விருத்தம்
Appearance
தமிழில் பாக்களில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைகள் உள்ளது போல மூன்று இனங்கள் உள்ளன. அவை - தாழிசை, துறை, விருத்தம் என்பன. பாவகைகளின் இலக்கணத்திற்கும் பாவின இலக்கணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லை. பாவினங்களுக்கு சீர், அடி எண்ணிக்கையும் வாய்பாட்டு அமைப்பும் மட்டுமே கருத்தில் கொள்ளப் பெறுகின்றன. இவற்றில் விருத்தம் என்பது மண்டிலம் என்றும் அழைக்கப்படுதும். பொதுவாக அளவொத்த நான்கு அடிகளையுடையது விருத்தம் எனப்படும். அது பின்வரும் நான்கு வகைப்படும்:
- வெளி விருத்தம் - பெரும்பாலும் நான்கடிகளில் அமையும்; மூன்றடிகளில் வருவதும் உண்டு. அடிதோறும் ஒரே தனிச்சொல்லைப் பெற்று வரும். தனிச்சொல்லைச் சேர்க்காமல் அடிதோறும் நான்கு சீர்கள் அமையும்.
- ஆசிரிய விருத்தம் - கழிநெடிலடி நான்கு உடையது
- கலிவிருத்தம் - அளவடி நான்கு கொண்டது
- வஞ்சி விருத்தம் - சிந்தடி நான்கு கொண்டது.