நூதன முரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொச்சி நிகழ்ச்சியொன்றில் நூதன முரசுத் தொகுப்புடன் சிவமணி

நூதன முரசு அல்லது டிரம்சு (drum) தாளக்கருவிகளில் ஒன்றாகும். இது தோற்கருவிகளின் வகைப்பாட்டில் அடங்கும்.[1] முரசுகளில் குறைந்தது ஒருபுறமாவது ஒலியெழுப்பும் தோற்பரப்பு, முரசுத்தலை இருக்கும். இது ஓர் கூட்டின் மீது இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். இதன்மீது வாசிப்பவர் தமது கைகளைக் கொண்டோ முரசுக் கம்பு கொண்டோ அடித்து ஒலி எழுப்புவார். பொதுவாக ஒத்ததிர்வு கலன் முரசின் கீழ்ப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும். இது முரசுத்தலையை விட சற்றே குறைந்த கட்டையில் சுருதி கூட்டப்பட்டிருக்கும். தவிரவும் வந்திரதம் போன்று கைகளைத் தேய்த்து ஒலி எழுப்பும் வேறு சில திறன்களும் பயன்படுத்தப்படுகின்றன. முரசுகளும் பேரிகைகளும் உலகின் மிகவும் தொன்மையான இசைக் கருவிகளாகும். பல நூற்றாண்டுகளாக இவற்றின் அடிப்படை வடிவமைப்பு மாறவில்லை.[1]

கண்ணி முரசு (snare drum) எனப்படும் வகை முரசு

நூதனமுரசுகள் பாட்டொன்றில் தாளத்தை (நேர இடைவெளியை) பராமரிக்க இசைக்கப்படுகின்றன. காட்டாக ஒரு பாட்டை வேகமாகவோ மெதுவாகவோ பாட முரசுகள் வேகமாகவோ மெதுவாகவோ இசைக்கப்படுகின்றன. முரசு ஒரு தாள இசைக்கருவி. அதாவது அடிப்பதால் எழும் ஒலியைக் கொண்டது. ஜால்ராக்களும் கோவில்மணிகளும் கூட தாளயிசைக் கருவிகளே. மரக்கட்டை கூட தாளமிட ஏதுவாகும்.

முரசுகள் தனியாகவும் பல்வேறு முரசுகளின் கூட்டணியாகவும் இசைக்கப்படுவதுண்டு. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டதாக பாங்கோ முரசு அல்லது டிம்பனி வாசிக்கப்படுகின்றன. தற்கால விபுணவியில் பலவகை முரசுகளும் ஜால்ராக்களும் ஒருங்கே அமைக்கப்பட்டு ஒரே கலைஞரால் வாசிக்கப்படுகின்றன. இவை பாப்பிசை, ராக், ஜாஸ், நாடு, புளூஸ், மற்றும் திரையிசையில் மிகவும் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Grove, George (January 2001). Stanley Sadie. ed. The New Grove Encyclopædia of Music and Musicians (2nd ed.). Grove's Dictionaries of Music. பக். Volume 5, pp638–649. ISBN 1-56159-239-0.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "grove" defined multiple times with different content
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூதன_முரசு&oldid=1727692" இருந்து மீள்விக்கப்பட்டது