உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னாட்டு நடுவர்கள் மற்றும் முறையீடு நடுவர்கள் குழாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்னாட்டு நடுவர்கள் மற்றும் முறையீடு நடுவர்கள் குழாம் (International Panel of ICC Umpires and Referees) 1994ஆம் ஆண்டு பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் ஒவ்வொரு தேர்வுத் துடுப்பாட்டத்திலும் ஓரு நடுநிலை நடுவர் செயலாற்றுமாறிருக்க அமைக்கப்பட்டது. இது 1992/93 ஆண்டுகளில் நடத்தப்பட்ட சோதனை முயற்சியின் வெற்றியைத் தொடர்ந்து அமலாக்கப்பட்டது.[1] இந்தக் குழாம் பத்து தேர்வுத் துடுப்பாட்ட நாடுகளின் துடுப்பாட்ட வாரியங்கள் ஒவ்வொன்றும் நியமிக்கும் நடுவர்களால் நிரப்பப் பட்டது. 2002ஆம் ஆண்டுமுதல் இதன் பணிக்கு உதவியாக பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழு அங்கத்தினர்களும் செயலாற்றுகின்றனர்.

பன்னாட்டுக் குழாமின் நடுவர்கள் உள்நாட்டு ஒருநாள் துடுப்பாட்டங்களில் செயலாற்றுவர்; வேலைப்பளு மிகும்போதெல்லாம் தேர்வுத் துடுப்பாட்டங்களிலும் வெளிநாட்டில் நிகழும் ஒருநாள் துடுப்பாட்டங்களிலும் மேற்தட்டு நடுவர்களுக்கு துணையாக செயலாற்றுவர்.[2][3] ஒவ்வொரு முழு அங்கத்தினர் நாட்டு துடுப்பாட்ட வாரியமும் இரண்டு ஆட்ட நடுவர்களையும் ஓர் முறையீடு நடுவரையும் குழாமிற்கு நியமிக்கிறது.


மேற்கோள்கள்[தொகு]

  1. Cricket: Bird launches initiative, The Independent, 14 January 1994
  2. "ICC - Match Officials". Archived from the original on 2009-02-01. பார்க்கப்பட்ட நாள் 2011-01-18.
  3. "International Panel Duties". Archived from the original on 2007-05-26. பார்க்கப்பட்ட நாள் 2011-01-18.

மேலும் பார்க்க[தொகு]