நாட்டியம் (பரதநாட்டியம்)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நாட்டியம் என்பது பரதநாட்டியத்தில் கதையை அடிப்படையாகக் கொண்டு அக்கதைக் கதாப்பாத்திரங்களை தனித்தனியாக சித்தரித்து ஆடும் ஆடல் முறை. கதையின் வெவ்வேறு கதாபாத்திரங்கள் அபிநயித்து ஆடப்பெறும்.ஒருவரே வெவ்வேறு கதாபாத்திரங்களாக அபிநயிப்பர். கீதம், வாத்தியம், நடனம் இவைமூன்றும் இணைந்து கதையை மையமாகக்கொண்டு, பாத்திரங்களின் தன்மைக்கேற்ப நவரச உணர்வுகளை வெளிப்படுத்தும். பலர் சேர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களைச் சித்தரித்தும் ஆடுவர். இந்த வகையில் பெரும்பாலும் புராணக்கதைகளும்,இதிகாசங்களும் முக்கிய இடம் பெறுகின்றன. குறவஞ்சி நாட்டியம், நாட்டிய நாடகங்கள் ஆகியவை இவ்வகையைச் சேர்ந்தன.