ஜெய்ஹிந்த்புரம்
ஜெய்ஹிந்த்புரம் Jaihindpuram | |
---|---|
ஆள்கூறுகள்: 9°54′18″N 78°06′28″E / 9.905100°N 78.107800°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை மாவட்டம் |
ஏற்றம் | 160 m (520 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625 011 |
தொலைபேசி குறியீடு | +91452xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, சிம்மக்கல், கோரிப்பாளையம், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் |
மாநகராட்சி | மதுரை மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | மதுரை மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | சு. வெங்கடேசன் |
சட்டமன்ற உறுப்பினர் | செல்லூர் கே. ராஜூ |
இணையதளம் | https://madurai.nic.in |
ஜெய்ஹிந்த்புரம் (ஆங்கில மொழி: Jaihindpuram) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4][5]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 160 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°54′18″N 78°06′28″E / 9.905100°N 78.107800°E (அதாவது, 9°54'18.4"N, 78°06'28.1"E) ஆகும். மதுரை, சிம்மக்கல், கோரிப்பாளையம், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகியவை ஜெய்ஹிந்த்புரம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
ஜெய்ஹிந்த்புரத்தில் இந்துக்கள் வழிபடும் வீரமாகாளியம்மன் கோயில் ஒன்று உள்ளது.[6] தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பாண்டுரங்கன் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது.[7]
மதுரை அவனியாபுரம் பகுதியில், 2023-ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவின் போது நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட 250 மாடுபிடி வீரர்களில் முதலிடம் வகித்த மாடுபிடி வீரர் விஜய், ஜெய்ஹிந்த்புரத்தைச் சார்ந்தவர்.[8]
ஜெய்ஹிந்த்புரம் பகுதியானது, மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[9] இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் செல்லூர் கே. ராஜூ ஆவார். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tiyākarājan̲, Aru (1992). Mutalamaiccar Mun̲iyammā. Kaṇmaṇip Patippakam.
- ↑ Vināyakamūrtti, A. (1994). Patippuc cintan̲aikaḷ. Pālamurukan̲ Patippakam.
- ↑ Ganeshraj, N. (2018-03-22). Iyarkkaiyai Seerkulaitha 'Aararivu'. Pustaka Digital Media.
- ↑ Mukherjee, Amitava; Agnihotri, V. K. (1993). Environment and Development: Views from the East & the West (in ஆங்கிலம்). Concept Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7022-788-5.
- ↑ Kannan, Padmasani. Letters for All Occasions (in ஆங்கிலம்). Sura Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7254-172-9.
- ↑ சின்னதுரை, அருண் (2022-04-08). "ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் கோயில் பங்குனி உற்சவ திருவிழா-ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்". tamil.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-31.
- ↑ "Arulmigu Pandirengan Temple, Jaihindpuram, Madurai - 625011, Madurai District [TM032496].,pandurengan". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-01.
- ↑ "ஜல்லிக்கட்டில் பரிசுகளை குவிக்கும் மாடுபிடி வீரர் ஜெய்ஹிந்த்புரம் EB விஜய்.. இவரை ஞாபகம் இருக்கா?". News18 Tamil. 2023-01-31. பார்க்கப்பட்ட நாள் 2023-01-31.
- ↑ "மதுரை மாநகராட்சி பகுதியில் - வார்டு வாரியாக சட்டப்பேரவை தொகுதிகள் :". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-01.