அர்ஜுன் (பாடகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அர்ஜூன் (பாடகர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
அர்ஜுன் குமாரசுவாமி
பிறப்பு 23 செப்டம்பர் 1987
கொழும்பு, இலங்கை
தேசியம் பிரித்தானியர்
பணி நடிகர், பாடகர், பாடலாசிரியர்

அர்ஜுன் குமாரசாமி அல்லது அர்ஜுன் எனும் மேடைப் பெயரால் அறியப்பட்டவர் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ஒரு பாடகராவார். இவர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டதுடன் தனது நான்காம் வயதில் ஐக்கிய இராச்சியத்தில் குடியேறினார். [1]

சிறுவயதிலேயே பல வாத்தியங்களைக் கற்றுக்கொண்ட அர்ஜுன் தனது பதின்ம வயதுக் காலத்தில் பாடல்களைப் பாடுவதிலும் இயற்றுவதிலும் கூடிய கவனம் செலுத்தத்தொடங்கினார். 2011ம் ஆண்டு வெளியாகிய வொய் திஸ் கொலவெறி டி பாடலை மீளாக்கம் செய்ததன் மூலம் பலர் மத்தியில் அறியப்பட்டார். இந்த மீளாக்கம் ஜனவரி 2013 ஆகும் போது சுமார் எட்டு மில்லியன் பார்வைகளைக் கொண்டிருந்தது.

அர்ஜுன் இணைய நாடகம் ஒன்றில் நடிகராவும் நடித்து வருகின்றார். இதைவிட தற்போது அர்ஜுன் தென்னிந்திய இசையமைப்பாளர்களான அனிருத் போன்றவர்களுடன் இணைந்து வணக்கம் சென்னை போன்ற திரைப்படங்களில் பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

உசாத்துணைகள்[தொகு]

  1. "London's R&B Sensation: Arjun". TamilCulture.ca. மூல முகவரியிலிருந்து 31 மார்ச் 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 11 சூலை 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ஜுன்_(பாடகர்)&oldid=2233462" இருந்து மீள்விக்கப்பட்டது