மங்களம் (பரதநாட்டியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்களம் பரத நாட்டிய நிகழ்ச்சியில் இறுதியாக இடம்பெறும்.[1] இதற்கெனத் தனி ஆடல்முறை எதுவுமில்லை. பழமையான இராகங்களில் அமைந்த கீர்த்தனைகளை மத்திம காலத்தில் பாடி நிகழ்ச்சியை முடிப்பது வழக்கம். எல்லாத் தெய்வங்களுக்கும் மங்களம் சொல்லி, நடித்தவர்கள், பார்த்தவர்கள், கேட்டவர்கள் எல்லாருக்கும் நல்வாழ்த்துச் சொல்லி மங்களம் பாடுவர். வாழ்த்துச் சொற்களைக் கொண்டது மங்களப் பாடல். பாடகரும், பக்க இசையாளரும் மங்களப் பாடலை விறுவிறுப்பாக இசைப்பர். அப்பொழுது நாட்டியக் கலைஞர் ஆடல் தெய்வமான நடேசனை வணங்குவார். நாட்டிய ஆசான், பக்க இசையாளரை வணங்குவார். தொடர்ந்து சபையோர் அனைவரையும் வணங்குவார். நிகழ்ச்சி மங்களமாக நிறைவுறும். இது எளிமையாக அமைந்திருக்கும்.

மேற்கோள்[தொகு]

  1. மங்களம், [தமிழ் இணையக் கல்விக்கழகம்]]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்களம்_(பரதநாட்டியம்)&oldid=2498996" இலிருந்து மீள்விக்கப்பட்டது