உள்ளடக்கத்துக்குச் செல்

தன்யூபு ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தான்யூபு ஆறு
River
நாடுகள் செருமனி, ஆசுத்திரியா, சுலோவாகியா, அங்கேரி, குரோழ்சியா, செர்பியா, பல்கேரியா, உரொமேனியா, மால்டோவா, உக்கிரைன்
நகரங்கள் உல்ம், இங்கோசுதாது, உரோகன்பர்கு, லிஞ்சு, வியன்னா, பிராதிசுலாவா, கியோர், புதாபெசுட்டு, துனவூய்வாரோசு, வுகோவர், நோவிசாது, சேமுன், பெல்கிரேடு, பான்செவோ, சுமேதெரவோ, துரோபேட்டா துர்னு-செவெரின்
Primary source பிரேகு
 - அமைவிடம் மர்திசுகபெல்லே, கருங்காடு, செருமனி
 - உயர்வு 1,078 மீ (3,537 அடி)
 - நீளம்
Secondary source பிரிகாக்
 - location புனித கியார்கன், கருங்காடு, செருமனி
 - உயர்வு 940 மீ (3,084 அடி)
 - நீளம்
Source confluence
 - location தோனவுஎசுசிங்கன்
கழிமுகம் தான்யூபுக் கழிமுகம்
நீளம் 2,860 கிமீ (1,777 மைல்)
Depth 1−8 மீ (−25 அடி)
வடிநிலம் 8,17,000 கிமீ² (3,15,445 ச.மைல்)
Discharge for தான்யூபுக் கழிமுகம்முன்பு
 - சராசரி
Discharge elsewhere (average)
 - பாசவு
30கிமீ, நகருக்கு முன்பு
 - வியன்னா
 - புதாபெசுட்டு
 - பெல்கிரேடு
தான்யூபு ஆற்றுத்தடம் சிவப்பில் உள்ளது
தான்யூபு ஆற்றுத்தடம் சிவப்பில் உள்ளது
தான்யூபு ஆற்றுத்தடம் சிவப்பில் உள்ளது
புடாபெஸ்ட்டில் உள்ள மார்கிட் பாலத்திலிருந்து தன்யூப் ஆற்றின் தோற்றம்
தன்யூப் ஆற்றின் பாதை

தான்யூபு (Danube) (/ˈdænjuːb/ DAN-ewb, மற்ற மொழிகளில் பல்வேறு பெயர்களில்) அழைக்கப்படுகிறது. இது ஐரோப்பாவின் இரண்டாவது நீளமான ஆறு ஆகும். வோல்கா இதைவிட பெரிய ஐரோப்பிய ஆறாகும். இது நடுவண், கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது. இது ஜெர்மனியில் உள்ள கருங்காட்டில் இருந்து, பிரிகாக் (Brigach), பிரேகு (Breg) என்னும் இரண்டு சிறு ஆறுகளாகத் தோற்றம் பெறுகின்றது. இவை இரண்டும் இணையும் இடத்திலிருந்தே தான்யூபு ஆறு எனப் பெயர் பெறுகின்றது. இந்த ஆறு, கிழக்கு முகமாக 2850 கிமீ (1771 மைல்கள்) ஓடிப் பல கிழக்கு ஐரோப்பியத் தலைநகரங்கள் ஊடாகப் பாய்ந்து இறுதியில், உருமேனியா, உக்கிரைன் ஆகிய நாடுகளிலுள்ள தான்யூபு கழிமுகத்தினூடாகக் கருங்கடலில் கலக்கிறது.

