ஜொனிதா காந்தி
Jonita Gandhi | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 23 அக்டோபர் 1989 புது டெல்லி |
தொழில்(கள்) | பாடகர் |
இசைத்துறையில் | 2011– தற்போது வரை |
இணையதளம் | www |
ஜொனிதா காந்தி (மே 23 அக்டோபர் 1989) ஒரு இந்தோ-கனடிய பாடகர். அவர் ஆங்கிலம், இந்தி, தமிழ், பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பாடியுள்ளார்.[1][2][3]
வாழ்க்கை
[தொகு]புது தில்லியைப் பிறப்பிடமாகக் கொண்ட, ஜொனிதா, தன் ஏழு வயதில் கனடா செல்ல நேர்ந்ததுடன், அங்கு டொராண்டோ மற்றும் பிராம்ப்டனில் வாழ்ந்து வந்தார்.[4] அவரது தந்தை ஒரு தொழில்முறை மின்னணுப் பொறியாளர் எனினும், பொழுதுபோக்கு இசைக்கலைஞராக விளங்கியதால், சிறுவயதிலேயே ஜொனிதாவின் திறமையைக் கண்டறிந்து அவரை உற்சாகப்படுத்தி வந்தார். 1995 இல் டொராண்டோவில் நிகழ்ந்த அவரது தந்தையின் நத்தார் இசை நிகழ்வே, ஜொனிதாவின் முதலாவது இசை நிகழ்வாக அமைந்தது. சுகாதார அறிவியல் மற்றும் வணிகத்தில் பட்டப்படிப்பை முடித்த ஜொனிதா, பாடுவதிலேயே அதிக ஆர்வம் காட்டி வந்தார். மேற்கத்திய பாரம்பரிய இசையில் மட்டுமன்றி, இந்துஸ்தானி இசையிலும் அவர் எடுத்து வந்த பயிற்சி அவரது இசை வாழ்க்கையைத் தொடங்க பேருதவி புரிந்தது.[5][6]
பாடகர்
[தொகு]ஜொனிதா காந்தி 17 வயதில் இணையத்தில் பதிவேற்றிய காணொளிகள் அவருக்குப் பெரும்புகழை ஈட்டிக்கொடுத்தது. சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்துடனேயே அவரது திரையுலகப் பயணம் ஆரம்பமானது.[7] தொடர்ச்சியாகப் பல திரைப்படங்களில் பாடிய ஜொனிதா, ஏ.ஆர்.ரகுமானுடன் ஓர் இந்தித் திரைப்படத்தில் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பை அடுத்து, தமிழ்த் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்தார். மணி ரத்னம்' இயக்கிய ஓகே கண்மணி அவரது முதலாவது தமிழ்ப்பாடல் இடம்பெற்ற திரைப்படமாக அமைந்தது.
இசைச் சரிதம்
[தொகு]ஜொனிதா பாடிய முக்கியமான சில பாடல்கள் பட்டியல்
ஆண்டு | பாடல் | படம்/இசைத்தொகுதி | இசையமைப்பாளர் |
---|---|---|---|
2022 | "அரபிக் குத்து" | பீஸ்ட் | அனிருத் ரவிச்சந்திரன் |
2020 | "செல்லம்மா" | டாக்டர் | அனிருத் ரவிச்சந்திரன் |
2017 | "இறைவா" | வேலைக்காரன் | அனிருத் ரவிச்சந்திரன் |
"அழகியே" | காற்று வெளியிடை | ஏ. ஆர். ரகுமான் | |
"கண்ணாடிப்பூவுக்கு" | எனக்கு வாய்த்த அடிமைகள் | சந்தோஷ் தயாநிதி | |
2016 | "இது நாள்" | அச்சம் என்பது மடமையடா | ஏ. ஆர். ரகுமான் |
"மெய் நிகரா" | 24 | ||
2015 | "மெண்டல் மனதில்" | ஓ காதல் கண்மணி | ஏ. ஆர். ரகுமான் |
"டில் சாப்சியா" | கோச்சடையான் (இந்தி) | ||
2013 | "சென்னை எக்ஸ்பிரஸ்" | சென்னை எக்ஸ்பிரஸ் | விஷால் - சேகர் |
குறிப்புகள்
[தொகு]- ↑ "From a YouTube sensation to a Bolly playback, Toronto girl Jonita Gandhi sings to t2". The Telegraph India.com. February 27, 2014. http://www.telegraphindia.com/1140227/jsp/t2/story_18024754.jsp#.U8JsFfl_toR. பார்த்த நாள்: July 13, 2014.
- ↑ "Jonita Gandhi sings on the tunes of AR Rahman in the upcoming Bollywood film 'Highway'". News Wala.com. February 2, 2014. Archived from the original on July 14, 2014. பார்க்கப்பட்ட நாள் July 13, 2014.
- ↑ "Jonita Gandhi". Jonita Gandhi.
- ↑ Panjwani, Radhika (2014-04-16). "Bollywood crooner from Brampton enroute to stardom | BramptonGuardian.com" (in en-CA). BramptonGuardian.com. http://m.bramptonguardian.com/community-story/4468868-bollywood-crooner-from-brampton-enroute-to-stardom.
- ↑ "Jonita Gandhi: Lucky my first Bollywood song for Shah Rukh Khan-starrer". NDTV.com. July 8, 2013. Archived from the original on ஜூலை 12, 2013. பார்க்கப்பட்ட நாள் July 13, 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "A voice that touched Big B’s heart". The Hindu.com. October 21, 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/a-voice-that-touched-big-bs-heart/article4018718.ece. பார்த்த நாள்: July 13, 2014.
- ↑ "My efforts have paid off with 'Highway', says singer Jonita Gandhi". IBN Live.in.com. February 5, 2014. Archived from the original on மார்ச் 7, 2014. பார்க்கப்பட்ட நாள் July 13, 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)