கபூர் ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கபூர் ஆணையம் (Kapur Commission) மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் கொலைச் சதி குறித்து இந்தியாவின் மைசூரில் செயல்பட்ட விசாரணை ஆணையம் ஆகும்.

கபூர் ஆணையம்[தொகு]

1964ஆம் ஆண்டு காந்தி கொலை வழக்கில் சதிகாரர்கள் விடுவிக்கப்பட்டதும், புனேவில் நடந்த கொண்டாட்டங்களும், காந்தியைக் கொல்ல நாத்தூராம் கோட்சேவின் விருப்பம் தனக்குத் தெரியும் என்று பாலகங்காதர திலகரின் பேரன் கஜானன் விசுவநாத் கேட்கர் கூறிய கருத்தும் பொதுமக்களின் சீற்றம் மற்றும் பதக் கமிஷன் 22 மார்ச் 1965 தேதியிட்ட அறிவிப்பின் மூலம் உருவானது. கோபால் சுவரூப் பதக் மத்திய அமைச்சராகவும், பின்னர் மைசூர் மாநிலத்தின் ஆளுநராகவும் ஆனபோது, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியது குறித்த விசாரணை ஆணையமாக 1966 - கபூர் ஆணையம் அமைக்கப்பட்டது.[1] இதுகுறித்து விசாரணை நடத்தி 21 நவம்பர் 1966 அன்று ஜே. எல். கபூர் ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டார். இது உச்ச நீதிமன்ற நீதிபதி ஜீவன்லால் கபூரால் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையமாகும். இந்த ஆணையத்துக்கு உதவ, மகாராட்டிர அரசாங்கத்தால் ஜி. என். வைத்யாவும், இந்திய அரசாங்கத்திற்காக கே. எசு. சாவ்லாவும் நியமிக்கப்பட்டனர். இந்த விசாரணை ஆணையத்திற்கு விதிமுறைகள் பின்வருமாறு:[2]:pg.3

  1. ஏதேனும் நபர்கள், குறிப்பாக, புனேவினை சார்ந்த கஜானன் விசுவநாத் கெட்கர், நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியினை படுகொலை செய்வது தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்திருந்ததா?
  2. அத்தகைய நபர்களில் எவரேனும் இந்திய அரசாங்கத்தின் எந்த அதிகாரிகளுக்கும் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்களா என்பதையும்; குறிப்பாக, கஜானன் விசுவநாத் கெட்கர் தகவல் கூறினார் பால கங்காதர கெர் தாமதமாக பாலுகாகா கனேட்கர் மூலம்;
  3. அப்படியானால், அந்தத் தகவலின் அடிப்படையில் பம்பாய் அரசு, குறிப்பாக மறைந்த பாலகங்காதர் கெர் மற்றும் இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது.

இந்த ஆணையத்தின் பணியை முடிக்க மூன்று ஆண்டுகள் ஆனது. காந்தியின் பாதுகாப்பிற்குப் பொறுப்பானவர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டியது. இது நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படாத பம்பாய் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களுடன் வழங்கப்பட்டது. குறிப்பாக சாவர்க்கரின் நெருங்கிய உதவியாளர்களான அப்பா ராமச்சந்திர காசர், அவரது மெய்ப்பாதுகாவலர் மற்றும் கஜானன் விஷ்ணு டாம்லே ஆகியோரின் சாட்சியங்களாகும். ஆணையம் ஆய்வு செய்த அப்பா ராமச்சந்திரா கசார் மற்றும் கஜானன் விஷ்ணு டாம்லே ஆகிய இருவரின் வாக்குமூலங்கள் ஏற்கனவே பம்பாய் காவல்துறையால் 4 மார்ச் 1948 அன்று பதிவு செய்யப்பட்டன.[2]:pg.317

ஆணையம் அமைய காரணமான நிகழ்வுகள்[தொகு]