தற்போது உள்ளது போலவே தான்யூபு ஆறு பல நூற்றாண்டுகளாக ஓர் முதன்மை வாய்ந்த அனைத்துலக நீர்வழியாக இருந்து வருகிறது. வரலாற்றில், உரோமப் பேரரசின் நீண்ட கால எல்லையாக இருந்துவந்த இது, இன்று பத்து நாடுகளின் ஊடாகப் பாய்ந்து செல்கிறது அல்லது, அவ்வெல்லைகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இந்நாடுகள், செருமனி, ஆசுத்திரியா, சுலோவாக்கியா, அங்கேரி, குரோழ்சியா, செர்பியா, பல்கேரியா, உருமேனியா, மால்டோவா, உக்கிரைன் என்பவையாகும். இவற்றுடன், இதன் வடிநிலம் இத்தாலி, போலந்து, சுவிட்சர்லாந்து, செக் குடியரசு, சுலோவேனியா, பொசுனியாவும் எர்சகோவினாவும், மாந்தெனேகுரோ, மாசிடோனியக் குடியரசு, அல்பேனியா ஆகிய மேலும் பல நாடுகளின் பகுதிகளாக அமைந்துள்ளது.தான்யூபு ஆற்றுப் படுகை ஐரோப்பாவில் உயிர்ப்பன்மைக்குப் பெயர்பெற்றது. இது ஈட்டிமீன், சாந்தர், உச்சன், கெளுத்தி, விலாங்குவகை சார்ந்த நன்னீர் மீன்கள் போன்ற நூற்றுக்கணக்கான மீன் இனங்களுக்கு வாழிடமாக அமைந்துள்ளது. இது கெண்டை, சுறா, சாலமன், திருக்கை ஆகிய மீன்களின் வாழிடமும் ஆகும். தான்யூபு கழிமுகத்திலும் ஆற்றின் கீழ்ப்பகுதியிலும் முழு உவர்மீன்களும் வாழ்கின்றன. இவற்றுள் ஐரோப்பிய விலாங்கு, மடவை கொடுவாய்மீன் ஆகியவை உள்ளடங்கும்.

பெயர்களும் சொற்பிறப்பியலும்

[தொகு]

தொல் ஐரோப்பிய ஆற்றுப் பெயர்கள் முன்னிந்தோ- ஐரோப்பிய மொழியின் *தானு எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டன. இதே வேர்ச்சொல்லில் இருந்து உருவாகிய பிற பெயர்களாக தானுயெக், துவினா/தவுகவா, தான் ஆறு, தானெத்சு, தினீப்பர், தினீசுட்டிர், திசுனா என்பவை அமைகின்றன. இரிக் வேத சமக்கிருதத்தில் தாணு என்றால் பாய்மம் அல்லது ''நீர்த்துளி என்று பொருள்படும். அவெசுத மொழியில், தானு எனும் சொல் ஆறு எனும் பொருளைத் தருகிறது. இரிக் வேதத்தில், தாணு அசுரன் விருத்திரனின் தாயாக ஒருதடவை வருகிறது. தானு எனும் சுசிதிய மொழிச் சொல் ஆறு எனும் பொருள்கொண்டதாகலாம்: தானப்பிரிசு, தானசுதியசுஎன்பவற்றில் இருந்து வந்த சுசிதியச் சொற்களாகிய தினீப்பர், தினீசுட்டிர் என்பவை *தானு அபரா "ஆற்றுக்குச் சேய்மையில்", *தானு நழ்தியா- "ஆற்றுக்கு அண்மையில்" என முறையே பொருள்படும்.[1]

( சமக்கிருதம் 'இசிராஸ் (iṣiras) "விரைந்த") எனும் சொல்லுக்கு நெருங்கிய "கடும் விரைவு" எனப் பொருள்படும் தாகோத்திரேசியச் சொல்லில் இருந்து கடன்பெற்று பண்டைய கிரேக்கருக்கு அறிமுகமாகிய சொல்லாக இஸ்த்ரோஸ் (Ἴστρος) விளங்கியது.[2] இலத்தின மொழியில் தான்யூபு, தான்பியசு, தானுவியசு அல்லது இஸ்தர் எனவெல்லாம் அறியப்பட்டிருந்தது. தேசிய/திரேசிய மொழிப்பெயர், மேற்பகுதி தான்யூபுக்குத் தொனாரிசு எனவும் கீழ்ப்பகுதி தான்யூபுக்கு இஸ்த்ரோஸ் எனவும் வழங்கியது.[2] திராகோ-பிரிகிய மொழிப்பெயர் மதோவாசு ஆகும்.[3]இதன்பொருள் "ஆகூழ்" என்பதாகும்.[4]

இலத்தீனப் பெயர் ஆண்பாலாகும். அற்றுக்கான சுலாவிக மொழிகளின் பெயர்களும் ஆண்பாலாகவே அமைகின்றன. இரைன் ஆற்றின் பெயரும் இலத்தீன மொழியிலும் சுலாவிக மொழிகளிலும் செருமன் மொழியிலும் ஆண்பாலாகவே அமைகிறது. செருமன்பெயராக தோனவு (Donau) (முந்து புத்தியல் செருமன் பெயராக தோனவ், டோனவ் ஆகியவை அமைகின்றன.[5] Middle High German Tuonowe[6])பெண்பாலாகும். ஈரநிலம் எனப் பொருள்படும் இச்சொல் அவுவே (-ouwe ) எனும் முன்னடையைப் பெற்று பெண்பால் ஆகிறது.


