தட்டும் மூடி (சுடுகலன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தட்டும் மூடிகள்

தட்டும் மூடி (ஆங்கிலம்: Percussion Cap, பெர்குஷன் கேப்) என்பது,வாய்குண்டேற்ற சுடுகலன்களை, எந்த வானிலையிலும் சுட வித்திட்ட, ஒரு இன்றியமையாத கண்டுபிடிப்பாகும். இது தோராயமாக 1820-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இதுவே மூடியடி இயக்கத்தின் தோன்றுதலுக்குகாரணம் ஆகும்.

இந்த மேம்பாட்டிற்கு முன்பு, தீக்கல்லை எஃகில் அடிப்பதன்மூலம் எரியூட்டியை பற்றவைத்து, முதன்மை வெடிமருந்தை தீமூட்டிய, தீக்கல்லியக்க அமைப்புகளை சுடுகலன்கள் பயன்படுத்தின (முன்னதாக பழைய திரியியக்கம் மற்றும் சக்கர இயக்கத்திற்கு, மாற்றாக தீக்கல்லியக்கம் வந்தது). ஈரமான வானிலையில், தீக்கல்லியக்கிகளில் இயக்கத்தவறு ஏற்படும். பல தீக்கல்லியக்க சுடுகலன்கள் தட்டும் அமைப்பாக, பின்னர் மாற்றப்பட்டன.[2]).

தட்டும்-மூடி கூம்புகள் (அ) முளைகள்

தட்டும் மூடி என்பது, தாமிரம் அல்லது பித்தளையால் ஆன, மூடப்பட்ட ஒரு முனையுடன் இருக்கும், சிறு உருளைவடிவ கொள்கலன் ஆகும். இந்த மூடப்பட்ட முனையின் உள்ளே, சிறிதளவு பாதரச(II) பல்மினேட்டு போன்ற   அதிர்வுணர் வெடிபொருள் இருக்கும். துப்பாக்கிக் குழலின் பின்முனையில் இருக்கும் ஒரு ஒரு உள்ளீடற்ற உலோக "கூம்பு" (அ) "முளை"யின்மேல் தட்டும் மூடி வைக்கப்படும். விசையை இழுப்பது, சுத்தியலை விடுவிக்கும். அவ்வாறு விடுபட்ட சுத்தியல், தட்டும் மூடியை அடித்து, வெடிக்கூடிய எரியூட்டியை பற்றவைக்கும். கைத்துப்பாக்கிகளுக்கு சிறிய அளவுகளிலும், புரிதுமுக்கி மற்றும் மசுகெத்துகளுக்கு பெரிய அளவுகளிலும், இந்த தட்டும் மூடியானது தயாரிக்கப்பட்டன, இன்றும் தயாரிக்கப்படுகின்றன.[1]

தட்டும் மூடி பிரபலமானதாகவும், அதிகம் பிரயோகிக்கப்பட்ட எரியூட்டியாக இருந்தபோதிலும்; அவை அளவில் சிறிதாக இருப்பதால் , குதிரைச் சவாரியில், அல்லது சண்டைப் பதட்டத்தில், கையாள்வதற்கு கடினமாக இருந்தன. இதனால், பல உற்பத்தியாளர்கள் இதற்கு மாற்றாக, "தானே-எரியூட்டியிட்டுக் கொள்ளும்" அமைப்புகளை உருவாக்கினர். உதாரணமாக, மேனார்டு நாடா எரியூட்டி, இன்றைய (பொம்மை) தீபாவளி துப்பாக்கிகளைப் போலவே, காகிதப் "பொட்டு" சுருளை பயன்படுத்தியது. இருப்பினும், 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப மற்றும் மத்திய காலங்களில் இருந்த உற்பத்தி அமைப்புகளுக்கு, இதுபோன்ற தானியக்க உள்ளீடு அமைப்புகளை உருவாக்க மிகவும் கடீனமாக இருந்தது. இது தீர்வுகளை விட அதிக சிக்கல்களுக்கு வித்திட்டது. இதனால், இவை விரைவாக ஓரங்கட்டப்பட்டு, (சில தருணங்களில்) கையாள வசதியற்று இருந்தாலும், ஒற்றைத் தட்டும் மூடியே மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. எப்போதாவது ஒன்று கைதவறி விழுவதை தவிர்க்க, அதிக எண்ணிக்கைகளில் இவற்றை எடுத்துச் செல்லலாம். துப்பாக்கியின் நாடா எரியூட்டி அமைப்பானது, பயன்பாட்டின் போது சிக்கிக்கொண்டால், நிலைமை மோசமாகிவிடும்; அதனால், தட்டும் மூடி அமைப்பே மேல் என்ற நிலை வந்தது.[1]

1850-களில், தட்டும் மூடியை, முதன்முதலாக தோட்டா, வெடிபொருள் மற்றும் எரியூட்டி ஆகியவற்றைக் கொண்ட, உலோக வெடிபொதியாக ஒருங்கிணைக்கப் பட்டது.

வரலாறு [தொகு]

தீக்கல் இயக்கத்தில் இருந்த தீக்கல், எஃகு தகட்டுமூடி, மற்றும் கிண்ணி ஆகியவற்றின் இடத்தை, தட்டும் மூடி பிடித்தது. 

மேலும் பார்க்க [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

  1. 1.0 1.1 1.2 Fadala, Sam (17 November 2006). The Complete Blackpowder Handbook. Iola, Wisconsin: Gun Digest Books. பக். 159–161. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-89689-390-1. https://books.google.com/books?id=Dzxyneq43AEC&pg=PA160. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. Wisniak, Jaime (2012). "Edward Charles Howard. Explosives, meteorites, and sugar" (in en). Educación Química (Universidad Nacional Autonoma de Mexico) 23 (2): 230–239. doi:10.1016/s0187-893x(17)30114-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:0187-893X. 

நூல்தொகை[தொகு]

  • Winant, L. (1956). Early percussion firearms. Bonanza Books

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்டும்_மூடி_(சுடுகலன்)&oldid=3868680" இலிருந்து மீள்விக்கப்பட்டது