அவெஸ்தான் மொழி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அவெஸ்தான் மொழி | |
---|---|
Default
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | ae |
ISO 639-2 | ave |
ISO 639-3 | ave |
அவெஸ்தான் மொழி, கிழக்கத்திய பழைய ஈரானிய மொழியாகும். ஸோரோவாஸ்த்திரிய சமய நூல்களும் (அவெஸ்தாக்கள்), சுலோகங்களும் இம் மொழியிலேயே எழுதப்பட்டன. இம் மொழி இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின், இந்திய-ஈரானியத் துணைக் குழுவைச் சேர்ந்தது. அவெஸ்தான், பழைய பாரசீக மொழியைப்போல் மிகப் பழைய ஈரானிய மொழிகளுள் ஒன்று. அவெஸ்தான் மொழியை அவெஸ்தான் எழுத்துக்களுடன் இணைத்துக் குழம்பக் கூடாது. அவெஸ்தான் எழுத்துக்கள் பிற்பட்ட காலத்தவை.
அவெஸ்தாக்களில் காணும் இம்மொழி இரண்டு வடிவங்களாக உள்ளது:
- பழைய அவெஸ்தான்: இது அவெஸ்தாவின் பழைய பகுதிகளை ஆக்கப் பயன்பட்ட மொழியாகும். இது, எட்டு வேற்றுமை வடிவங்களையும், பெருமளவு வேறுபாட்டு வடிவங்களைக் காட்டும் பெயர்ச்சொல் முறைமையையும் கொண்ட சிக்கலான இலக்கணத்தைக் கொண்டது. இது வேதகாலச் சமஸ்கிருதத்துக்கு நெருங்கியது ஆகும்.
- இளைய அவெஸ்தான்: அவெஸ்தாவின் பெரும்பகுதி இளைய அவெஸ்தானிலேயே உள்ளது. இளைய அவெஸ்தானும் இரண்டு வகைகளாக உள்ளது. முதலாவது மூல இளைய அவெஸ்தான் (Original Young Avestan) என்றும் மற்றது செயற்கை இளைய அவெஸ்தான் என்றும் குறிப்பிடப்படுகின்றது. முதல்வகை பழைய அவெஸ்தானிலிருந்து இயல்பாக வளர்ச்சியடைந்தது எனப்படுகின்றது. இது கி.மு எட்டாம் நூற்றாண்டு வரை பேச்சு மொழியாக இருந்தது என்றும் கூறப்படுகின்றது. இரண்டாவது வகை, என்றுமே பேச்சு மொழியாக இருந்ததில்லை, ஆனால் சமய நூல்களை இயற்றுவதற்காக, சமயக் குருமாரால் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு மொழியாகும்.