இந்திரஜித் குமாரசுவாமி
இந்திரஜித் குமாரசுவாமி Indrajit Coomaraswamy | |
---|---|
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் | |
பதவியில் 2 சூலை 2016 – 20 திசம்பர் 2019 | |
முன்னையவர் | அர்ஜுனா மகேந்திரன் |
பின்னவர் | டபிள்யூ. டி. லக்சுமன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 ஏப்ரல் 1950 கொழும்பு, இலங்கை |
துணைவர் | தாரா[1] |
உறவுகள் | செல்லப்பா குமாரசுவாமி, ராதிகா குமாரசுவாமி |
பிள்ளைகள் | இம்ரன், அர்ஜுன் |
பெற்றோர் | ராஜேந்திரா குமாரசுவாமி, விஜயமணி |
தொழில் | பொருளியலாளர் |
இந்திரஜித் குமாரசுவாமி (Indrajit Coomaraswamy, பிறப்பு: ஏப்ரல் 3, 1950) இலங்கைத் தமிழ் பொருளியலாளர் ஆவார். இவர் இலங்கை மத்திய வங்கியின் 14-வது ஆளுநராக 2016 முதல் 2019 வரை பணியாற்றினார்.[2] இவர் பொதுநலவாய தலைமைச் செயலக பொருளாதார விவகாரங்களுக்கான முன்னாள் பணிப்பாளராகப் பணியாற்றியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]இந்திரஜித் 1950 ஏப்ரல் 3 இல் கொழும்பு நகரில்,[3][4] ராஜேந்திரா குமாரசுவாமி, விஜயமணி ஆகியோருக்குப் பிறந்தார்.[5][6][7] ராதிகா குமாரசுவாமி இவருடன் உடன்பிறந்தவர்.[5][6] இவரது தந்தை வழி பேரனார் செல்லப்பா குமாரசுவாமி மேலவை உறுப்பினராக இருந்தவர். தாய்வழிப் பேரனார் எஸ். கே. விஜயரத்தினம் நீர்கொழும்பு நகரசபைத் தலைவராக இருந்தவர். விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியை நிறுவியவர்.[5][7][8]
கொழும்பு றோயல் கல்லூரி, இங்கிலாந்து ஹரோ பள்ளி ஆகியவற்றில் கல்வி கற்று பின்னர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து சசெக்சு பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். 1973 முதல்; 1989 வரை இலங்கை மத்திய வங்கியில் பணியாற்றினார். 1990 முதல் 2008 வரை பொதுநலவாய தலைமைச் செயலத்தில் பொருளாதாரப் பிரிவின் பணிப்பாளராகவும், பொதுச் செயலாளர் பிரிவில் துணைப் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.
துடுப்பாட்டம்
[தொகு]1971, 1972 களில் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழக துடுப்பாட்ட அணியில் சேர்ந்து முதல்-தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.[9] அத்துடன் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் ரக்பி அணியிலும் விளையாடினார்.[1] 1974 ஆசியாத் போட்டிகளில் இலங்கை ரக்பி அணிக்குத் தலைமை தாங்கினார்.[1] கொழும்பு தமிழ் யூனியன் கழகத்திற்காகவும் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.[8][10][11]
குடும்பம்
[தொகு]குமாரசுவாமி தாரா டி பொன்சேகா என்பவரைத் திருமணம் புரிந்தார்.[11] இவர்களுக்கு இம்ரன், அர்ஜுன் என இரு பிள்ளைகள் உள்ளனர்.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "The man who led Sri Lanka to its rugby glory". சண்டே டைம்சு. 5 செப்டம்பர் 2004. பார்க்கப்பட்ட நாள் 2 சூலை 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Dr. Indrajit Coomaraswamy new Central Bank Governor". டெய்லி நியூஸ். 2 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 2 சூலை 2016.
- ↑ "Indrajit Coomaraswamy". ESPNcricinfo.
- ↑ "Indrajit Coomaraswamy". The Cricketer. Archived from the original on 2016-08-17. பார்க்கப்பட்ட நாள் 2016-07-04.
- ↑ 5.0 5.1 5.2 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon (PDF). p. 43.
- ↑ 6.0 6.1 Weerakoon, Bradman (31 சூலை 2005). "Remembering Raju Coomaraswamy". தி ஐலண்டு (இலங்கை). http://www.island.lk/2005/07/31/features12.html.
- ↑ 7.0 7.1 Balachandran, P. K. (2 சூலை 2016). "Coomaraswamy is compromise choice for Lankan Central Bank Governorship". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/world/Coomaraswamy-is-compromise-choice-for-Lankan-Central-Bank-Governorship/2016/07/02/article3510551.ece1.
- ↑ 8.0 8.1 Ladduwahetty, Ravi (13 டிசம்பர் 2012). "‘Dr Manmohan Singh was committed to non-interference with Asian economies’". தி ஐலண்டு (இலங்கை) இம் மூலத்தில் இருந்து 2018-12-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181201135217/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=68154.
- ↑ Indrajit Coomaraswamy, கிரிக்கின்ஃபோ
- ↑ Wijesekera, Bernie (4 செப்டம்பர் 2005). "Indrajith still a humble soul". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/050904/sports/11.html.
- ↑ 11.0 11.1 11.2 David, Anusha (19 March 2015). "Indrajit Coomaraswamy". life.lk. http://www.life.lk/article/11408/indrajit-coomaraswamy.