சிஐஎம்பி வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிஐஎம்பி வங்கி
CIMB Group Holdings Berhad
வகைஅரசாங்கத்திற்கு சொந்தம்
நிறுவனர்(கள்)வீ கெங் சியாங்
Wee Kheng Chiang
தலைமையகம்கோலாலம்பூர், மலேசியா
முதன்மை நபர்கள்
தொழில்துறைநிதி சேவைகள்
உற்பத்திகள்சில்லறை வங்கி
கார்ப்பரேட் வங்கி
முதலீட்டு வங்கி
இசுலாமிய வங்கி
சொத்து மேலாண்மை
காப்பீடு & தக்காபுல்
வருமானம் RM 17.189 பில்லியன் (31 December 2020)[1]
இயக்க வருமானம் RM 8.212 பில்லியன் (31 December 2020)[1]
நிகர வருமானம் RM 1.194 பில்லியன் (31 December 2020)[1]
மொத்தச் சொத்துகள் RM 602.354 பில்லியன் (31 December 2020)[1]
மொத்த பங்குத்தொகை RM 55.925 பில்லியன் (31 December 2020)[1]
பணியாளர்38,000[2]
தாய் நிறுவனம்கசானா நேசனல்
(Khazanah Nasional)
இணையத்தளம்www.cimb.com
கோலாலம்பூரில் முன்னாள் குழுமத் தலைமையகம்

சிஐஎம்பி வங்கி அல்லது சிஐஎம்பி குரூப் ஓல்டிங்சு பெர்காட் (MYX: 1023) (மலாய்: CIMB Group Holdings Berhad; ஆங்கிலம்: CIMB Group Holdings; சீனம்: 联昌国际银行); என்பது கோலாலம்பூரில் தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய வங்கியாகும்.

மற்றும் ஆசியான் (ASEAN) நாடுகளின் உயர் வளர்ச்சிப் பொருளாதாரப் பின்னணியில் இயங்கும் இந்த வங்கி; உள்நாட்டின் முதலீட்டு வங்கியாகவும் (Investment Bank) செயல்படுகிறது.[3].

உலகளாவிய நிலையில் 1,080 கிளைகளுடன் பரந்த நிலையில் ஒரு வலையமைப்பைக் கொண்டுள்ளது. நுகர்வோர் வங்கி (Consumer Banking), மொத்த வங்கியியல் (Wholesale Banking), முதலீட்டு வங்கி (Investment Banking); மற்றும் கார்ப்பரேட் வங்கி (Corporate Banking), மூலோபாய முதலீடுகள் (Group Strategy & Strategic Investments) போன்றவை சிஐஎம்பி குழுமத்தின் (CIMB Group) வணிக நடவடிக்கைகள் ஆகும்.

பொது[தொகு]

இதன் முக்கியச் சந்தைகள் மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ளன. ம்ச்லேசியாவில் அதிகமான கிளைகளைக் கொன்டுள்ளது.[4]

சிஐஎம்பி குழுமம் 18 நாடுகளில் செயல்படுகிறது. சுமார் 33,000 பணியாளர்கள் உள்ளனர். இதில் ஆசியான் மற்றும் முக்கிய உலகளாவிய நிதி மையங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க வணிக மற்றும் முதலீட்டு பரிவர்த்தனைகளைக் கொண்ட நாடுகளை அதன் வாடிக்கையாளர்களாக உள்ளன.

பெயர்[தொகு]

சிஐஎம்பி (CIMB) எனும் சுருக்கப் பெயரின் விரிவாக்கம்:[5][6]

  • Commerce
  • International
  • Merchant
  • Bankers.

