அபோசினேசியே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபோசினேசியே
Apocynum cannabinum
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
Apocynaceae

மாதிரிப் பேரினம்
Apocynum
L.
வேறு பெயர்கள்

அபோசினேசியே (Apocynaceae) என்பது பூக்கும் தாவரக் குடும்பமாகும். இக்குடும்பத்தில் மரங்கள், புதர்கள், மூலிகைகள், தண்டு சதைப்பற்றுள்ள செடிகள், கொடிகள் ஆகியவை அடங்கும். இது பொதுவாக டாக்பேன் குடும்பம் என்று அழைக்கப்படுகிறது,[1] ஏனெனில் சில டாக்பேன்கள் நாயிக்கு நஞ்சாக பயன்படுத்தப்பட்டது  ] இந்த குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்கள் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆத்திரேலியா, அமெரிக்காக்கள் வெப்பமண்டலங்கள் அல்லது துணை வெப்பமண்டலங்களை பூர்வீகமாகக் கொண்டவை.[1] முன்பு தனி குடும்பமாக கருதப்பட்ட அஸ்க்லெபியாடேசி (Asclepiadaceae)[2] (தற்போது அஸ்க்லெபியாடோய்டே என அழைக்கப்படுகிறது) அபோசினேசியேயின் துணைக் குடும்பமாகக் கருதப்படுகிறது. இது 348 பேரினங்களைக் கொண்டுள்ளது.

இக்குடும்பத்தைச் சேர்ந்த பல இனங்கள் வெப்பமண்டல காடுகளில் காணப்படும் உயரமான மரங்கள், ஆனால் சில வெப்பமண்டல உலர் சூழலில் வளரும். மேலும் மிதவெப்ப மண்டலத்தில் பல்லாண்டு தாவரங்கள் காணப்படுகின்றன. இந்த தாவரங்கள் பலவற்றில் பால் உண்டு. மேலும் பல இனங்களில் உள்ள பாலானது நஞ்சாக இருக்கும்.

விளக்கம்[தொகு]

ஏழிலைப்பாலை, இலைகளின் அமைப்பு

வளர்ச்சி முறை[தொகு]

இந்தக் குடும்பத்தில் ஆண்டுத் தாவரங்கள், பல்லாண்டுத் தாவரங்கள், தண்டு சதைப்பற்றுள்ள தாவரங்கள், புதர்கள், மரங்கள், கொடிகள் ஆகியவை அடங்கும்.[1][3] இந்தத் தாவரங்களை வெட்டும் போது பெரும்பாலானவற்றில் பால் வெளியேற்றும்.[4]

இலைகளும் தண்டுகளும்[தொகு]

இவற்றின் இலைகள் தண்டில் எதிர் அடுக்கில் [3] இருக்கும். சிலவற்றில் ஒன்றுவிட்ட அடுக்கும் உண்டு. அவை தனித்தவை; முழு விளிம்புள்ளவை. பொதுவாக ஜோடிகளாகவும் ( அரிதாக வட்ட அமைவுகளில் ) தோன்றும்.[1] ஜோடியாக இருக்கும் போது, இலைகள் தண்டின் எதிர் பக்கங்களில் இருக்கின்றன. ஒவ்வொரு ஜோடியும் அதன் கீழே உள்ள ஜோடிக்கு 90° சுழற்றப்பட்ட கோணத்தில் காணப்படும்.

இலைகளுக்கு இலையடிச் செதில்கள் இல்லை, அல்லது இலையடிச் செதில்கள் சிறியதாகவும் சில சமயங்களில் விரல்களைப் போலவும் இருக்கும்.[3]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Endress ME, Bruyns PV (2000). "A revised classification of the Apocynaceae s.l.". The Botanical Review 66 (1): 1–56. doi:10.1007/BF02857781. http://doc.rero.ch/record/321598/files/12229_2008_Article_BF02857781.pdf. 
  2. "Asclepiadaceae". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
    "Asclepiadaceae". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.
  3. 3.0 3.1 3.2 Apocynaceae, Thomas Rosatti, Jepson Herbarium
  4. "Apocynaceae usually have copious latex and the leaves are often opposite and with colleters...", retrieved 3/10/18 from ANGIOSPERM PHYLOGENY WEBSITE, version 13 http://www.mobot.org/MOBOT/Research/APweb/

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபோசினேசியே&oldid=3927122" இலிருந்து மீள்விக்கப்பட்டது