வடுகபட்டி (தேனி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடுகப்பட்டி
Vadugapatti
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தேனி
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்12,353
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)

வடுகப்பட்டி (Vadugapatti) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.

பெயர்க்காரணம்[தொகு]

ஆந்திரம் போன்ற பகுதிகளில் இருந்து தமிழகதிற்கு குடிபெயர்ந்த நாயக்கர்களை தமிழ் மக்கள் வடுகர் என்று அழைப்பது உண்டு . இவர்கள் வடக்கில் இருந்து வந்த காரணத்தால் இப்பெயர் பெற்றது . அவ்வாறாக வந்த வடுக மக்கள் ஏற்படுத்திய குடியிருப்பின் காரணமாக வடுகபட்டி என்று அழைக்கப்படுகிறது [1]

அமைவிடம்[தொகு]

ஆண்டிபட்டியில் இருந்து பெரியகுளம் செல்லும் சாலையில் பெரியகுளத்திலிருந்து 3 கிமீ (1.9 மைல்) தொலைவில் வடுகபட்டி எனும் கிராமம் உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியின் கீழே உள்ள நிலப் பகுதியில் இக்கிராமம் அமைந்துள்ளது. பல அணைகளும் பிற சுற்றுலாத்தலங்களும் கிராமத்திற்கு அருகில் உள்ளன. வைகை அணை, மஞ்சளார் அணை, சோத்துப்பாறை அணை, கொடைக்கானல், சுருளி நீர்வீழ்ச்சி, கும்பக்கரை நீர்வீழ்ச்சி, தேக்கடி மற்றும் மூணாறு போன்றவை இதற்கு சில எடுத்துக்காட்டுகளாகும். இச்சுற்றுலா பகுதிகள் அனைத்தும் 10 முதல் 60 கிமீ (6.2 முதல் 37.3 மைல்) தொலைவில் உள்ளன.

மக்கள் தொகை[தொகு]

2001 ஆன்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[2] வடுகபட்டியில் மொத்தமாக 12,354 பேர் வாழ்ந்து வந்தனர். இத்தொகையில் ஆண்கள் 6,301 பேரும் (51%), பெண்கள் 6,053 பேரும் (49%) இருந்தனர்.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வடுகப்பட்டி பேரூராட்சியில் 3,391 குடும்பங்களைச் சேர்ந்த 13,204 பேர் வாழ்ந்து வந்தனர்.[3] 5.12 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 51 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டிருந்தது.[4]

கல்வியறிவு[தொகு]

வடுகபட்டியின் வாழ்ந்த மொத்த மக்களில் 74% மக்கள் கல்வியறிவு பெற்றிருந்தனர். தேசிய கல்வியறிவு சராசரியான 59.5% என்பதை விட மிக இது அதிகமாகும். இக்கல்வியறிவு சதவீதம் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 65% என்பதை உள்ளடக்கியுள்ளது. மொத்த மக்கள் தொகையில் பதினொரு சதவீதம் பேர் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளாவர்.

சிறப்புகள்[தொகு]

வடுகபட்டி கிராமம் பூண்டு சந்தைக்கு பெயர் பெற்றது.[5] மத்திய ஏலம் வாரம் இருமுறை, வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகிறது. இங்கு விற்பனையாகும் பெரும்பாலான பூண்டு மற்ற நகரங்களுக்கு மொத்தமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. கவிஞர் மற்றும் திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து வடுகபட்டியைச் சேர்ந்தவர்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆய்வுக் கோவை வடுகப்பட்டி பெயர் காரணம். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் அண்ணாமலை நகர். ஜூன் 1980. p. 1. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  3. Vadugapatti Population Census 2011
  4. பேரூராட்சியின் இணையதளம்
  5. "www.dinamani.com".
  6. "www.puthiyathalaimurai.com".
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடுகபட்டி_(தேனி)&oldid=3949536" இலிருந்து மீள்விக்கப்பட்டது