உள்ளடக்கத்துக்குச் செல்

ஏரியா 51

ஆள்கூறுகள்: 37°14′25″N 115°49′07″W / 37.240203°N 115.818558°W / 37.240203; -115.818558
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Area 51
ஏரியா 51-இன் இப்படம் தளத்தின் தெற்குப் பகுதியிலுள்ள குரூம் ஏரியின் வறண்ட பகுதியைக் காண்பிக்கிறது.
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைஇராணுவம்
இயக்குனர்ஐக்கிய நாடுகள் வான் படை
அமைவிடம்தென் நெவடா,  ஐக்கிய அமெரிக்கா
உயரம் AMSL4,462 ft / 1,360 m
ஆள்கூறுகள்37°14′06″N 115°48′40″W / 37.23500°N 115.81111°W / 37.23500; -115.81111
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
14L/32R 12,000 3,658 Asphalt
12/30 5,420 1,652 Asphalt
09L/27R 11,440 3,489 Salt
09R/27L 11,440 3,489 Salt
03L/21R 10,030 3,057 Salt
03R/21L 10,030 3,057 Salt
14R/32L 23,270 7,093 Closed

ஏரியா 51 எனும் அடைப் பெயர் கொண்ட இராணுவத்தளம் மேற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நெவேடாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. (லாஸ் வேகாஸின் கீழ்ப்பகுதியில் வடக்கு-வடமேற்கு 83 மைல்களில் அமைந்துள்ளது). நெவேடாவின் மத்தியிலும் குரூம் ஏரியின் தென் கரைப் பகுதியிலும் அமைந்துள்ள இவ்விடம் பெரிய இரகசிய இராணுவ விமானத் தளமாகும். இந்த இராணுவ தளத்தின் முதன்மைப் பயன்பாடானது பரிசோதனை ரீதியிலான விமானங்களுக்கும் ஆயுத அமைப்புகளின் மேம்பாட்டிற்கும் சோதனைக்கும் உதவி புரிவதேயாகும்.[1][2]

ஐக்கிய அமெரிக்க வான்படையின் பரந்த நெவேடா சோதனை மற்றும் பயிற்சி பரப்பெல்லைக்குள்ளேயே இத்தளம் இருக்கிறது. பரப்பெல்லையின் தளங்களை நெல்லிஸ் விமானத் தளத்தின் 99வது விமானத் தளப் பிரிவு நிர்வகித்து வருகிறது. எனினும் குரூம் தளமானது, இதன் அருகிலுள்ள186 மைல்கள் (300 km) மொஜாவெ பாலைவனத்தின் எட்வர்ட்ஸ் விமானத் தளப் பிரிவின் விமானப் படையின் பறக்கும் சோதனை மையத்தின் சேர்ப்பாகவே நிர்வகிக்கப்படுவதாகத் தெரிகிறது. அது விமானப் படை பறக்கும் சோதனை மையம் என்றே அறியப்படுகிறது (பிரிவு 3).[3][4]

இத்தளத்திற்கு ட்ரீம்லேண்ட் , பாரடைஸ் ரான்ச் [5][6]ஹோம் பேஸ் , வாட்டர்டவுன் ஸ்ட்ரிப் , குரூம் லேக் [7], வெகு சமீபத்திய ஹோமே ஏர்போர்ட் போன்ற பெயர்களும் [8] வழங்கப்படுகின்றன. இப்பகுதி நெல்லிஸ் இராணுவ நடவடிக்கைப் பகுதியின் அங்கமாகவும், தளத்தைச் சுற்றி கட்டுப்படுத்தப்பட்ட விமானப் பரப்புப் பகுதி (R-4808N [9]), என்று குறிக்கப்படுவது, இராணுவ விமான ஓட்டிகளால் "த பாக்ஸ் " என அறியப்படுகிறது.

அமெரிக்க அரசினால் அவ்வாறு ஒன்றிருப்பதாக அரிதாகவே ஒப்புக்கொள்ளப்படும் இந்த இடத்தைச் சுற்றியுள்ள மிகுந்த இரகசியத்தின் காரணமாக இத்தளம் சதிகார கோட்பாடுகளைப் பேசுவோரால் அடிக்கடி குறிப்பிடப்படும் விஷயமாகவும் அடையாளம் தெரியாத (பறக்கும் தட்டு போன்ற) பறக்கும் பொருட்களைப் பற்றிய ஆய்வாளர்களுக்கும் மையப் பொருளாகிறது.[6]

புவியியல்

[தொகு]
ஏரிய 51, NAFR, மற்றும் NTSஐ காண்பிக்கும் வரைபடம்

இந்த ஏரியா 51 தளமானது நெவேடா சோதனைத்தளத்தின் (NTS) யூக்கா பிளாட் பகுதியுடன் தனது ஓர் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இவ்விடத்திலேயே அமெரிக்க எரிசக்தி துறை தனது 928 சோதனைகளில் 739 சோதனைகளை அங்கேயே நிகழ்த்தியது.[10] யூக்கா மலை அணு கழிவு சேமிப்புக் கிடங்கு ஏறக்குறைய 40 மைல்கள் (64 கிலோமீட்டர்கள்) குரூம் ஏரியின் தென்மேற்கேயுள்ளது.