தான்யூபுப் படுகையில் அமைந்த நாடுகளில் வாழும் மக்கள் தங்கள் மொழிகளில் தானுவாசு எனும் சொல் ஒலிப்பு சார்ந்தவாறு தான்யூபு ஆற்றின் பெயரைக் கீழுள்ளபடி குறிப்பிடுகின்றனர்:

இடாய்ச்சு மொழி: Donau ([ˈdoːnaʊ̯];

Romanian: Dunărea ([ˈdunəre̯a]);

பல்கேரிய: Дунав, Dunav (வார்ப்புரு:IPA-bg);

உக்ரைனியன்: Дунай, Dunai ([duˈnɑj]);

போலிய: Dunaj (Polish pronunciation: [ˈdũnaj]);

இத்தாலியம்: Danubio ([da'nubjo]);

உரோமாஞ்சு: Danubi.

புவிப்பரப்பியல்

[தொகு]
தான்யூபு வடிநிலப் படுகை

இது செருமனியில் உள்ள கருங்காட்டில் இருந்து, பிரிகாக் (Brigach), பிரேகு (Breg) என்னும் இரண்டு சிறு ஆறுகளாகத் தோற்றம் பெறுகின்றது. இவை இரண்டும் இணையும் இடத்திலிருந்தே தான்யூபு ஆறு எனப் பெயர் பெறுகின்றது. இந்த ஆறு, கிழக்கு முகமாக 2850 கிமீ (1771 மைல்கள்) ஓடிப் பல கிழக்கு ஐரோப்பியத் தலைநகரங்கள் ஊடாகப் பாய்ந்து இறுதியில், உருமேனியா, உக்கிரைன் ஆகிய நாடுகளிலுள்ள தான்யூபுக் கழிமுகத்தினூடாகக் கருங்கடலில் கலக்கிறது.

தற்போது உள்ளது போலவே தான்யூபு ஆறு பல நூற்றாண்டுகளாக ஓர் முதன்மை வாய்ந்த அனைத்துலக நீர்வழியாக இருந்து வருகிறது. வரலாற்றில், உரோமப் பேரரசின் நீண்ட கால எல்லையாக இருந்துவந்த இது, இன்று பத்து நாடுகளின் ஊடாகப் பாய்ந்து செல்கிறது அல்லது, அவ்வெல்லைகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இந்நாடுகள், செருமனி, ஆசுத்திரியா, சுலோவாக்கியா, அங்கேரி, குரோழ்சியா, செர்பியா, பல்கேரியா, உருமேனியா, மால்டோவா, உக்கிரைன் என்பவையாகும்.[7] Its வடிநிலம் extends into nine more.

வடிநிலப் படுகை

[தொகு]
தான்யூபு கருங்கடலில் (படத்தில் உள்ள மேல் நீர்நிலை) கலக்கிறது.
தான்யூபு கருங்கடலைச் சந்தித்தல்

இவற்றுடன், இதன் வடிநிலம் இத்தாலி, போலந்து, சுவிட்சர்லாந்து, செக் குடியரசு, சுலோவேனியா, பொசுனியாவும் எர்சகோவினாவும், மாந்தெனேகுரோ, மாசிடோனியக் குடியரசு, அல்பேனியா ஆகிய மேலும் பல நாடுகளின் பகுதிகளாக அமைந்துள்ளது. [7] The highest point of the drainage basin is the summit of Piz Bernina at the Italy–Switzerland border, at 4,049 மீட்டர்கள் (13,284 அடி).[8]

கிளையாறுகள்

[தொகு]

