அதா சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதா சர்மா
லேக்மெ பேஷன் வாரம், 2014 இல் அதா சர்மா
பிறப்புமும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2008–தற்போது வரை
சொந்த ஊர்பாலக்காடு, கேரளம், இந்தியா

அதா சர்மா (Adah Sharma) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பான்மையாக இந்தி மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது பள்ளிப் படிப்பை முடித்த பிறகு 2008 ஆம் ஆண்டில் வெளியான 1920 எனும் பாலிவுட் திகில் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார். இந்தப் படம் வணிக ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் தீவிர உணர்ச்சியினால் ஆட்பட்டிருக்கும் ஒரு பெண்ணாக நடித்திருந்தார். இவரின் நடிப்பு விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. இந்தத் திரைப்படத்திற்காகச் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு இவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.[1][2] பிறகு 2014 ஆம் ஆண்டில் ஹசீ தோ பசீ எனும் காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படமும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின் ஆறு தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்தார். அதில் ஹார்ட் அட்டாக் (2014), சன் ஆஃப் சத்தியமூர்த்தி (2015), சுப்பிரமணியம் ஃபார் சேல் (சுப்பிரமணியன் விற்பனைக்கு (2015), கரம் (2016), சனம் (2016) ஆகிய ஐந்தும் திரைப்படங்கள் தெலுங்குத் திரைப்படங்களாகும். மேலும் ரானா விக்ரமா (2015) எனும் கன்னடத் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றதோடு இவரின் நடிப்பு விமர்சகர்களால் பாராட்டு கிடைத்தது.

தெலுங்குத் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக ஆனார்.[3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

அடா ஷர்மா தமிழ் பிராமணர் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். பின் மகாராட்டிரத்தில் மும்பையில் வாழ்ந்து வந்தார்.[4] இவரின் தந்தை எஸ். எல். ஷர்மா மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் வணிக கப்பலின் தலைவராகப் பணிபுரிந்தவர். இவரின் தாய் பாலக்காடு எல்லை அருகே உள்ள நாட்டுப்புறாவில் பிறந்தவர். இவர் ஒரு மரபார்ந்த நடனக் கலைஞர் ஆவார்.[4] இவர் தனது பள்ளிப் படிப்பை மும்பையில் முடித்தார். இவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே நடிகையாக வேண்டும் என விரும்பினார். ஆனால் இவர்களின் பெற்றோர்கள் பள்ளிப்படிப்பை முடிக்க அறிவுறுத்தினர். இவர் பன்னிரண்டாம் வகுப்பிற்கு பின் படிப்பதை நிறுத்திக் கொண்டார்.[5]

சர்மா ஒரு சீருடற்பயிற்சியாளர் ஆவார். தனது மூன்றாம் வயதிலிருந்தே நடனம் ஆடி வருகிறார். இவர் மும்பையில் உள்ள நடராஜ் கோபி கிருஷ்ணா கதக் நடன அகாதமியில் கதக் நடனத்தில் பட்டம் பெற்றார்.[3][6] மேலும் இவர் அமெரிக்க ஐக்கிய நாட்டில் நான்கு மாதங்கள் சல்சா நடனம் கற்றுக் கொண்டார். மேலும் ஜாஸ், பாலே, இடை ஆட்டம் போன்ற நடனங்களையும் கற்றுக் கொண்டார்.[7]

தொழில் வாழ்க்கை[தொகு]

திரைப்படங்களில் நடிப்பதற்காக மும்பையில் பல கலைக்காணலில் சர்மா கலந்துகொண்டார். ஆனால் அவரின் சுருள் முடிகளுக்காகவோ அல்லது அவர் மிக இளவயது தோற்றம் கொண்டிருந்த காரணத்தினாலோ அவர் நிராகரிக்கப்பட்டார்.[8] பின் 2008 ஆம் ஆண்டில் விக்ரம் பத் இயக்கிய பாலிவுட் திரைப்படமான 1920 எனும் திகில் திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாப்பத்திரத்திற்குத் தேர்வானார். இதில் ரஜ்னீஷ் துக்கலுடன் இணைந்து நடித்தார். இந்தத் திரைப்படத்தில் தீவிர உணர்ச்சியினால் ஆட்பட்டிருக்கும் ஒரு பெண்ணாக நடித்திருந்தார். விமர்சகர்கள் இவரின் சிறப்பான நடிப்பைப் பாராட்டினர். தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் நிகத் கஸ்மி, சர்மா மனநிறைவு தரும் வகையில் நடித்துள்ளார் எனத் தெரிவித்தார்.[9] முதல் திரைப்படத்திலேயே அற்புதமான நடிப்பை ஷர்மா வெளிப்படுத்தியுள்ளார் என அசோக் நாயக் தெரிவித்தார்.[10] இந்தத் திரைப்படத்திற்காக ஐம்பத்தி நான்காவது பிலிம்பேர் விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டார்.

சான்றுகள்[தொகு]

  1. "Movie Review: 1920 | Bollywood.com : Entertainment news, movie, music and fashion reviews". Bollywood.com. 2013-12-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-03-20 அன்று பார்க்கப்பட்டது.
  2. Nikhat Kazmi (2008-09-12). "1920 - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. 2013-12-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-03-20 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  3. 3.0 3.1 M. Srinivas. "'I am luckier than my contemporaries'". The Hindu. 12 May 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 "Adah Sharma talks about her roots". The Times of India. 12 May 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. "I have roots in Kerala: Adah Sharma". The Times of India. 12 May 2015 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Interview with Adah Sharma". The Times of India. 12 May 2015 அன்று பார்க்கப்பட்டது.
  7. "The success of Hasee toh phasee has put 1920 girl Adah Sharma firmly in the spotlight". The Telegraph. 12 May 2015 அன்று பார்க்கப்பட்டது.
  8. "A chilly love yarn". The Hindu. 12 May 2015 அன்று பார்க்கப்பட்டது.
  9. Nikhat Kazmi (2008-09-12). "1920 - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. 2013-12-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-03-20 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  10. "1920 Review". Nowrunning. 12 September 2008. 18 மே 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 May 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதா_சர்மா&oldid=3540953" இருந்து மீள்விக்கப்பட்டது