அலவாய்மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அலவாய்மலை
Vennandur.jpg.jpg
அலவாய்மலையில் இருந்தது எதிரே பொன்சொரிமலை & கஞ்சமலை
உயர்ந்த இடம்
உயரம்3,000 ft (910 m)
ஆள்கூறு11°28′10.7″N 78°07′10.3″E / 11.469639°N 78.119528°E / 11.469639; 78.119528ஆள்கூறுகள்: 11°28′10.7″N 78°07′10.3″E / 11.469639°N 78.119528°E / 11.469639; 78.119528
Dimensions
நீளம்6.437 km (4.000 mi) N–S
அகலம்4.828 km (3.000 mi) E–W
பரப்பளவு31.08009 km2 (12.00009 sq mi)
Naming
மொழிபெயர்ப்புஅரை வழி மலை (தமிழ்)
புவியியல்
அமைவிடம்வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் & அத்தனூர்
மலைத்தொடர்கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
Biomeமலைக்காடு
Climbing
Easiest routeமாவட்ட முக்கிய சாலை-46, அலவாய்பட்டியில் இருந்து நடை பாதை

அலவாய்மலை (Alavaimalai) [1] என்பது நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூருக்குக் கிழக்கே அமைந்துள்ளதொரு மலையாகும். இம்மலை கொங்கு நாட்டில் உள்ள ஒரு மலையாகும். கொங்கு நாடு என்பது கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர், நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியாகும்.[2]

அலவாய்மலையின் பெயர் காரணம்[தொகு]

  • அலவாய்மலை- அரை+வழி+மலை. அதாவது இம்மலையின் பாதி உயரத்தில் அருள்மிகு ஸ்ரீ சுப்பராயர் முருகன் ஆலையம் அமையப்பெற்றமையால், இம்மலைக்கு அலவாய்மலை என வழங்கப்படுகிறது. மலையின் அடிவாரத்தில் உள்ள ஊர் அலவாய்பட்டி என அழைக்கப்படுகிறது.
  • கொங்கணமலை: கொங்கண சித்தர் நீண்டகாலமாக இங்கே வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இந்த மலைக்கு கொங்கணமலை என்ற பெயரும் உண்டு.

நில அமைப்பு[தொகு]

இம்மலையானது, இந்தியாவின் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் ஒன்று. அலவாய்மலையின் வடக்கே அத்தனூரும், கிழங்கே இராசிபுரமும், மேற்கே வெண்ணந்தூரும்,தெற்கே வையப்பமலையும் அமைந்துள்ளது. அலவாய்மலையின் வடமேற்கே பொன்சொரிமலையும் அதற்கு அப்பால் கஞ்சமலையும் அமைந்துள்ளது. இம்மலையின் தென்கிழக்கே நய்நார்மலை காடு உள்ளது.

வழித்தடம்[தொகு]

  • அலவாய்பட்டியில் இருந்து நடைபயனமாக அல்லது வாகனம் மூலமாக அலவாய்மலைக்கு மேற்கு சரிவின் அடிவாரத்தில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு செல்லலாம். அங்கிருந்து நடந்து முருகன் கோவிலில் வரை செல்லலாம்.
  • இளம்பிள்ளை - ஆட்டையாம்பட்டி - வெண்ணந்தூர் - இராசிபுரம் மாவட்ட முக்கிய சாலை 46 அலவாய்மலையின் வடக்கு சரிவில், அதன் அடிவாரத்தில் அருகே செல்கிறது.

காணப்படும் முக்கிய தாவரங்களும், வனவிலங்குகளும்[தொகு]

இம்மலையில் வேப்ப மரம், புளிய மரம், விளா மரம், எலுமிச்சை மரங்களும் ஆவாரம்பூ தோட்டமும் காணப்படுகிறது. ஆங்காங்கு சீமைக்கருவேல மரமும் காணப்படுகிறது.

