புத்ரா பள்ளிவாசல்
புத்ரா பள்ளிவாசல் Putra Mosque Masjid Putra | |
---|---|
2016-இல் புத்ரா பள்ளிவாசல் | |
அமைவிடம் | புத்ராஜெயா மலேசியா |
உரிமையாளர் | மலேசிய அரசாங்கம் |
கட்டிடக்கலைத் தகவல்கள் | |
கட்டிட மாதிரி | இஸ்லாமியக் கட்டிடக்கலை, நவீன கட்டிடக்கலை, அரபு கலை |
கொள்ளளவு | 15,000 |
நீளம் | 116 மீ |
குவிமாடம் | 9 |
குவிமாட உயரம் (வெளி) | 50 மீ |
மினாரா(க்கள்) | 1 |
மினாரா உயரம் | 116 மீ |
கட்டடப் பொருட்கள் | காங்கிறீற்று |
கட்டுமானச் செலவு | RM 250 மில்லியன் |
புத்ரா பள்ளிவாசல் (ஆங்கிலம்: Putra Mosque; மலாய் மொழி: Masjid Putra) என்பது மலேசியா, புத்ராஜெயாவில் அமைந்துள்ள முசுலிம் பள்ளிவாசலாகும். இதன் கட்டுமானம் 1997-இல் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முடிக்கப்பட்டது.[1]
புத்ரா சதுக்கத்தில் அமைந்துள்ள இந்தப் பள்ளிவாசல், புத்ராஜெயாவில் செயற்கையாக உருவாக்கப்பட்ட புத்ராஜெயா ஏரிக்கு அருகில் உள்ளது. பள்ளிவாசலின் ஒரு பகுதி திடமான நிலத்திலும்; மறுபகுதி தண்ணீருக்கு மேலும் கட்டப்பட்டுள்ளது.[2]
பள்ளிவாசல் கட்டுமானங்களில் அது ஒரு நுட்பமாகும்; ஏனெனில் கட்டிடம் தண்ணீரில் மிதப்பது போல காட்சி அளிக்கிறது.[2]
பொது
[தொகு]மலேசியாவின் முதல் பிரதமரான துங்கு அப்துல் ரகுமான் புத்ரா அவர்களின் நினைவாக இந்த பள்ளிவாசலுக்குப் பெயரிடப்பட்டது. புத்ரா பள்ளிவாசலின் பிரதான குவிமாடம் 160 அடி உயரம் (50 மீ) கொண்டது. அதன் மினாரா (Minaret) 381 அடி உயரம் (116 மீ) கொண்டது. புத்ரா பள்ளிவாசலின் மினாரா உலகின் மூன்றாவது உயரமானதாக உள்ளது.[2]
புத்ரா பள்ளிவாசலின் மினாராக்கள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அந்த பிரிவுகள் ஒவ்வொன்றும் இசுலாத்தின் 5 சிறப்புகளில் ஒன்றைக் குறிக்கின்றன.[3]
இளஞ்சிவப்பு குவிமாட புத்ரா பள்ளிவாசல், ரோஜா நிறக் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது; மற்றும் மூன்று முக்கிய செயல்பாட்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. பிரார்த்தனை மண்டபம், சான் அல்லது முற்றம், மற்றும் பல்வேறு கற்றல் வசதிகள், விழா அறைகள் கொண்ட பகுதி.[2]
காட்சியகம்
[தொகு]மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Putra Mosque". Tourism Malaysia. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Putra Mosque - This iconic mosque was built on the edge of man-made Putrajaya Lake. One item to note is that part of the mosque is on solid ground while over half of it has been built over the water. This is a favored technique with mosques as it gives the image that the building is floating on the water". Traveling Thru History. 25 June 2019. பார்க்கப்பட்ட நாள் 28 September 2024.
- ↑ "Popular Landmark – ICOPS2023". International Conference on Pharmaceutical Sciences. பார்க்கப்பட்ட நாள் 28 September 2024.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் புத்ரா பள்ளிவாசல் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.