயக்க, ஸ்ரீ வாணி, ஜெய் தனுஷ், சாருதா, கண்மணி, சக்கரவர்த்தி, பூபதி, அஞ்சு அரவிந்த், பாலா சிங் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
கதை சுருக்கம்
[தொகு]நீலவேணி என்ற பெண், ஜமீன் குடும்பத்தை பழிவாங்க ஆவி அலைவது பற்றிய கதை. அவள் வேங்கையூரில் உள்ள ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவள். கிளியனூர் ஜமீன் குடும்பத்தின் முழு பரம்பரையையும் அழிக்க சபதம் செய்தாள். ஆவிக்குரிய சிறுவனான சிட்டி பாபுவின் உதவியுடன் அவள் இதைச் செய்கிறாள்.
சர்வதேச ஒளிபரப்பு
[தொகு]- இந்த தொடரை சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளிலும் ஒளிபரப்பானது.
- இந்த தொடரின் அத்தியாயங்கள் திரு தொலைக்காட்சி என்ற யூடியூப் இணையம் அலைவரிசை மூலமாகவும் பார்க்க முடியும்.
- இந்த தொடர் இலங்கையில் உள்ள தமிழ் தொலைக்காட்சி சேவையான சக்தி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "C J Bhaskar go Kerala for Adhira serial shoot". dinamalar.com.
- ↑ "ஆதிரா தொடர் நிறைவு பெறுகிறது". dinamalar.com.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் பழிவாங்குதல் குறித்தான தொலைக்காட்சி தொடர்கள்
- தமிழ் திகில் புனைவு தொலைக்காட்சி தொடர்கள்
- தமிழ் பரபரப்பூட்டும் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழ் மர்ம தொலைக்காட்சி தொடர்கள்
- 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2015 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2016 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்