உள்ளடக்கத்துக்குச் செல்

ஆஃபினியம் கார்போநைட்ரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஃபினியம் கார்போநைட்ரைடு
இனங்காட்டிகள்
InChI
 • InChI=1S/C.2Hf.N
  Key: MANOWAVKGDAAGH-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
 • [Hf].[Hf].[C].[N]
பண்புகள்
CHf2N
வாய்ப்பாட்டு எடை 204.51 கி/மோல்[1]
தோற்றம் கருப்பு நிற நெடியற்ற தூள்
அடர்த்தி 12.65–13.073 கி/செ.மீ3[2]
உருகுநிலை 4,110 °C (7,430 °F; 4,380 K)[3]
கரையாது
வெப்பக் கடத்துத்திறன் 19–24 வாட்டு மீ−1கெ−1[2]
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம் (படிக முறை), cF8
புறவெளித் தொகுதி Fm3m, No. 225
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஆஃபினியம் கார்போநைட்ரைடு (Hafnium carbonitride) என்பது Hf2CN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆஃபினியம், கார்பன், நைட்ரசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இந்த அதி உயர் வெப்பநிலை பீங்கான் கலப்பு எதிர் மின்னயனிச் சேர்மம் உருவாகிறது.

மூலக்கூறு இயக்கவியல் கணக்கீடுகள் HfCN (குறிப்பாக HfC0.75N0.22 கட்டம்) 4,110 ± 62 °செல்சியசு (4,048–4,172 °செல்சியசு, 7,318–7,542 °பாரங்கீட்டு, 4,43 °பாரங்கீட்டு, 4,321–4,445 கெல்வின்) கொதிநிலையை கொண்டிருப்பதாக கூறுகிறது.[3] இது எந்தப் பொருளுக்குமான கொதிநிலையை விட மிகவும் அதிகமாகும்.[3][4][5] செயற்கை நரம்பியல் வலையமைப்பு இயந்திரக் கற்றலை அடிப்படையாகக் கொண்ட மற்றொரு அணுகுமுறையும் இதேபோன்ற அளவுகளையே சுட்டிக் காட்டியது. HfC0.76N0.24.[3] 2020 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனையும் 4,000 °செல்சியசு (7,230 °பாரங்கீட்டு; 4,270 கெல்வின்) என குறிப்பிட்டு 2015 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட அணுவியல் உருவகப்படுத்துதல் முறை மூலம் செய்யப்பட்ட முந்தைய கணிப்புகளை உறுதிப்படுத்தும் உருகுநிலையை உறுதி செய்துள்ளது.[6]

பண்புகள்[தொகு]

HfCxN1−x பின்வரும் பண்புகளை உடையதாக மதிப்பிடப்பட்டது

 • வெப்பக் கடத்துதிறன்
  • 19–24 W·m−1·K−1 அறை வெப்பநிலையில்,
  • 32–39 W·m−1·K−1 உயர்வெப்பநிலை மற்றும் அதிகரித்த நைட்ரசன் இருப்பு.
 • மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன்: (149×104)–(213×104) Ω−1 மீ−1
 • நெகிழ்வெல்லை: 2000 பாகை செல்சியசு (3630 பாரங்கீட்டு, 2270 கெல்வின்)
 • இணைவு வெப்பம்:150கிலோயூல்/மோல் (36கிலோகலோரி/மோல்)
 • வளைவு வலிமை:
  • 638 ± 28 மெகா பாசுக்கல் அறை வெப்பநிலையில்,
  • 324 மெகா பாசுக்கல் 1000 பாகை செல்சியசு வெப்பநிலையில்,
  • 139 மெகா பாசுக்கல் 1600 பாகை செல்சியசு வெப்பநிலையில்,
  • 100 மெகா பாசுக்கல் 2000 பாகை செல்சியசு வெப்பநிலையில்,
 • முறிவுக்கடினத்தன்மை:6.73 ± 0.07 மெகாபாசுக்கல் மீ1/2[a], 4.7 ± 0.3 மெகாபாசுக்கல் மீ1/2[b][4]
 • விக்கர்சு கடினத்தன்மை:19.08 கிகாபாசுக்கல் (2,767,000 சதுர அங்குலத்திற்கு பவுண்டுகள்), 21.3 ± 0.55 கிகாபாசுக்கல் (3,090,000 சதுர அங்குலத்திற்கு பவுண்டுகள்) [b][4]
 1. For HfC0.3N0.7
 2. 2.0 2.1 For HfC0.5N0.35

மேற்கோள்கள்[தொகு]

 1. "Hafnium Carbonitride".
 2. 2.0 2.1 Zhang, Xintao; Li, Xingchao; Zuo, Jun; Luo, Ruiying; Wang, Jinming; Qian, Yuhai; Li, Meishuan; Xu, Jingjun (2023-02-20). "Characterization of thermophysical and mechanical properties of hafnium carbonitride fabricated by hot pressing sintering" (in en). Journal of Materials Research and Technology (Netherlands: எல்செவியர்) 23: 4432–4443. doi:10.1016/j.jmrt.2023.02.099. பன்னாட்டுத் தர தொடர் எண்:2238-7854. இணையக் கணினி நூலக மையம்:9818302917. 
 3. 3.0 3.1 3.2 3.3 Dai, Yu; Zeng, Fanhao; Liu, Honghao; Gao, Yafang; Yang, Qiaobin; Chen, Meiyan; Huang, Rui; Gu, Yi (2023-10-15). "Controlled nitrogen content synthesis of hafnium carbonitride powders by carbonizing hafnium nitride for enhanced ablation properties" (in en). Ceramics International 49 (20): 33265–33274. doi:10.1016/j.ceramint.2023.08.035. பன்னாட்டுத் தர தொடர் எண்:0272-8842. இணையக் கணினி நூலக மையம்:9997899259. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0272884223022666. 
 4. 4.0 4.1 4.2 Buinevich, V.S.; Nepapushev, A.A.; Moskovskikh, D.O.; Trusov, G.V.; Kuskov, K.V.; Vadchenko, S.G.; Rogachev, A.S.; Mukasyan, A.S. (2020-03-17). "Fabrication of ultra-high-temperature nonstoichiometric hafnium carbonitride via combustion synthesis and spark plasma sintering" (in en). Ceramics International (Elsevier) 46 (10): 16068–16073. doi:10.1016/j.ceramint.2020.03.158. பன்னாட்டுத் தர தொடர் எண்:0272-8842. இணையக் கணினி நூலக மையம்:8596178549. 
 5. Science, The National University of; MISIS, Technology (2020-05-27). "Scientists develop the most heat-resistant material ever created". phys.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-02.
 6. Hong, Qi-Jun; van de Walle, Axel (2015). "Prediction of the material with highest known melting point from ab initio molecular dynamics calculations". Physical Review B 92 (2): 020104. doi:10.1103/PhysRevB.92.020104. பன்னாட்டுத் தர தொடர் எண்:1098-0121. Bibcode: 2015PhRvB..92b0104H.