நவம்பர் 12, 1964 அன்று, கோபால் கோட்சே, மதன்லால் பஹ்வா, விஷ்ணு கர்கரே ஆகியோரின் தண்டனைக் காலம் முடிந்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில், புனேவில் ஒரு மத நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. பால கங்காதர திலகரின் பேரன்,[3] கேசரியின் முன்னாள் ஆசிரியரும், தருண் பாரதத்தின் ஆசிரியருமான ஜி. வி. கேட்கர், இந்த விழாவுக்குத் தலைமை தாங்கியவர் ஆவார். இவர் நாதுராம் கோட்சே காந்தியைக் கொல்லும் யோசனைகளைச் சம்பவம் நிகழ்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே வெளிப்படுத்தினார். இதனை கேட்கர் எதிர்த்துள்ளார். கேட்கர் இத்தகவலை பம்பாய் முதல் அமைச்சராக இருந்த பி.ஜி. கெரிடம் தெரிவிக்குமாறு பாலுகாகா கனிட்கருக்கு தகவல் கொடுக்கிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நவம்பர் 14, 1964 இதழில், கேட்கரின் நடத்தை பற்றி எதிர்மறையாகக் கருத்து தெரிவித்தது. காந்தியின் படுகொலையைப் பற்றி கேட்கரின் முன்னறிவிப்பு படுகொலைக்கு முந்தைய சூழ்நிலையில் மர்மத்தை மேலும் சேர்த்தது. கேட்கர் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரா சட்டப் பேரவை மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கு வெளியையும் உள்ளேயும் பிரச்சனை ஏற்பட்டது. காந்தியின் மீது துப்பாக்கிச் சூட்டைத் தடுக்கக் கூடிய தகவல் இருந்தும், பொறுப்புடன் செயல்படத் தவறிய உயர் அதிகாரிகளின் தரப்பில் வேண்டுமென்றே கடமை தவறியதாகக் கருத்து நிலவியது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 29 பேர் மற்றும் பொதுக் கருத்தின் அழுத்தத்தின் காரணமாக, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா, காந்தி கொலைச் சதித் திட்டம் தொடர்பான விசாரணையின் பொறுப்பாளராக, நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான கோபால் சுவரூப் பதக்கை நியமித்தார். கனிட்கர் மற்றும் கேர் இருவரும் இறந்துவிட்டதால், மகாராட்டிர அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து பழைய பதிவுகளின் உதவியுடன் முழுமையான விசாரணையை நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. விசாரணை நடத்த மூன்று மாதங்கள் அவகாசம் பதக்கிற்கு வழங்கப்பட்டது. ஆனால் பதக் மத்திய அமைச்சராகவும், பின்னர் மைசூர் மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டதால், விசாரணை ஆணையம் மறுசீரமைக்கப்பட்டு , இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஜீவன்லால் கபூர் விசாரணை நடத்த நியமிக்கப்பட்டார்.

பணிகள்[தொகு]

1966ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி காந்தியை கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியது குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஜீவன்லால் கபூர் ஒரு நபர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். கபூர் ஆணையத்தின் விசாரணை செப்டம்பர் 30, 1969-ல் முடிக்கப்பட்டது. இந்த ஆணையம் 101 சாட்சிகளை விசாரித்தது. இந்திய அரசு மற்றும் மகாராட்டிர அரசுகளால் சமர்ப்பிக்கப்பட்ட 407 ஆவணங்கள், சாட்சிகளையும் இந்த ஆணையம் கவந்த்தில் கொண்டது. மொத்தம் 162 அமர்வுகளாக விசாரணை நடந்தது. இந்த ஆணையம் விசாரணைக்காக மும்பை, தில்லி, நாக்பூர், தார்வாடு, புனே, பரோடா மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களுக்குச் சென்றது. மகாராட்டிர மற்றும் இந்திய அரசாங்கங்களின் சார்பில் வழக்கறிஞர்கள் முறையே ஆர். எஸ். கோட்வால் மற்றும் பி. பி. லால் முறையே 37, 13 நாட்கள் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனர். முதல் சாட்சியாக ஜி. வி. கேட்கர் விசாரிக்கப்பட்டார். ஜே. டி. நகர்வாலா மற்றும் மொரார்ஜி தேசாய் ஆகியோர் முறையே 15 மற்றும் 7 நாட்கள் விசாரிக்கப்பட்ட முக்கிய சாட்சிகள் ஆவர். ஜே. டி. நகர்வாலா காவல்துறை துணை ஆணையராக இருந்தவர். இவர் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மொரார்ஜி தேசாய் அப்போதைய பம்பாய் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார்.[4]

கண்டுபிடிப்புகள்[தொகு]

டெல்லி காவல்துறைத் தலைவர், சஞ்சீவியின் விசாரணையில் பல்வேறு குறைபாடுகளை ஆணையம் சுட்டிக்காட்டியது. டெல்லி விசாரணையைச் சுருக்கமாக ஆணையம் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Saha, Abhishek. "The politics of an assassination: Who killed Gandhi and why?". http://www.hindustantimes.com/analysis/the-politics-of-an-assassination-who-killed-gandhi-and-why/story-iUJqKjuw0sP9nAfc5KcOII.html. 
  2. 2.0 2.1 Kapur, J. L. (1969). Report of Commission of Inquiry into Conspiracy to Murder Mahatma Gandhi. Government of India. https://archive.org/details/JeevanlalKapoorCommissionReport. 
  3. "Interview: K. Ketkar". University of Cambridge, Centre of South Asian Studies. Archived from the original on 2 December 2013. பார்க்கப்பட்ட நாள் 29 August 2009.
  4. 4.0 4.1 4.2 . 
  5. Noorani, A. G. (March 15–28, 2003). "Savarkar and Gandhi". The Hindu. http://www.frontline.in/static/html/fl2006/stories/20030328003603400.htm. பார்த்த நாள்: August 29, 2009. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபூர்_ஆணையம்&oldid=3446768" இலிருந்து மீள்விக்கப்பட்டது