"ஏரியா xx " எனும் பெயர் வடிவமே நெவேடா சோதனை தளத்தின் பிற பகுதிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.[11][12]

முதலில் செவ்வக வடிவத்தில் 6x10 மைல்கள் அளவில் அமைந்திருந்த தளமானது தற்போது "குரூம் பாக்ஸ்" என்றழைக்கப்படும் 23x25.3 மைல்கள் செவ்வக வடிவ பாதுகாக்கப்பட்ட வான் எல்லையின் ஒரு பகுதியாக இருக்கிறது. இப்பகுதி அக NTS சாலை(Navada Test Site Road) வலையமைப்பில் இணைகிறது. இதில் சாலைகள் தெற்கில் மெர்குரிக்கும் மேற்கில் யூகா பிளாட் பகுதிக்கும் செல்கின்றன. ஏரியிலிருந்து வட கிழக்கு நோக்கிச் செல்லும் அகன்ற மற்றும் நன்கு பராமரிக்கப்படும் குரூம் லேக் சாலை ஜம்பிள்ட் ஹில்ஸ்சின் ஒரு மலைப் பாதை வழியாகச் செல்கிறது. இச்சாலை முன்னர் குரூம்ஸ் படுகையின் சுரங்கங்களை நோக்கிச் சென்றன, ஆனால் அவை மூடப்பட்ட பிறகு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் சுற்றுச் செல்வழி ஓர் சோதனைச்சாவடி வழியாகச் சென்றாலும் தளத்தைச் சுற்றியுள்ள தடை செய்யப்பட்ட பகுதி கிழக்கு திசை வரை நீண்டு செல்கிறது. தடை செய்யப்பட்ட பகுதிக்கு அப்பால் குரூம் லேக் சாலை கிழுக்கு நோக்கிச் சென்று டிகாபூ பள்ளத்தாக்கு தளத்தை அடைவதற்கு முன் பல்வேறு புழுதி படிந்த சிறு பண்ணைகளின் வாயில்களைக் கடந்து, ராசெல்லின் தெற்கிலுள்ள "வேற்று கிரக நெடுஞ்சாலை" எனப்படும் மாகாண சாலை 375 உடன் கலக்கிறது.

குரூம் லேக்கில் நடைபெறும் செயல்பாடுகள்

[தொகு]

குரூம் லேக் மரபு ரீதியிலான விமானப் படைத்தளம் அல்ல, முன்னனி படை விமானங்கள் பொதுவாக அங்கு நிறுத்தப்படுவதில்லை. அதற்கு பதிலாக புதிய விமானங்களைப் பயிற்றுவிக்க, சோதிக்க, மேம்படுத்தக் கூடிய காலங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்க வான்படையாலோ அல்லது CIA போன்ற வேறு முகமையாலோ அங்கீகரிக்கப்பட்ட பின்பு அவை பொதுவாக சாதாரணமான விமானப் படைத்தளத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

பனிப்போரின் உச்ச காலகட்டத்தில் சோவியத் உளவு செயற்கைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட குரூம் லேக் படங்களுடன், இதன் பின்னர் உள்நாட்டு செயற்கைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் விரிவான முறையில் தளத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் பதிவுசெய்தன. இப்படங்கள் தளத்தைப் பற்றிய சிறிய முடிவுகளையே கொடுத்து, தளம் பற்றிய விளக்கமற்ற, நீண்ட விமான ஓடுதளம், நிறுத்துமிடம் மற்றும் ஏரி போன்ற விவரங்களைக் கொடுத்துள்ளன.

ரெட் ஈகிள்ஸ்

[தொகு]

குரூம் "ரெட் ஈகிள்ஸ்" எனப்படும் கைல் பெக்கின் 4477 வது சோதனை மற்றும் மதிப்பீட்டு படையணியின் அடிப்படைக் கூறுகளைக் கொண்ட இல்லமாகத் திகழ்ந்து, சோவியத் (கிழக்கு முகாமிலிருந்து ஓடி வரும் விமானிகளிடமிருந்து பெறப்பட்டவை) வடிவமைப்பு கொண்ட விமானங்களை இரகசியமாக ஆராய்ந்தும் பயிற்சிக்குப் பயன்படுத்தியும் வந்தது. மேலும் வருடந்தோறும் நடைபெறும் கான்ஸ்டண்ட் பெக் [13][14] பயிற்சியின் ஒரு பகுதியாக அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளின் விமானிகளுக்கு எதிராக பறக்க வைக்கப் படுகின்றன. பனிப்போரின் இறுதியில், அமெரிக்க விமானப் படையும் அதன் படைத்துறை சாராத ஒப்பந்தக்காரர் டாக்-ஏர் நிறுவனமும் இந்த இரகசிய விமானப்படையை உக்ரைன்[15] மற்றும் மால்டோவா[16] போன்ற நாடுகளிடமிருந்து வாங்கப்பட்ட விமானங்கள் மூலம் மிகுதியாக்கி, ரைட்-பாட்டர்சன் விமானப் படைத் தளத்திலிருந்து இயக்கின.[16]

