உள்ளடக்கத்துக்குச் செல்

துறை (பாவினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் பாக்களில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைகள் உள்ளது போல மூன்று இனங்கள் உள்ளன. அவை - தாழிசை, துறை, விருத்தம் என்பன. [1] [2] [3] பாவகைகளின் இலக்கணத்திற்கும் பாவின இலக்கணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லை. பாவினங்களுக்கு சீர், அடி எண்ணிக்கையும் வாய்பாட்டு அமைப்பும் மட்டுமே கருத்தில் கொள்ளப் பெறுகின்றன. இவற்றில் துறை என்பது பின்வரும் நான்கு வகைப்படும்:

  • குறள்வெண் செந்துறை - அளவொத்த இரண்டடிகளில் அமையும். அவ்வடிகள் அளவடியாகவோ, நெடிலடியாகவோ, கழிநெடிலடியாகவோ அமையும்.
  • ஆசிரியத் துறை - நான்கடியில் கொண்டது; இடைமடக்குடையது; அடிகளில் ஏதேனும் ஒன்று அளவு குறைந்து வரும்.
  • கலித்துறை - நெடிலடி (ஐந்து சீர்) நான்கு கொண்டது.
  • வஞ்சித்துறை - குறளடி நான்கு கொண்டு தனித்து வருவது.

மேற்கோள்கள்[தொகு]

  1. தாழிசை துறையே விருத்தம் என்றிவை
    பாவினம் பாவொரு பாற்பட் டியலும். (யாப்பருங்கலம் 35)

  2. தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்1
  3. தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்2
"https://ta.wikipedia.org/w/index.php?title=துறை_(பாவினம்)&oldid=1733508" இலிருந்து மீள்விக்கப்பட்டது