தான்யூபு ஆறு மேலும் பல நாடுகளில் இருந்து தோன்றிவரும் பல கிளையாறுகளால் செழிப்புறுகிறது. இக்கிளையாறுகள் தம்மளவில் முதன்மையான ஆறுகளாகும். அவற்றில் படகு போக்குவரத்து நடைபெற்று அவை தான்யூபு வழியாக கருங்கடலை அடைகின்றன. கீழே கிளையாறுகள் அவை கலக்கும் வரிசையில் அமைகின்றன:

  1. இல்லெர் (நுழைவிடம் உல்ம்)
  2. இலெக்
  3. அல்த்மூகில் (நுழைவிடம் கெல்கீம்)
  4. நாப் (நுழைவிடம் இரீகன்சுபர்கு)
  5. இரீகன் (நுழைவிடம் இரீகன்சுபர்கு)
  6. இசார்
  7. இன் (நுழைவிடம் பாசவு)
  8. இல்சு (நுழைவிடம் [பாசவு]])
  9. என்சு
  10. மொராவா (நுழைவிடம் தெவின் கோட்டை)
  11. இராபா (நுழைவிடம் கியோர்)
  12. வாகு (நுழைவிடம் கொமார்னோ)
  13. கிரோன் (நுழைவிடம் சுதூரொவொ)
  14. இபெஃப்
  15. சியோ
  16. திராவா
  17. வுகா (நுழைவிடம் வுகோவார்)

18. Tisza
19. சாவா (நுழைவிடம் பெல்கிரேடு)
20. திமிசு (நுழைவிடம் பஞ்சேவோ)
21. பெரு மொரோவா
22. காராசு
23. யியூ (நுழைவிடம் பெக்கெட்)
24. இசுகார் (நுழைவிடம் கிகன்)
25. ஓல்டு (நுழைவிடம் துர்னு மாகுரேல்)
26. ஓசாம் (நுழைவிடம் நிகொபோல், பல்கேரியா)
27. அர்கேசு (நுழைவிடம் ஓல்டெனிதா)
28. இலாலோமிதா
29. சீரெத் (நுழைவிடம் கலாதி)
30. புரூத் (நுழைவிடம் கலாதி)

சாவா தான்யூபில் பெல்கிரேடில் கலத்தல். பெல்கிரேடு கோட்டையில் இருந்து எடுத்த படம், செர்பியா

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mallory, J.P. and Victor H. Mair. The Tarim Mummies: Ancient China and the Mystery of the Earliest Peoples from the West. London: Thames and Hudson, 2000. p. 106. Абаев В. И. Осетинский язык и фольклор (Ossetian language and folklore). Moscow: Publishing house of Soviet Academy of Sciences, 1949. P. 236
  2. 2.0 2.1 Katičić, Radoslav. Ancient Languages of the Balkans, Part One. Paris: Mouton, 1976: 144.
  3. Dyer, Robert (1974). "Matoas, the Thraco-Phrygian name for the Danube, and the IE root *madų". Glotta (Vandenhoeck & Ruprecht (GmbH & Co. KG)) 52 (1/2): 91. http://www.jstor.org/discover/10.2307/40266286?uid=3739008&uid=2&uid=4&sid=21100741675271. 
  4. Šašel Kos, Marjeta (2009). "Reka kot božanstvo — Sava v antiki". In Barachini, Jožef (ed.). Ukročena lepotica: Sava in njene zgodbe (PDF) (in Slovenian and English). Sevnica: Javni zavod za kulturo, šport, turizem in mladinske dejavnosti. pp. 42–50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-961-92735-0-0. {{cite book}}: Unknown parameter |trans_chapter= ignored (help); Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  5. டோனவ் (Tonaw) செபாசுதிய பிரெஞ்சு, வெல்ட்புச் (Weltbuch) (1542), 81. Donaw e.g. in Leonhard Thurneisser zum Thurn, Pison (1572), 186; spelling Donau from the 17th century.
  6. Grimm, Deutsche Grammatik, 407.
  7. 7.0 7.1 "Countries of the Danube River Basin". International Commission for the protection of the Danube River. பார்க்கப்பட்ட நாள் 2010-11-13.
  8. http://www.unece.org/fileadmin/DAM/env/water/blanks/assessment/black.pdf

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தன்யூப்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்யூபு_ஆறு&oldid=3410884" இலிருந்து மீள்விக்கப்பட்டது