யு-2 திட்டம்

[தொகு]

குரூம் லேக் இரண்டாம் உலகப் போரில் குண்டுவீசவும் சுடும் பயிற்சிக்கும் பயன்படுத்தப்பட்டது, ஆனால் 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை கைவிடப்பட்டுக் கிடந்தது, லாக்ஹீட் நிறுவனத்தின் ஸ்கன்க் பணிக் குழுவால் அப்போது வரவிருந்த உளவு விமானங்களான யு-2 க்கு தகுந்த சோதனைத் தளமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.[17][18] ஏரிப்படுகையை பொருத்தமான சிக்கல் வாய்ந்த சோதனை விமானங்களை இயக்க ஓடுதளமாகப் பயன்படுத்தினர், மேலும் வெளியாட்களின் கண்களிலிருந்தும், வெளி இடையூறுகளிலிருந்தும் எமிகரண்ட் பள்ளத்தாக்கின் மலைத் தொடர்களும், NTS புற எல்லைகளும் தளத்தைப் பாதுகாத்தன.

லாக்ஹீட் நிறுவனம், அவசரத் தேவைக்கான தளத்தை அவ்விடத்தில் ஏற்படுத்தியது, அப்போது அது சைட் இரண்டு அல்லது "த ராஞ்ச்" என அழைக்கப்பட்டது. அதில் சிறிய அளவிலான குடில்களும், பணிமனைகளும், இழுத்துச் செல்லக்கூடிய வீடுகளில் வசித்துவந்த சிறு குழுக்களும் இருந்தன. மூன்றே மாதங்களில் 5000 அடி நீள ஓடுதளம் அமைக்கப்பட்டு[17] 1955 ஆம் ஆண்டு ஜூலையில் பயன்பாட்டிற்கும் வந்தது. த ராஞ்ச் அதன் முதல் யு-2 உளவு விமானத்தை 1955 ஆம் ஆண்டு ஜூலை 24 அன்று பர்பாங்கிலிருந்து சி-124 குளோப்மாஸ்டர் II கார்கோ விமானத்தின் மூலம் பெற்றது. அதனுடன் டக்ளஸ் டிசி-3 விமானத்தின் மூலம் லாக்ஹீட் தொழில்நுட்ப வல்லுநர்களும் வந்தனர்.[17] முதல் யு-2 குரூமிலிருந்து 1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 அன்று பறந்தது. சிஐஏ வின் கட்டுப்பாட்டிலான முதல் யு-2 குழு சோவியத் பகுதிகள் மீது 1956 களின் மத்தியில் உளவுப் பணியில் ஈடுபட்டது.

இதே காலகட்டத்தில் NTS தொடர்ச்சியாக வரிசையான வளிமண்டல அணுச் சோதனைகளை நடத்தியது. யு-2 வின் இயக்கமானது அடிக்கடி நடைபெற்ற ப்ளம்ப்பாப் வரிசை அணுச் சோதனைகளினால் 1957 ஆம் ஆண்டு முழுவதும் அடிக்கடி தடைப்பட்டது. அவற்றால் NTS இன் இரண்டு டஜன் ஆயுதங்கள் சேதமடைந்தன. ஜூலை 5 அன்று ப்ளம்ப்பாப்-ஹூட் அணுச் சோதனை வெடிப்பு குரூம் முழுவதையும் சிதறச் செய்ததால் தற்காலிகமாக தளம் அப்புறப்படுத்தப்பட்டது.

பிளாக்பேர்ட் திட்டங்கள்

[தொகு]

யு-2 உருவாக்கம் முடியும் முன்பே லாக்ஹீட் தனது அடுத்த திட்டமான CIA இன் ஆக்ஸ்கார்ட் ஏ-12 தொடர்பான உயர்ந்து சென்று உளவு பார்க்கும் மாக்-3 விமானத் திட்டத்தைத் தொடங்கியது. அது பின்னாளில் USAF SR-71 பிளாக்பேர்ட் என்றழைக்கப்பட்டது. பிளாக்பேர்ட்டின் பறக்கின்ற தன்மையும் பராமரிப்புத் தேவையும் குரூம் லேக்கில் பெரிய அளவிலான கட்டடங்களையும், ஓடுதளத்தையும் ஏற்படுத்தும் அவசியத்தைக் கொடுத்தன. முதல் ஏ-12ன் முன்மாதிரி குரூமில் 1962 ஆம் ஆண்டில் பறந்த போது முக்கிய ஓடுதளம் நீட்டிக்கப்பட்டு8,500 அடி (2,600 m), தளமானது செருக்குடன் 1000 பேருடன் முழுமையாக்கப்பட்டது. அதில் எரிபொருள் நிரப்பும் வசதி, ஒரு கண்காணிப்பு கோபுரம் மற்றும் சாய்சதுர வடிவுடைய பேஸ்பால் அரங்கம் போன்றவை இருந்தன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு, குரூமிலிருந்த சிறிய படை சாராத சுரங்கம் மூடப்பட்டது, பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பகுதி பிரத்யேகமான இராணுவ பாதுகாப்புப் பகுதியாக்கப்பட்டது. குரூமில் பல வகையான பிளாக்பேர்ட் விமானங்களின் முதல் பயணம் நிகழ்ந்துள்ளது, ஏ-12, தயாரிப்பு தோல்வியடைந்த ஒய்-எஃப்-12 துரத்தும் விமானம் மற்றும் பிளாக்பேர்ட் அடிப்படையிலான விமானியற்ற டி-21 விமானம் போன்றவை இதில் அடங்கும். ஏ-12 1968 ஆம் ஆண்டு வரை குரூம் ஏரியிலிருந்தது. (எஸ் ஆர்-71 முதல் முறையாக கலிபோர்னியாவிலுள்ள பால்ம்டேலில் பறந்தது.)

