அழகப்பன் நகர்

ஆள்கூறுகள்: 9°53′43″N 78°05′52″E / 9.8954°N 78.0977°E / 9.8954; 78.0977
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அழகப்பன் நகர்
Allhagappan Nagar
புறநகர்ப் பகுதி
அழகப்பன் நகர் Allhagappan Nagar is located in தமிழ் நாடு
அழகப்பன் நகர் Allhagappan Nagar
அழகப்பன் நகர்
Allhagappan Nagar
அழகப்பன் நகர், மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°53′43″N 78°05′52″E / 9.8954°N 78.0977°E / 9.8954; 78.0977
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்182 m (597 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்625003[1]
தொலைபேசி குறியீடு+91452xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, பழங்காநத்தம், மாடக்குளம், ஜெய்ஹிந்த்புரம், சுப்ரமணியபுரம், எல்லிஸ் நகர், டி. வி. எஸ். நகர், பசுமலை, திருப்பரங்குன்றம், கோரிப்பாளையம், செல்லூர் (மதுரை), தல்லாகுளம், மதுரை, அண்ணா நகர், மதுரை, கே. கே. நகர், மதுரை, சிம்மக்கல், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், பாலரெங்காபுரம், அனுப்பானடி, தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர் மற்றும் ஆரப்பாளையம்
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிமதுரை மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிமதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்சு. வெங்கடேசன்
சட்டமன்ற உறுப்பினர்செல்லூர் கே. ராஜூ
இணையதளம்https://madurai.nic.in

அழகப்பன் நகர் (ஆங்கில மொழி: Allhagappan Nagar) என்பது தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 182 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அழகப்பன் நகர் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°53′43″N 78°05′52″E / 9.8954°N 78.0977°E / 9.8954; 78.0977 ஆகும்.

மதுரை, பழங்காநத்தம், மாடக்குளம், ஜெய்ஹிந்த்புரம், சுப்ரமணியபுரம், எல்லிஸ் நகர், டி. வி. எஸ். நகர், பசுமலை, திருப்பரங்குன்றம், கோரிப்பாளையம், செல்லூர் (மதுரை), தல்லாகுளம், மதுரை, அண்ணா நகர், மதுரை, கே. கே. நகர், மதுரை, சிம்மக்கல், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், பாலரெங்காபுரம், அனுப்பானடி, தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர் மற்றும் ஆரப்பாளையம் ஆகியவை அழகப்பன் நகர் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலைக்கு அருகில் அழகப்பன் நகர் பகுதி அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் சாலையிலிருந்து அழகப்பன் நகர் செல்லும் சாலை குறுகலாக இருப்பதால், அச்சாலைகளின் சந்திப்பு போக்குவரத்து நெரிசல் மிக்கதாகக் காணப்படுகிறது.[2]

அழகப்பன் நகர் பகுதியில் சொக்கநாதர் சுவாமியை மூலவராகக் கொண்ட மூவர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று அமையப் பெற்றுள்ளது. மூலவர் சிவலிங்கத்திற்குப் பின்புறம் விஷ்ணு, மீனாட்சி அம்மன் மற்றும் சிவன் ஆகிய மூவரும் (சிவபெருமானுக்கு மீனாட்சியம்மனை திருமணத்திற்காக விஷ்ணு தாரை வார்த்து) காட்சியளிப்பதால் இக்கோயில் மூவர் கோயில் என்றழைக்கப்படுகிறது. மேலும், சரசுவதி, இலட்சுமி மற்றும் பார்வதி ஆகிய மூவர் சன்னதிகளும் இக்கோயிலில் இடம் பெற்றுள்ளன.[3]

அழகப்பன் நகர் பகுதியானது, மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ALAGAPPA NAGAR Pin Code - 625003, Madurai South All Post Office Areas PIN Codes, Search MADURAI Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-26.
  2. "Congestion worsens at Alagappan Nagar junction". The Hindu (in Indian English). 2017-06-06. பார்க்கப்பட்ட நாள் 2023-07-26.
  3. "Moovar Temple : Moovar Moovar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-26.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகப்பன்_நகர்&oldid=3762839" இலிருந்து மீள்விக்கப்பட்டது