அகன்ற அலகு கதிர்க்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகன்ற அலகு கதிர்க்குருவி
செஞ்சால் வனவிலங்கு சரணாலயம், மேற்கு வங்காளம்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: செட்டிடே
பேரினம்: திகெல்லியா
இனம்: தி. ஹோட்க்சோனி
இருசொற் பெயரீடு
திகெல்லியா ஹோட்க்சோனி
(மூரே, 1854)
மந்தமான நிறத்துடன் இளம் குருவி

அகன்ற அலகு கதிர்க்குருவி (Broad-billed warbler)(திகெல்லியா ஹோட்க்சோனி) என்பது புதர் கதிர்க்குருவி (செட்டிடே குடும்பம் ) சிற்றினமாகும். இது முன்னர் " பழைய உலக கதிர்க்குருவி" குழுவில் சேர்க்கப்பட்டது. மேலும் இது திகெல்லியா என்ற ஒற்றைச் சிற்றின பேரினத்தைச் சேர்ந்தது.

இது பூட்டான், சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]