ஹேவ் புளூ/F-117 திட்டம்

[தொகு]

லாக்ஹீட் ஹேவ் புளூ முன்மாதிரியான மறைந்து தாக்கக்கூடிய போர் விமானம் (F-117 நைட்ஹாகின் ஒரு சிறிய கருத்து நிரூபன மாதிரி) முதன் முதலில் 1977 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குரூமில் பறந்தது.[19] சோதனையானது F-117 மறைந்து தாக்கக்கூடிய போர் விமானங்களின் ஆரம்ப உருவாக்கமாக மாறிய காலமான 1981 ஆம் ஆண்டு மத்தி வரை நுண்-இரகசிய முன்மாதிரிகளின் சோதனைத் தொடர்கள் அங்கே தொடரப்பட்டன. வானூர்தி பயண-சோதனையோடு கூட, ரேடார் புரொஃபைலிங், F-117 ஆயுதங்கள் சோதனை போன்றவற்றையும் குரூம் நிகழ்த்தி வந்தது, மேலும் முதல் ரக USAF F-117 வானூர்தி ஓட்டுனர்களின் முதல் குழு பயிற்சியிடமாகவும் இது அமைந்திருந்தது. அதற்கு பின்னதாக, கூடுதல் உயர்வாக வகைப்படுத்தப்படுகிற முனைப்பு-சேவை F-117 நடவடிக்கைகள் அருகிலுள்ள டோனொப் பரிசோதனை எல்லைப்பகுதி விமானநிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு இறுதியாக ஹாலோமேன் விமானப்படை தளத்திற்குச் சென்றது.

"புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது" என்றும் 1950 மெக்கரன் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் "பயங்கரமான ஆயுதங்களின் பயன்பாடு அங்கிகரிக்கப்பட்டுள்ளது" என்றும் ஏரியா 51 எல்லையிலும் எச்சரிக்கைக் குறியீட்டிலும் குறிப்பிட்டிருக்கும். மலைஉச்சியில் அரசாங்க வாகனம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும்; அங்கிருந்து பாதுகாப்பு முகவர்கள் குரூம் ஏரியை கண்காணித்து வருவார்கள்.

பின்பு வந்த நடவடிக்கைகள்

[தொகு]

1983 ஆம் ஆண்டு F-117 நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதிலிருந்து குரூம் ஏரியில் இருந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்தன.[20] தளம் மற்றும் அதனோடு தொடர்புடைய ஓடுபாதை அமைப்பும் விரிவுபடுத்தப்பட்டது.[20][21] நில நிர்வாகச் செயலகத்தினால் முன்பு நிர்வகிக்கப்பட்ட 3,972 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்துவதைத் தடைசெய்து, இப்போதுவரை தளத்தை சிறிதளவே புலப்படும்படி வைத்திருக்கும் அருகிலுள்ள மலைகளைச் சேர்த்துக்கொள்வதற்காக, 1995 ஆம் ஆண்டு அரசாங்கக் கூட்டமைப்பு, தளத்தைச் சுற்றியுள்ள விலக்கப்பட்ட பகுதியை விரிவு செய்தது.[20]

NTS எல்லைப்பகுதிக்கு அப்பாலுள்ள பல சிறிய சமூகத்தார் வாழ்கின்ற சிறிய எண்ணிக்கையிலான பணியாளர்களின் தேவைகளுக்காக, குரூம் ஏரி சாலையிலுள்ள பேருந்துப் பயண வசதி கொடுக்கப்பட்டுள்ளது (இருப்பினும், இந்த பணியாளர்கள் குரூமிலோ NTSன் மற்ற தளங்களிலோ வேலைசெய்து கொண்டிருந்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை). பேருந்து, குரூம் ஏரி சாலையில் பயணம் செய்து க்ரிஸ்டல் ஸ்பிரிங்ஸ், ஆஷ் ஸ்பிரிங்ஸ் மற்றும் அலமோவில் நிறுத்தப்படும் மற்றும் அலமோ கோர்ட் ஹவுசில் இரவுமுழுவதும் நிறுத்தப்படும்.

