ஜதீசுவரம்
Jump to navigation
Jump to search
ஜதீஸ்வரம் என்பது நாட்டியத்திற்காக உருவாக்கப்பட்ட உருப்படி ஆகும். ஜதிக் கோர்வைகளை ஆதாரமாகக் கொண்டு அமைந்த உருப்படி ஆகையால் இதற்கு ஜதீஸ்வரம் என்ற காரணப் பெயர் ஏற்பட்டது. இவ்வுருப்படிக்கு சாகித்தியம் இல்லை. ஸ்வரூபமாக அமைந்த உருப்படியாதலால் "சுரபல்லவி" என்றும் அழைக்கப்படும்.
வகைகள்[தொகு]
இராகமாலிகையாக அமைந்த ஜதீஸ்வரங்களும் உண்டு. சௌக்ககாலத்திலும், மத்திம காலத்திலும் அமைந்த ஜதீஸ்வரங்களும் உள்ளன.
நாட்டியத்ய கச்சேரியில் அலாரிப்பு ஆடிய பின்பு ஜதீஸ்வரம் ஆடப்படும். ஜதீஸ்வரத்தை இசை கற்கும் மாணவர்கள் பயிலுவதால் ஸ்வர, லய, ஞானம் ஏற்படுகிறது. ஜதீஸ்வரத்தில் பல்லவி, அனுபல்லவி என்னும் அங்கங்களுடன் பல சரணங்களையும் கொண்டிருகும்.
ஜதீசுவரம் இயற்றியோர்[தொகு]
- சுவாதித் திருநாள் மகாராஜா
- பொன்னையாப் பிள்ளை