வில்லியம் டென்னிசன்
சர் வில்லியம் தென்னிசன் Order of the Bath (KCB) | |
---|---|
7வது துணைநிலை ஆளுநராக வான் டீமனின் நிலம் (1847-1855) | |
பதவியில் 25 சனவரி 1847 – 8 சனவரி 1855 | |
முன்னையவர் | Sir John Eardley-Wilmot, 1st Baronet |
பின்னவர் | Sir Henry Young |
11வது ஆளுநர் சௌத்வேல்சு | |
பதவியில் 13 சனவரி 1855 – 21 சனவரி 1861 | |
முன்னையவர் | Charles Augustus FitzRoy |
பின்னவர் | John Young, 1st Baron Lisgar |
27வது சென்னை மாகாண ஆளுநர் | |
பதவியில் 1861–1866 | |
முன்னையவர் | William Ambrose Morehead |
பின்னவர் | The Lord Napier |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 மே 1804 இலண்டன், இங்கிலாந்து |
இறப்பு | 19 சனவரி 1871 East Sheen, Surrey, இங்கிலாந்து Sir John Young, Bt | (அகவை 66)
இளைப்பாறுமிடம் | Sir John Eardley-Wilmot, Bt Sir John Young, Bt |
துணைவர்கள் | Caroline Hornby |
பெற்றோர் |
|
கல்வி | Eton College |
முன்னாள் கல்லூரி | Royal Military Academy, Sandhurst |
வில்லியம் டென்னிசன் (William Denison, இயற்பெயர்: William Thomas Denison) (3 மே 1804 – 19 சனவரி 1871) என்பவர் இங்கிலாந்து நாட்டவராவார். பன்முகத் திறன் கொண்டவரான இவர், தனது வாழ்நாளில் துணைநிலை ஆளுநராக வான் டீமனின் நிலம் என்ற ஆத்திரேலியத் தீவுக்கு 1847 முதல் 1855வரையும், அதன்பிறகு 1855 முதல் 1861வரை, நியூ சௌத் வேல்சுக்கு ஆளுநராகவும், இறுதியாக சென்னை மாகாணத்திற்கு, 1861 முதல் 1866 வரை ஆளுநராகவும் இருந்து திறம்பட பணியாற்றினார். இவரது தந்தையார் பெயர், சான் டென்னிசன் என்பதாகும். இவரது தந்தையின், இரண்டாம் மனவியான, சார்லோடே எசுட்டுவிக் (Charlotte Estwick) என்பவர், இவரது தாயார் ஆவார். இருவருக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார்.[1] இவ்லின் டென்னிசன், எட்வர்டு டென்னிசன், சியார்சு தென்னிசன் என்பவர், இவரது சகோதரா்கள் ஆவர். இவரது மனைவி பெயர் கரோலின். (Caroline Hornby)[2][3]
சென்னை மாகாணத்தின் சீர்திருத்தங்கள்
[தொகு]பல்வேறு நாடுகளில் ஆங்கில அரசுக்காகப் பணியாற்றிய டென்னிசன், இந்தியாவிற்கு முதன்முதலில் வந்த போது, சென்னை மாகாணச் சூழ்நிலை, இந்திய வட மாகாண சூழ்நிலைகளை விட வேறுபட்டு காணப்பட்டன. ஆங்கில அரசின் போக்கும், இந்தியாவுக்கான புதிய நடைமுறைகளை வகுத்து செயற்படுத்தியது. இந்த புதிய சூழ்நிலைகளை, டென்னிசன் திறம்படவே கையாண்டதாக, வரலாற்று வல்லுனர்கள் கருதுகின்றனர். இங்கு இந்தியா என்பதனை, தற்போதுள்ள இந்தியாவும், பாக்கித்தான் நாடும், வங்காள தேசம் நாடும் இணைந்த பெரும் நிலப்பரப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுபோலவே, சென்னை மாகாணம் என்பது, தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. இன்றைய தமிழ்நாடு, கேரளத்தின் மலபார்ப் பகுதி, இலட்சத்தீவுகள், ஆந்திரப் பிரதேசத்தின் ஆந்திரா மற்றும் ராயலசீமை பகுதிகள், கர்நாடகத்தின் பெல்லாரி, தட்சிண கன்னடா, உடுப்பி பகுதிகள் ஆகியவை அடங்கியிருந்தன. பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களில் சென்னையில் தான் படிப்பறிவு விகிதம் மிக அதிகமாக இருந்தது.[4] இதனாலும், அவரது ஆளுமையின் செயற்பாட்டு திறன் ஓங்கியது.