ஓடுபாதைகள்

[தொகு]

இந்த தளத்தில் மொத்தம் ஏழு ஓடுபாதைகள் இருக்கின்றன, அதில் ஒன்று இப்போது மூடப்பட்டதாகத் தெரிகிறது. மூடப்பட்ட ஓடுபாதையான 14R/32L இன் மொத்த நீளமும் நிறுத்தப்பாதையைச் சேர்க்காமல் ஏறக்குறைய 7,100 மீட்டர்களில் (23,300 அடிகள்) அமைந்து மிகவும் நீளமானதாக உள்ளது. பிற ஓடுபாதைகளான 14L/32R மற்றும் 12/30 ஆகியவற்றின் நீளம் முறையே 3,650 மீட்டர்கள் (12,000 அடிகள்) மற்றும் 1,650 மீட்டர்கள் (5,400அடிகள்) ஆகும். இவை இரண்டும் நிலக்கீழ் ஓடுபாதைகளாகும். நான்கு ஓடுபாதைகள் சால்ட் ஏரியில் அமைந்துள்ளன. இந்த நான்கு ஓடுபாதைகளில் 09L/27R மற்றும் 09R/27L ஆகிய ஓடுபாதைகள் ஏறக்குறைய 3,500 மீட்டர்கள் (11,450 அடிகள்) நீளத்தையும் பிற இரண்டு ஓடுபாதைகளான 03L/21R மற்றும் 03R/21L ஆகியவை ஏறக்குறைய 3,050 மீட்டர்கள் (10,000 அடிகள்) நீளத்தையும் கொண்டுள்ளன. இந்த தளத்தில் சிறிய, விமானம் இறங்கும் தளமும் உள்ளது.[22][23]

2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஏர்லைன் வானூர்தி ஓட்டுனர்களின் வானூர்தி வழிகாட்டி அமைப்புகளின் சமீபத்திய ஜெப்பீசன் தரவுத்தள திருத்தத்துடன் ICAO விமானநிலைய அடையாளம் கண்டுபிடிக்கும் KXTA குறியீட்டில் தளம் காணப்பட்டதை ஏர்லைன் வானூர்தி ஓட்டுனர்கள் கவனித்து அதை "வீட்டுச்சூழல் கொண்ட விமானநிலையமாக" பட்டியலிட்டனர்.[24] விமானநிலைய தரவுகளின் தற்செயலான வெளியீட்டால், KXTA இப்போது பொது வழிகாட்டி தரவுத்தளங்களில் தோன்றினாலும் கூட அதை ஒரு வழிப்புள்ளியாகவோ எந்த ஒரு விமானத்திற்கு ஒரு சேரிடமாகவோ மாணவ வானூர்தி ஓட்டுநர்கள், கருதக்கூடாது என்று வானூர்தி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் கழகத்தால் (AOPA)திட்டவட்டமாக KXTA குறித்து எச்சரித்து அறிவுரை வழங்கப்பட்டது.[24]

ஏரியா 51 இல் இருக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் பகுதிகள்

[தொகு]
ஏரியா 51 குறித்த கேள்விக்கு பதில் கொடுக்கும் வகையில் USAFலிருந்து வந்த ஒரு கடிதம்

USAF க்கு ஏரிக்கு அருகே "நடவடிக்கைத் தளம்" இருக்கிறது என்பதை அரசாங்கக் கூட்டமைப்பு குறிப்பாக (பல நீதிமன்ற வழக்குகளிலும் அரசாங்க கட்டளைகளிலும்) ஒத்துக்கொள்கிறது, ஆனால் இதற்கு மேல் இது எந்தத் தகவலையும் வழங்கவில்லை.

நெல்லிஸ் எல்லைப்பகுதியைப் போல் அல்லாது இப்பகுதியானது ஏரியைச் சுற்றியிருக்கும் அப்பகுதி குடிமக்களுக்கும் சாதாரண இராணுவ வான் போக்குவரத்திற்கும் நிரந்தரமான தடுக்கப்பட்டதாக இருக்கிறது. ரேடார் நிலையங்கள் அந்தப் பகுதியைப் பாதுகாக்கிறது மற்றும் அங்கிகரிக்கப்படாத பணியாளர்களை உடனே வெளியேற்றுகிறது. NAFR இல் பயிற்சியில் இருக்கும் இராணுவ வானூர்தி ஓட்டுனர்கள் கூட குரூமின் வான்பகுதியைச் சுற்றியிருக்கும் தவிர்க்கப்பட்ட "பெட்டிக்குள்" தற்செயலாகச் சுற்றினால் கூட அவர்கள் மேல் ஒழுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.[25]

தென்னக நெவிடாவை காண்பிக்கக்கூடிய USGS செயற்கோள் புகைப்படங்களின் தொகுப்பு. NTS மற்றும் சுற்றியுள்ள நிலங்கள் பார்க்ககூடியதாக இருக்கிறது; NAFR மற்றும் அதனுடைய அண்டை நிலங்கள் அகற்றுபட்டுவிட்டன.

