வான் டீமனின் நிலம்

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search
வான் டீமனின் நிலம்
Van Diemen's Land
Van Diemen's Land 1852.jpg
1852 இல் வான் டீமனின் நிலத்தின் தோற்றம்
புவியியல்
அமைவிடம்தெற்குப் பெருங்கடல்
ஆள்கூறுகள்42°00′S 147°00′E / 42.000°S 147.000°E / -42.000; 147.000
உயர்ந்த புள்ளிஓசா மலை
நிர்வாகம்
ஐக்கிய இராச்சியம்
பெரிய குடியிருப்புஹோபார்ட்
மக்கள்
மக்கள்தொகை40,000 (1855)
இனக்குழுக்கள்தாஸ்மானிய பழங்குடிகள்
வான் டீமனின் நிலத்தில் ஆர்தர் துறை: ஆஸ்திரேலியாவில் குடியேற்றப்பட்ட குற்றவாளிகளின் பெரும் சிறைக்கூடம் அல்லது பாசறை

வான் டீமனின் நிலம் (Van Diemen's Land) என்பது ஆஸ்திரேலியாவின் தற்போதைய மாநிலமான தாஸ்மானியா தீவிற்கு ஆரம்பத்தில் ஐரோப்பியர்கள் வைத்த பெயராகும். டச்சு நாடுகாண் பயணி ஏபல் டாஸ்மான் தாஸ்மானியாவில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆவர். டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுநரான அந்தனி வான் டீமனின் நினைவாக டாஸ்மான் இத்தீவிற்கு "வான் டீமனின் நிலம்" எனப் பெயரிட்டார்.

1803 இல் இத்தீவு பிரித்தானியரினால் குற்றவாளிகளின் குடியேற்றமாக மாற்றப்பட்ட போது இது பிரித்தானியக் குடியேற்ற நாடான நியூ சவுத் வேல்சின் பகுதியாக வான் டீமனின் நிலம் என்ற பெயரில் இணைக்கப்பட்டது. 1824 ஆம் ஆண்டில் இத்தீவு நியூ சவுத் வேல்சில் இருந்து பிரிக்கப்பட்டு தனியான குடியேற்றப் பிரதேசமாக மாற்றப்பட்டது. 1856 ஆம் ஆண்டில் இப்பிரதேசம் சுயாட்சி கொண்ட தனியான நாடாளுமன்றதைக் கொண்ட நாடாக ஆக்கப்பட்டு அதற்கு தாஸ்மானியா என்ற பெயரும் இடப்பட்டது.

குற்றவாளிகளின் குடியேற்றப் பிரதேசம்[edit]

1830களில் இருந்து 1853 ஆம் ஆண்டில் குற்றவாளிகள் அனுப்பப்படுவது நிறுத்தப்படும் வரையில் வான் டீமனின் நிலமே ஆஸ்திரேலியாவின் முக்கிய குடியேற்ற நாடாக இருந்தது. மொத்தமாக 75,000 குற்றவாளிகள் இத்தீவிற்கு அனுப்பப்பட்டனர். இது ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட குற்றவாளிகளின் 40 விழுக்காடு ஆகும்.

1663 இல் வான் டீமனின் நிலத்தின் வரைபடம்

ஆண் குற்றவாளிகள் பல்வேறு தொழில்களிலும் நியமிக்கப்பட்டனர். கடுமையான குற்றவாளிகள் டாஸ்மான் தீபகற்பத்தில் உள்ள சிறையில் (போர்ட் ஆர்தர்) வைக்கப்பட்டனர்.

பெண்கள் ஏனைய விடுதலை பெற்ற குடியேறிகளின் வீடுகளில் வேலைக்காக அனுப்பப்பட்டனர். அல்லது பெண்களுக்கான தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். வான் டீமனின் நிலத்தில் மொத்தம் ஐந்து பெண்கள் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.

விடுதலை பெற்ற பலர் தீவை விட்டு விலகி விக்டோரியாவில் குடியேறினர். இதனால் விக்டோரியாவில் ஏற்கனவே குடியேறியிருந்த குடியேற்றவாசிகளுக்கும் வான் டீமனில் இருந்து வந்தவர்களுக்கும் இடையில் அடிக்கடி கலகங்கள் ஏற்படலாயின.

வெளி இணைப்புகள்[edit]