அதிகாரமும், ஆளுமையும்
[தொகு]ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் 1861 இல், இந்திய கவுன்சில்கள் சட்டம், 1861 இயற்றப்பட்டது. அச்சட்டம் வழங்கிய அதிகாரங்களின் படி, உள்துறை, வருவாய், நிருவாகம், சட்டம், நிதி, பொதுப்பணிகள் போன்ற துறைகளில், கிடைத்த புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி, பல புதிய நடைமுறைகளை, சென்னை மாகாணத்தில் நடைமுறைப் படுத்தினார். இச்சட்டத்திற்கு முன், பிரித்தானிய இந்தியாவின் அரச பிரதிநிதி (வைஸ்ராய்)யும், மாகாண ஆளுனர்களும், நிருவாகக் குழுக்களுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்புகளாகவே இருந்தனர். இச்சட்டத்தால், அவர்களின் நடைமுறைகள் மாறி, குறிப்பிட்ட துறைகளுக்கு, அமைச்சர்களாக ஆனார்கள். இதனால் அவர்கள் அதிகராத்திற்கு உட்பட்ட இடங்களில் தேவைப்பட்ட சட்டமியற்றும் உரிமைகளயும் பெற்றனர். இதனால் சென்னை மாகாணமும் வெகுவாக முன்னேறி, ஆங்கிலேயர் ஆட்சி வலுவானது.[5][6]
படைப்பிரிவு சீர்திருத்தம்
[தொகு]சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் (Indian Rebellion of 1857)பிறகு, சிப்பாய்களின் மனநிலைகளையும், ஆங்கில அரசில் அப்பொழுது நிலவிய குறைபாடுகளையும், நன்கு தெரிந்து கொண்ட டென்னிசன், அவற்றின் கூறுகளை ஆய்ந்து, சென்னை மாகாணத்தின் சிப்பாய் படை அமைப்பை மாற்றி அமைத்தார். இதனால் சிப்பாய் என அழைக்கப்பட்ட, ஆங்கிலப் படையின் சென்னை மாகாணப்படைவீரர்களிடம் இருந்த பாகுபாடுகளும், உட்பூசல்களும் வெகுவாக குறைந்தன. இச்செயலானது, அவரது நிர்வாகத்திறனில் வெகுவாக ஆங்கிலப் பேரரசினாலும், வரலாற்று அறிஞர்களாலும் போற்றப் படுகிறது.
நீர்மேலாண்மை திட்டம்
[தொகு]1862 ஆம் ஆண்டு, சேது சமுத்திரத் திட்டத்தினை, புதிய முன்மொழிவுகளோடு வெளியிட்டார். அவ்வெளியீட்டிற்கு முன், பொறியாளரான டென்னிசன், 1860 ஆம் ஆண்டு இ்ந்திய கடற்படையைச் சார்ந்த, ஆங்கிலேயரான ஏ.டி.டெய்லரின் திட்டத்தையும், அதன் பிறகு, 1861 ஆம் ஆண்டு, டௌன்செண்டு (Townsend) முன்மொழிவுளையும் ஆய்ந்து, அவற்றை சென்னை மாகாணத்தின் வாழ்வியல் வளர்ச்சி காரணிகளோடு இணைத்தே வெளியிட்டார்.
இயற்கை வளம்
[தொகு]வடமேற்கு மாநிலங்களிலிருந்து தேயிலை பயிரிடுவதில் நல்ல பயிற்சிபெற்ற தோட்ட வேலைக்காரர்களை, நீலகிரிக்கு அனுப்பித் தேயிலைப் பயிர்த் தொழில் வளர்ச்சியில், அக்கறை காட்டினர். அதோடு உயர்ந்த விதைகளைத் தருவித்தும் வழங்கினர். கி. பி. 1869 ஆம் ஆண்டு ஏறக்குறைய 300 ஏக்கர் நிலம் தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்டிருந்தது. அவ்வாண்டு நடந்த பயிர்த் தொழில் கண்காட்சியில், 18 தோட்ட முதலாளிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்திருந்த தேயிலைகளைப் பார்வைக்கு வைத்திருந்தனர்.[7] மேலும், மலேரியாவுக்குரிய மருந்து கிடைக்கும் சின்கோனா(Cinchona pubescens) மர வளர்ச்சிக்கும் உதவினார்.
உயிரியல் துறையினரின் பெயரிடல்
[தொகு]உயிரியல் வகைப்பாட்டில் ஒரு மீனுக்கும் (Sahyadria denisonii ), மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் களில் உள்ள நீலமலைத் தாவரத்திற்கும் ( Impatiens denisonii)[8] ஒரு ஆத்திரேலிய பாம்புக் குடும்பப் பேரினத்த்திற்கு (Denisonia) என பெயரிட்டுள்ளனர்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ {{cite news |url=http://nla.gov.au/nla.news-article8865845 |archiveurl=https://web.archive.org/web/20160714144703/http://trove.nla.gov.au/newspaper/article/8865845 |title=OBITUARY. |newspaper=[[The Mercury (Hobart)|The Mercury |location=Hobart, Tasmania |date=17 February 1871 |accessdate=2 May 2012 |archivedate=14 July 2016 |page=2 |via=National Library of Australia}}
- ↑ Currey, C. H. "Denison, Sir William Thomas (1804–1871)". Australian Dictionary of Biography. ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம். Archived from the original on 18 February 2011. பார்க்கப்பட்ட நாள் 21 April 2007.
- ↑ Arbuthnot, A. J. (revised by A. G. L. Shaw) (2004). "Denison, Sir William Thomas (1804 1871)". Oxford Dictionary of National Biography. Oxford University Press. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/ref:odnb/7492.
- ↑ Seal, Pg 103
- ↑ Encyclopædia Britannica article concerning this Act
- ↑ "History of State Legislature". Tamil Nadu Legislative Assembly, Government of Tamil Nadu, Chennei. Archived from the original on 13 ஏப்ரல் 2010. பார்க்கப்பட்ட நாள் 11 February 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ https://ta.wikisource.org/wiki/பக்கம்:தமிழகத்தில்_குறிஞ்சி_வளம்.pdf/123
- ↑ Day F (1865). "On the fishes of Cochin, on the Malabar Coast of India. Part II. Anacanthini". Proceedings of the Zoological Society of London 1865: 286–318. https://www.biodiversitylibrary.org/page/28497236.
- ↑ Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore, Maryland: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. ("Denison", p. 69).
வெளி இணைப்புகள்
[தொகு]- தென்னிசன் குறித்தச் செய்திகளைத் தரும், இங்கிலாந்து நாட்டு ஆங்கில மொழியில் அமைந்தஇணையப் பக்கம்.
- ஆங்கில விக்கிமூலத்தில் உள்ள, டென்னிசனின் வாழ்க்கைச் சுருக்கம்
- ஆத்திரேலிய அகரமுதலியின் இணையதளப் பக்கம்