வாக்கன்ஹட்டில் EG&Gயின் பாதுகாப்பு உப ஒப்பந்தக்காரர்களுக்காக வேலைசெய்யும் சீருடை அணிந்திருக்கும் தனியார் பாதுகாப்பு பாதுகாவலர்களால் சுற்றுவட்ட பாதுகாப்புக் கொடுக்கப்படும்.[26] அவர்கள் பாலைவன உருமறைப்பு ஜீப் செரோக்கீகளிலும் ஹம்வீஸிலும் மற்றும் மிகவும் சமீபத்தில் உயர்ரக திராட்சை நிறமான ஃபோர்டு F-150 பிக்கப்ஸ் மற்றும் சாம்பல் நிற சேவி 2500 4X4 பிக்கப்ஸிலும் ரோந்துப்பணியில் ஈடுப்பட்டிருப்பார்கள். பாதுகாவலர்கள் M16களை ஏந்தியிருந்தாலும் கூட ஏரியா 51 பார்வையாளர்களுடன் எந்த வித வன்முறைச் சண்டைகளிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படவில்லை. அதற்கு மாறாக லிங்கன் கவுண்டி ஷெரிப்பிற்காக சுற்றளவு மற்றும் வானொலி அருகே பாதுகாவலர்கள் பொதுவாக பார்வையாளர்களை பின்தொடர்வார்கள். பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள நிறுத்த எச்சரிக்கைகளை கவனிக்காமல் அத்துமீற வன்முறையாளர்கள் முயற்சித்தால் பயங்கரமான ஆயுதங்களைப் பயன்படுத்த அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. சுமார் 600 டாலர் அபராதம் போன்ற சாதாரண வகையான நடவடிக்கை எடுக்கப்படும். FBI ஏஜெண்டுகளிடமிருந்து பின்-தொடர் வருகைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்று சில பார்வையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் தெரிவிக்கிறார்கள். தளத்தில் புகைப்படக் கருவிகளைப் பயன்படுத்த முயற்சித்ததற்காக சில பார்வையாளர்கள் பொது நிலத்தில் காவலில் நிறுத்தப்பட்டார்கள். HH-60 பேவ் ஹாக் உலங்கு வானூர்திகள் (எலிகாப்ட்டர்கள்) மூலமாகவும் புதைக்கப்பட்ட இயக்கத்தில் இருக்கும் உணர்கருவிகள்[27][28][29] பயன்படுத்தி கடுங்கண்காணிப்பு செய்யப்படுகிறது.

அரசாங்க வரைபடங்களில் இந்தத் தளம் காணப்படாது;[30] பகுதிக்கான இடக்கிடப்பியல் வரைபடத்தில் நீளமான-பயன்படுத்தப்படாத குரூம் தாதுசுரங்கம் மட்டுமே காண்பிக்கப்படும்.[31] நெவிடா போக்குவரத்து துறையினால் வெளியிடப்பட்ட ஒரு குடியியல் வானூர்தி பயணவரைபடத்தில் பெரிய தடை செய்யப்பட்ட பகுதி காண்பிக்கப்பட்டிருக்கிறது.[32] ஆனால் அது நெல்லிஸின் தடைசெய்யப்பட்ட காற்றிடத்தின் பகுதியாகத் தான் வரையறுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிக்கான அதிகாரப்பூர்வமான ஏரோனாட்டிகள் வழிகாட்டி வரைபடங்கள் குரூம் ஏரியை காண்பிக்கிறது ஆனால் விமானநிலைய தளங்களை தவிர்த்துவிட்டது.[33] அதே போல தேசிய உலகவரைபட நூலில் நெவிடாவில் இருக்கும் கூட்டமைப்பு நிலங்களைக் காண்பிக்கிறது.[34] ஆனால் குரூம் கட்டத்தையும் நெல்லிஸ் மலைத்தொடர்களின் மற்ற பகுதிகளையும் வேறுபடுத்தவில்லை. 1960களில் அமெரிக்க கொரோனா ஸ்பை சாட்டிலைட்டால் எடுக்கப்பட்ட மூலத் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக தடைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும் தடைநீக்கம் செய்யப்படுவதற்கு முன்னதாக திருத்தியமைக்கப்பட்டது; தகவல் கேள்விகளின் சுதந்திரத்திற்கு பதில் கொடுப்பதற்காக காண்பிக்கப்பட்ட வெளிப்பாடுகளை (குரூம் மற்றும் முழு NAFR வரைபடம்) அழித்துவிடும் படி அரசாங்கம் ஆணையிட்டது.[35] 2004 ஆம் ஆண்டில் டேரா செயற்கைக்கோள் படங்கள் (பொதுவாக எல்லோருக்கும் கிடைக்கக்கூடியதாக இருந்தவை) இணைய சேவையகங்களிலிருந்து (மைக்ரோசாஃப்ட்டின் "டேராசர்வர்" சேர்த்து) அகற்றப்பட்டுவிட்டது[36] மற்றும் மோனோகிரோம் 1மி ரிசல்யூஷன் USGS தரவு கொட்டிடத்திலிருந்து எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்யப்பட்டது. NASA லாண்ட்சாட் 7 படங்கள் இப்போதும் கிடைக்கின்றன (இவை NASA வார்ல்ட் விண்டில் பயன்படுத்தப்படுகின்றன). பிற செயற்கைக்கோள் உளக்காட்சி வழங்குபவைகள் மூலம் எடுக்கப்பட்ட உயர் தெளிவுத்திறன் (மற்றும் மிகவும் சமீபத்திய) கொண்ட படங்கள் (ரஷியன் புரொவைடர்ஸ் மற்றும் IKONOS சேர்த்து) வணிக ரீதியாகவும் கிடைக்கின்றன. ஓடுபாதைக் குறிகள், தள வசதிகள், வானூர்தி மற்றும் வாகனங்கள் ஆகியவற்றை இவை அதிகமாக விவரித்துக் காண்பிக்கின்றன.

