அக்மெல்லா ஓலரேசியா
அக்மெல்லா ஓலரேசியா | |
---|---|
முழுத்தாவரம் (செடி) | |
பூக்கள் | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | தாவரம்
|
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | சூரியகாந்தி வரிசை
|
குடும்பம்: | சூரியகாந்திக் குடும்பம்
|
இனக்குழு: | |
பேரினம்: | |
இனம்: | A. oleracea
|
இருசொற் பெயரீடு | |
Acmella oleracea (L.) R.K.Jansen | |
வேறு பெயர்கள் [1] | |
|
அக்மெல்லா ஓலரேசியா (தாவரவியல் பெயர்: Acmella oleracea[2], ஆங்கிலம்: toothache plant, Szechuan buttons,[3] paracress, jambu,[4] buzz buttons,[5] tingflowers and electric daisy.[6]) என்பது பூக்கும் தாவரமாகும். இது “சூரியகாந்திக் குடும்பம்” என்ற குடும்பத்தின் கீழ் வகைப் படுத்தப்பட்டுள்ளது. இக்குடும்பத்தில் மொத்தம் 1704 பேரினங்கள் உள்ளன. அதிலுள்ள பேரினமான “அக்மெல்லா” என்பதில் 35 இனங்கள் உள்ளன. அவற்றில் ஒரு இனமாக, இதன் பெயர் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாவரயினத்தினை, லின்னேயசு ஓரளவு உரைத்தார். பின்பு, தெளிவாகக் கண்டறிந்தவர் 'இராபர்டு கே. சன்சென்' (Jansen, Robert K. (1954-)[7]) ஆவார்.
வாழிடம்
[தொகு]இதன் பிறப்பிடம் பிரேசிலின் தென்பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், அறிமுக இடங்கள் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா கண்டங்களிலும், இந்தியா நாட்டிலும் பரவியுள்ளன.
வளரியல்புகள்
[தொகு]இது செடி ஆகும். இதன் தண்டுகள் தரையோடு அல்லது நிமிர்ந்து இருக்கின்றன. தண்டின் நிறம் பெரும்பாலும் சிவப்பு நிறமுடனும், முடி இல்லாதவையாகவும் இருக்கின்றன. இலைகள் பரந்த முட்டை வடிவில் இருந்து முக்கோண வடிவில் இருக்கின்றன. இலையின் அளவு 5-11 செ.மீ. நீளம், 4-8 செ.மீ. அகலமும் உடையது. இலை விளிம்புகள் பற்கள் போன்றும், இலை நுனி கூர்மையாக அமைந்துள்ளது. மலர்கள் கொத்தாக இருந்தாலும், தலைகள் தனித்தனியாக எழுகின்றன, பூச்செண்டு நீளமான-கூம்பு வடிவிலும், 1-2.4 செமீ நீளம், 1.1-1.7 செமீ விட்ட அளவுக் கொண்ட வட்டு பூக்களாக உள்ளன. வட்டு பூக்கள், மஞ்சள் முதல் ஆரஞ்சு நிறமாகவும், இதிலுள்ள சிறு பூக்கள் 2.7-3.3 மிமீ நீளம் கொண்டதாகவும் உள்ளன.[8]
பயன்கள்
[தொகு]- ஆப்பிரிக்க மக்களிடத்தில் பல்வலிக்கு இதன் இலைகளை நேரடியாகப் பயன்படுத்துவர்.[9]
- மடகாசுகர் தீவில் அவர்களின் பாரம்பரிய உணவில் பயன்படுத்துகின்றனர்.
- இத்தாவரத்தின் இலைகளும், பூக்களும் கலந்து உருவாக்கும் காய்ச்சிய வடிசாறு பாரம்பரிய மருத்துவத்தில் பயனாகிறது.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Acmella oleracea (L.) R.K.Jansen". Global Compositae Database (GCD). Retrieved 17 மார்ச்சு 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Acmella oleracea". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 17 மார்ச்சு 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Acmella oleracea". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 17 மார்ச்சு 2024.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Szechuan Button". Atlas Obscura.
- ↑ da Silva, Suelem Paixão; Fernandes, José Augusto Lacerda; Santos, Alberdan Silva; Ferreira, Nelson Rosa (2023-04-07). "Jambu Flower Extract (Acmella oleracea) Increases the Antioxidant Potential of Beer with a Reduced Alcohol Content". Plants (MDPI AG) 12 (8): 1581. doi:10.3390/plants12081581. பன்னாட்டுத் தர தொடர் எண்:2223-7747. பப்மெட்:37111805.
- ↑ Bradt, Hilary; Austin, Daniel (2017). Madagascar. Bradt Travel Guides. p. 106. ISBN 9781784770488.
- ↑ Wong, James (September 2012). James Wong's Homegrown Revolution. W&N. p. 197. ISBN 978-0297867128.
- ↑ IPNI
- ↑ flowersofindia
- ↑ sciencedirect
- ↑ Chopra, R.N.; Nayar, S.L.; Chopra, I.C. (1956). Glossary of Medicinal Plants. New Delhi, India: Council of Scientific & Industrial Research.
வெளியிணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் Acmella oleracea தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
விக்கியினங்களில் Acmella oleracea பற்றிய தரவுகள்