அமீஷ் சாஹிபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமீஷ் மகேஷ்பாய் சாஹிபா (Amiesh Maheshbhai Saheba) (பிறப்பு 15 நவம்பர் 1959, அகமதாபாத்) ஓர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரரும் துடுப்பாட்ட நடுவரும் ஆவார்.குசராத் மாநிலத் துடுப்பாட்ட அணியில் மட்டையாளராக விளையாடியுள்ளார்.

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் நடுவர்கள் குழாமில் சேர்க்கப்பட்டு தனது முதல் பணியை தேர்வுத் துடுப்பாட்டமொன்றில் 12 திசம்பர் 2008ஆம் ஆண்டு செய்தார்.

2008ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங்கிற்கும் ஸ்ரீசாந்த்திற்குமிடையே ஏற்பட்ட சர்ச்சையில் கருத்துக் கூறியதற்காக இவருக்கு 48 மணிநேர அவகாசமளித்து இரு ஆட்டங்கள் இடைநீக்க எச்சரிக்கையுடன் காரணம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்பட்டது.[1]

இதுவரை 44 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களிலும் மூன்று இருபது20 ஆட்டங்களிலும் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டங்களிலும் செயலாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

கிரிக்கின்ஃபோ விவரம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீஷ்_சாஹிபா&oldid=2178097" இலிருந்து மீள்விக்கப்பட்டது