நெவிடாவின் மாநில அரசாங்கம் தளத்தைச் சுற்றியிருக்கும் நாட்டுப்புறக் கலைகளை அடையாளம் கண்டுகொண்டு வேறுவகையாக புறக்கணிக்கப்பட்ட பகுதியின் சில சுற்றுலாத்துரை சாத்தியங்களை வழங்கலாம் என்பதற்காக ஏரியா 51 க்கு அருகில் இருக்கும் மாநில வழி 375 பிரிவை "த எக்டிராடெரஸ்டிரியல் நெடுஞ்சாலை" என்று மறுபெயரிட்டு அதனுடைய நீளத்துடன் குறியீடுகளையும் விளக்கி அழகுநயமிக்கதாக காண்பித்தது.[37]

ஒரு மூடிய மின்சுற்றுக் கொண்ட புகைப்படக்கருவி ஏரியா 51 இன் சுற்றளவைக் கண்காணிக்கிறது.

தளங்கள் தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு உரிமையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தளத்திற்குள் இருக்கும் கூட்டமைப்புச் சொத்து மாநில மற்றும் உள்ளூர் வரிகளிலிருந்து விடுவிக்கப்பட்டதாகும். பகுதிக்குள் நுழைந்து மதிப்பீடு செய்யமுடியாத லிங்கன் கவுண்டி வரி மதிப்பீட்டாளருக்கு தளம் 2 மில்லியன் டாலரை வரி மதிப்பாக அறிவித்தது என்று 1994 ஆம் ஆண்டு ஏரியா 51 ஆராய்ச்சியாளரான கிளென் காம்பெல் கூறினார்.[38]

சுற்றுச்சூழல் வழக்கு

[தொகு]
ஏரியா 51ஐ டிகாபூ சிகரத்திலிருந்து பார்க்கலாம்

1994 ஆம் ஆண்டு USAF மற்றும் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏஜென்சிக்கு எதிராக ஐந்து பெயர் குறிப்பிடாத குடியான ஒப்பந்தக்காரர்களும் விதவைகளான, வால்டர் காசா மற்றும் ராபர்ட் புரோஸ்ட் ஒப்பந்தக்காரர்களின் மனைவிகளும் வழக்கு தொடுத்தனர். ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியரான ஜோனதான் டர்லே, குரூமில் திறந்த பள்ளங்களிலும் கிடங்குகளிலும் அதிக அளவிலான தெரியாத வேதிப்பொருட்கள் எரிக்கப்படும் போது இவர்கள் அங்கே இருந்தார்கள் என்று அந்த வழக்கில் கூறப்பட்டிருக்கிறதாகக் கூறினார். புகாரளித்தவர்களிடம் உயிர்த்திசுப் பரிசோதனைகள் செய்யப்பட்டு ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக உயிர் வேதியியல் அறிஞர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்டதில் அவர்களுடைய உடற்கொழுப்பில் டையாக்ஸின், டைபென்சோஃபியூரன் மற்றும் டிரைக்குளோரோஎதிலின் ஆகியவை அதிக அளவு இருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் குரூமில் வேலை செய்ததனாலேயே தோல், கல்லீரல் மற்றும் சுவாசத்திற்குறிய பாதிப்புகள் ஏற்பட்டது, மேலும் இதுவே ஃப்ரோஸ்ட் மற்றும் காசாவின் மரணத்திற்கும் காரணமானது என்று குற்றம் சாட்டினார்கள். USAF சட்டவிரோதமாக நச்சுப் பொருட்களைக் கையாண்டது மற்றும் வளங்கள் பாதுகாப்பு மற்றும் மீட்பு சட்டத்தை (ஆபத்தான பொருட்களைக் கையாளுவதைக் கட்டுப்படுத்துகிறது) செயல்படுத்தும் கடமையிலிருந்து EPA தவறிவிட்டது என்றும் கூறி அவர்கள் தொடர்ந்து அனுபவித்த காயங்களுக்கு நஷ்ட ஈட்டை அவர்களுடைய வழக்கு கோரியது. எஞ்சியிருப்பவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு உதவும் என்று நம்பி அவர்கள் தவறாக வெளிப்படுத்திய வேதிப்பொருட்கள் குறித்த விரிவான தகவலையும் அவர்கள் கோரினர். காங்கிரஸ் உறுப்பினர் லீ எச். ஹாமில்டன் அமைப்பின் முந்தைய தலைவராவார். புலனாய்வுக் குழு 60 மினிட்ஸ் செய்தியாளரான லெஸ்லி ஸ்டாலிடம் "ஏரியா 51 தங்களை சட்டவழக்குகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அவர்களைக் குறித்த எல்லா தகவலையும் விமானப்படை வகைபிரிக்கிறது" என்று கூறியது.[39]