இங்கு குரங்குகள், மலைப்பாம்பு, அணில்கள் முதலியன காணப்படுகின்றன. முன்பொரு காலத்தில் இம்மலையின் அருகே நரிகள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது நரிகளை மக்கள் கட்டி வைத்து கல்லால் அடித்துக் கொன்றனர், ஆதலால் அப்பகுதி நரிக்கல் கரடு என அழைக்கப்படுகிறது.[சான்று தேவை] தற்போது குரங்கினங்கள் மிகவும் அழிந்து வரும் தருவாயில் உள்ளது.

தற்பொழுது வனவிலங்குகளின் அழிவிற்கும் காடழிப்பபை தடுப்பதற்கும் வன விரிவாக்க மையத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது. அலவாய்மலையானது அரசு வன இலாகாவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்பொழுது இம்மக்கள் யாரும் வன இலாகாவின் எல்லைக்குள் செல்வதில்லை. வன விரிவாக்க மையம் சில மலைப்பாம்பு குட்டிகளை அலவாய்மலையில் விட்டிருக்கிறது. ஆதலால் பொதுமக்கள் யாரும் வனத்திற்குள் செல்வதில்லை.

முக்கிய இடங்கள்[தொகு]

அலவாய்மலை மலையைச் சுற்றி சுமார் பன்னிரண்டு கோயில்கள் உள்ளன பல நீர்ச்சுனைகள் காணப்படுகின்றன.

அரசின் வன விரிவாக்க மையம், அத்தனூர்[தொகு]

அலவாய்மலை அடிவாரத்தில் வடமேற்கே அத்தனூர் பகுதியில் அரசின் வன விரிவாக்க மையம் உள்ளது. இம்மையத்தின் மூலமாக வேம்பு, சந்தனம், வாழை முதலிய மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.

பிள்ளையார் கோவில்[தொகு]

பிள்ளையார் கோவிலில் இருந்துதான் மலைக்கோவிழுக்கு செல்லும் நடை பாதை ஆரம்பமாகிறது.

அருள்மிகு ஸ்ரீ சுப்பராயர் முருகன் ஆலையம்[தொகு]

இம்மலையின் மேற்கு சரிவில் பாதி உயரத்தில் அருள்மிகு ஸ்ரீ சுப்பராயர் முருகன் ஆலையம் அமையப்பெற்றமையால் இம் மலைக்கு அலவாய்மலை என வழங்கப்படுகிறது.[3] ஆலையத்தில் உள்ள முருகன் கற்சிலை மேற்கு திசை நோக்கி உள்ளது. ஒவ்வொரு அம்மாவாசை நாளன்று மக்கள் முருகனை தரிசிக்க செல்வர். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தமிழ் மாதத்தில் வரும் அனைத்து திங்கட்கிழமை அன்று அலவாய்மலை மேற்கு சரிவில் திருக்கோவில் அடிவாரத்தில் அன்னதானம் மிக விமர்சையாக மதியம் பொது மக்களால் வழங்கப்படும். அது சமயம் சுற்றியுள்ள பல ஊர்களில் இருக்கும் மக்கள் திரளாக வந்தது கலந்துகொள்வர்.

சித்தர் கோவில்[தொகு]

இங்கு சித்தர் பெருமக்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அலவாய்மலை அடிவாரத்தில் வடமேற்கே அத்தனூர் பகுதியில் ஒரு சித்தர் கோவில் உள்ளது.

பெருமாள் கோவில்[தொகு]

அலவாய்மலையில் உள்ள பெருமாள் கோயிலை ஒத்தக்கல் பெருமாள் கோவில் என இம்மக்கள் அழைப்பர். பௌர்ணமி அமாவாசை நாட்களில் மக்கள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வர்.

நீரூற்று[தொகு]

அலவாய்மலைமலையில் சித்தர் கோவில் அருகே ஒரு சிறிய நீரூற்று அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இந்த நீரூற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலவாய்மலை&oldid=3159472" இருந்து மீள்விக்கப்பட்டது