வெளி விருத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெளி விருத்தம் என்பது தமிழின் பாவினங்களில் ஒன்றான விருத்தத்தின் வகையில் ஒன்று. யாப்பருங்கலக் காரிகை இதனை

நான்கடி யானும் நடைபெற் றடிதொறும்
தான்றனிச் சொற்கொளின் வெளிவிருத் தம்மே

என்று விளக்குகிறது. வெளி விருத்தம் பெரும்பாலும் நான்கடிகளில் அமையும்; மூன்றடிகளிலும் அமையலாம். ஒவ்வொரு அடியிலும் அதே தனிச்சொல்லைப் பெற்று வரும். ஒவ்வொரு அடியிலும் தனிச்சொல்லைச் சேர்க்காமல் நான்கு சீர்கள் அமையும். இது அடி மறி மண்டில வெளி விருத்தம், நிலை வெளி விருத்தம் என இருவகைப்படும்.

எடுத்துக்காட்டு

சொல்லல் சொல்லல் தீயவை சொல்லல் - எஞ்ஞான்றும்;
புல்லல் புல்லல் தீநெறி புல்லல் - எஞ்ஞான்றும்;
கொல்லல் கொல்லல் செய்ந்நன்றி கொல்லல் - எஞ்ஞான்றும்,
நில்லல் நில்லல் நீசரைச் சார்ந்திங் - கெஞ்ஞான்றும்

ஆஆ என்றே அஞ்சினர் ஆழ்ந்தார் - ஒருசாரார்
கூகூ என்றே கூவினர் கொண்டார் - ஒருசாரார்
மாமா என்றே மாய்ந்தனர் நீத்தார் - ஒருசாரார்
ஏகீர் நாய்கீர் என் செய்தும் என்றார் - ஒருசாரார் [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. யாப்பருங்கலம், உறுப்பியல், தொடை ஓத்து, - நூல் பதிப்பு 1960 - பக்கம் 115
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளி_விருத்தம்&oldid=3445551" இருந்து மீள்விக்கப்பட்டது