வரலாறு[தொகு]

பல பத்தாண்டுகளாக இயங்கி வந்த பல்வேறு வங்கிகளை ஒன்றிணைத்தன் மூலமாக சிஐஎம்பி வங்கி உருவாக்கப்பட்டது. ஒன்றிணைக்கப்பட்ட வங்கிகள்:

  • பியான் சியாங் வங்கி (Bian Chiang Bank): 1924-இல் வீ கெங் சியாங் (Wee Kheng Chiang) என்பவரால் சரவாக் கூச்சிங் நகரில் நிறுவப்பட்டது. 1979-இல் பேங்க் ஆப் காமர்சு பெர்காட் (Bank of Commerce Berhad) என மறுபெயரிடப்பட்டது. 1982-இல் RM 367 மில்லியன் கொண்டிருந்தது.
  • பான் கின் லீ வங்கி (Ban Hin Lee Bank): 1935-இல் பினாங்கு நகரில் இப் சோர் ஈ (Yeap Chor Ee) என்பவரால் நிறுவப்பட்டது.
  • லிப்போ வங்கி (Bank Lippo): 1948-இல் நிறுவப்பட்டது. அப்போதைய அதன் தலைமையகம் தாங்கராங், இந்தோனேசியா.
  • நியாகா வங்கி (Bank Niaga): 1955-இல் தேசிய தனியார் வங்கியாக நிறுவப்பட்டது.
  • சவுதர்ன் பெர்காட் வங்கி (Southern Bank Berhad): 1965-இல் பினாங்கு மற்றும் கோலாலம்பூரில் நிறுவப்பட்டது.
  • பூமிபுத்ரா மலேசியா பெர்காட் வங்கி (Bank Bumiputra Malaysia Berhad): 1965 இல் நிறுவப்பட்டது.
  • யுனைடெட் ஏசியன் பெர்காட் வங்கி (United Asian Bank Berhad), 1972-இல் கோலாலம்பூரில் நிறுவப்பட்டது. இந்த வங்கி மூன்று இந்திய வங்கிகளின் இணைப்பால் உருவாக்கப்பட்டது.

     1. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank)

     2. இந்தியன் வங்கி (Indian Bank)

     3. யூகோ வங்கி (United Commercial Bank)

இந்த மூன்று வங்கிகள் உட்பட இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளை இந்திய அரசு தேசியமயமாக்கியது. வெளிநாட்டு அரசாங்கங்களுக்குச் சொந்தமான வங்கிகளின் கிளைகள் மலேசியாவில் செயல்படுவதை மலேசியச் சட்டம் தடை செய்கிறது. அதனால் அந்த மூன்று இந்திய வங்கிகளும் 1991-ஆம் ஆண்டில் சிஐஎம்பி குழுமத்தில் சேர்க்கப்பட்டன.

  • பெர்தானியான் பேரிங் சன்வா மல்டிநேசனல் பெர்காட் வங்கி (Pertanian Baring Sanwa Multinational Berhad); எனும் வங்கியுடன்; பெர்தானியான் வங்கி (Agrobank Malaysia), பாரிங்சு வங்கி (Barings Bank), சன்வா வங்கி (Sanwa Bank of Japan) ஆகிய மூன்று வங்கிகளும் 1974-இல் இணைக்கப்பட்டன.

மேலே காணும் அத்தனை வங்கிகளும் 1986-ஆம் ஆண்டில் ஒன்றிணைக்கப்பட்டன; சிஐஎம்பி வங்கி (Commerce International Merchant Bankers Berhad) (CIMB) என மறுபெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "CIMB Group 2020 Annual Report" (PDF). CIMB Group. 31 December 2021.
  2. "Investor Relations". CIMB Group. 30 September 2017.
  3. "CIMB's Nazir Receives Outstanding Contribution Award From Euromoney". Archived from the original on 2014-08-12. பார்க்கப்பட்ட நாள் 2022-12-04.
  4. CIMB Group 2012 Annual Report
  5. "CIMB Group Profile". Archived from the original on 2012-08-22. பார்க்கப்பட்ட நாள் 2023-02-26.
  6. "CIMB Group Annual Report". Archived from the original on 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2023-02-26.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிஐஎம்பி_வங்கி&oldid=3675419" இலிருந்து மீள்விக்கப்பட்டது