ஆஃபினியம்(III) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஃபினியம்(III) அயோடைடு
Ball-and-stick model of the unit cell of the crystal structure of hafnium(III) iodide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆஃபினியம் மூவயோடைடு
இனங்காட்டிகள்
13779-73-2 Y
InChI
  • InChI=1S/Hf.3HI/h;3*1H/q+3;;;/p-3
    Key: VAFXHNPAMHBKMS-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 161242838 charge error
SMILES
  • [I-].[I-].[I-].[Hf+3]
பண்புகள்
HfI3
வாய்ப்பாட்டு எடை 559.20 g·mol−1
தோற்றம் கருப்பு நிறப் படிகங்கள்[1]
உருகுநிலை சிதைவடையும்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஆஃபினியம்(III) குளோரைடு
ஆஃபினியம்(III) புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் தைட்டானியம்(III) அயோடைடு
சிர்க்கோனியம்(III) அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஆஃபினியம்(III) அயோடைடு (Hafnium(III) iodide) என்பது HfI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆஃபினியமும் அயோடினும் சேர்ந்து கருப்பு நிறத்தில் ஒரு திண்மமாக இது உருவாகிறது.[2]

தயாரிப்பு[தொகு]

மற்ற குழு 4 மூவாலைடுகள் போலவே, ஆஃப்னியம்(III) அயோடைடைடும் ஆஃபினியம்(IV) அயோடைடை ஆஃபினியம் உலோகத்துடன் சேர்த்து உயர்-வெப்பநிலையில்க ஒடுக்கம் செய்வதன் மூலம் தயாரிக்கலாம். இருப்பினும் முழுமையற்ற வினை மற்றும் அதிகப்படியான உலோகம் போன்ற காரணங்களால் தயாரிக்கப்படும் ஆஃபினியம்(III) அயோடைடு மாசுபடுவது பெரும்பாலும் நிகழ்கிறது.[2]

3 Hf I4 + Hf → 4 Hf I3

உதாரணமாக அலுமினியம் போன்ற மற்ற உலோகங்களை ஒடுக்கும் முகவராகப் பயன்படுத்தப்படலாம். HfI3.2–3.3 மற்றும் Hf I3.0–3.5 ஆகிய விகிதாச்சாரமற்ற அளவுகளில் ஆஃபினியம்(III) அயோடைடு சேர்மம் உருவாகிறது.[3][4]

கட்டமைப்பு மற்றும் பிணைப்பு[தொகு]

ஆஃபினியம்(III) அயோடைடு சேர்மம் சிர்கோனியம்(III) அயோடைடு போன்ற அதே படிக அமைப்பை ஏற்றுக்கொள்கிறது.[5] மேலும், இதன் கட்டமைப்பு β-TiCl3 அமைப்பைப் போலவே உள்ளது.[2] Hf3+ அயனிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட எண்முக இடைவெளிகளில் மூன்றில் ஒரு பகுதியை அறுகோண நெருக்கப் பொதிவு அயோடைடு அயனிகளை இவ்வமைப்பு அடிப்படையாகக் கொண்டதாகும்.[2] இது முகப்-பகிர்வு {HfI6} எண்முகத்தின் இணையான சங்கிலிகளைக் கொண்டுள்ளது.[5]

ஆஃபினியம்(III) அயோடைடு d1 உலோக அயனி Hf3+ அயனிக்கு எதிர்பார்க்கப்படுவதை விட குறைவான காந்தத் தருணத்தைக் கொண்டுள்ளது. எனவே இது புறக்கணிக்க முடியாத Hf-Hf பிணைப்பைக் குறிக்கிறது.[2] Hf-Hf பிரிப்பு முதலில் 3.295 Å அளவில் என்று தெரிவிக்கப்பட்டது.[6] ஆனால் விகிதாச்சாரம் அல்லாத ஆஃபினியம்(III) அயோடைடு பற்றிய ஒரு ஆய்வு குறைந்த சமச்சீர் அமைப்பைக் குறிக்கிறது.[3]

வினைத்திறன்[தொகு]

குளோரைடு மற்றும் புரோமைடைப் போலவே, ஆஃபினியம்(III) அயோடைடும் தண்ணீரை ஒடுக்கும் சக்தி வாய்ந்த ஓர் ஒடுக்கும் முகவராகும். எனவே ஆஃபினியம்(III) அயோடைடின் நீர் தொடர்பான வேதியியல் எதுவும் குறிப்பிடும்படி இல்லை.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. William M. Haynes, தொகுப்பாசிரியர் (2013). CRC Handbook of Chemistry and Physics (93rd ). CRC Press. பக். 4–66. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1466571143. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பக். 965. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  3. 3.0 3.1 Struss, Arthur W.; Corbett, John D. (1969). "Lower halides of hafnium. Nonstoichiometric hafnium triiodide phase". Inorg. Chem. 8 (2): 227–232. doi:10.1021/ic50072a009. 
  4. Clark, R. J. H.; Bradley, D. C.; Thornton, P. (2013). The Chemistry of Titanium, Zirconium and Hafnium Pergamon Texts in Inorganic Chemistry. Elsevier. பக். 432. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4831-5921-8. 
  5. 5.0 5.1 Wells, A. F. (1984). Structural Inorganic Chemistry (5th ). Oxford University Press. பக். 418–419. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-965763-6. https://archive.org/details/structuralinorga0000well_m8i1. 
  6. Dahl, Lawrence F.; Chiang, Tao-I; Seabaugh, Pyrtle W.; Larsen, Edwin M. (1964). "Structural Studies of Zirconium Trihalides and Hafnium Triiodide". Inorg. Chem. 3 (9): 1236–1242. doi:10.1021/ic50019a008. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஃபினியம்(III)_அயோடைடு&oldid=3812473" இலிருந்து மீள்விக்கப்பட்டது