மாநில இரகசியங்கள் சிறப்பனுமதியைக் குறிப்பிட்டுக் காட்டி, வகைபிரிக்கப்பட்ட ஆவணங்களையோ இரகசிய சாட்சிகளின் பரிசோதனைகளையோ வெளிக்காட்டுவதை அனுமதிக்கக்கூடாது. இது வகைபிரிக்கப்பட்ட தகவல்களை வெளிக்காட்டிவிடும் மற்றும் தேசிய பாதுகாப்பையும் அச்சுறுத்தும் என்றும் குற்றம் சாட்டி, சோதனை நீதிபதியான அமெரிக்க மாவட்ட நீதிபதி ஃபிலிப் புரோவிடம் (லாஸ்வேகஸில் இருக்கும் நெவிடா பகுதிக்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றம்) அரசாங்கம் கேட்டுக்கொண்டது.[40] அரசாங்கத்தின் வாதத்தை நீதிபதி புரோ நிராகரித்த போது சுற்றுச்சூழல் வெளிப்படுத்துதல் சட்டங்களிலிருந்து "நெவிடாவின் குரூம் ஏரிக்கு அருகில் இருக்கும் விமானப்படையின் செய்பணி இடத்தை" விடுவித்து ஒரு தலைமைத் தீர்மானத்தை ஜனாதிபதி பில் கிளிண்டன் பிறப்பித்தார். அதன் விளைவாக, சாட்சியம் அதிகமாக இல்லாத காரணத்தினால் புரோ அந்த வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டார். பொருளை வகைபிரிப்பதற்காக அரசாங்கம் அதனுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது என்று ஒன்பதாவது சுற்றிற்கான U.S. மேல்முறையீடுகளின் நீதிமன்றத்திடம் டர்லே மேல்முறையீடு செய்தார். விமானப்படையின் செயலாளரான ஷியலே இ. விட்னல், குரூமிற்கு அருகே இருக்கும் காற்றிலும் தண்ணீரிலும் கலந்திருக்கும் பொருட்கள் பற்றி வெளிப்படுத்தினால் "அது இராணுவ நடவடிக்கையின் திறன்களை அல்லது வகைபிரிக்கப்பட்ட நடவடிக்கைகளின் சிறப்புகளையும் இயல்பையும் வெளிக்காட்டிவிடும்" என்று குறிப்பிட்டு ஒரு வழக்கு தொடுத்தார். ஒன்பதாவது சுற்று, டர்லேவின் மேல்முறையீட்டை நிராகரித்தது[41], மேலும் U.S. உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு மறுத்துவிட்டு வழக்குத்தொடுத்தவர்களின் வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

குரூம் விதிவிலக்கில் தொடரும் ஒரு தீர்மானத்தை ஆண்டுதோறும் வெளியிடுவதை ஜனாதிபதி தொடர்கிறார்.[42][43][44] இதுவும், இதே போன்று மற்ற அரசாங்கப் பேச்சுவார்த்தைகளில் பயன்படுத்தப்படும் குறிப்பாய் அமைந்துள்ள வார்த்தைகள் மட்டுமே, குரூம் ஏரி நெல்லிஸ் வளாகத்தின் மற்றொரு பகுதி என்பதை விட மேலானது என்று அமெரிக்க அரசாங்கம் கொடுத்த ஒரு முறையான அங்கீகாரமாகும்.

F-117 நைட்ஹாக் பொருளை பாதுகாப்பாக கையாளுவதைக் குறித்த ஒரு வகைபிரிக்கப்படாத குறிப்பாணை, 2005 ஆம் ஆண்டு விமானப்படை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. குறையீட்டாளர்கள் வேண்டிக்கொண்ட அதே பொருட்களின் தகவல்களைப் (அரசாங்கம் கோரிய தகவல் வகைபிரிக்கப்பட்டது) பற்றி தான் இது விவாதித்தது. அந்தக் குறிப்பாணையைக் குறித்து செய்தியாளர்களுக்குத் தெரியவந்தவுடனே அது சிறிது காலத்திலேயே நீக்கப்பட்டுவிட்டது.[45]

1974 ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வுக்கூட ஒளிப்பதிவு

[தொகு]

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், விண்வெளி வரலாற்றாசிரியரான ட்வானே A. டே த ஸ்பேஸ் ரிவியூ என்ற ஆன்லைன் வானியல் பத்திரிகையில் "விண்வெளிவீரர்கள் மற்றும் ஏரியா 51: விண்வெளி ஆய்வுக்கூட சம்பவம்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். 1974 ஆம் ஆண்டு CIA இயக்குநரான வில்லியம் கோல்பிக்கு ஒரு பெயர் தெரியாத CIA அதிகாரியால் எழுதப்பட்ட குறிப்பாணையை அடிப்படையாகக் கொண்டு அந்தக் கட்டுரை இருந்தது. விண்வெளி ஆய்வுக்கூடம் 4 இல் இருந்த விண்வெளி வீரர்கள் அவர்களின் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக, கவனமில்லாமல் குறிப்பாணையில் சொல்லப்பட்டிருந்த ஓர் இடத்தை புகைப்படம் எடுத்துவிட்டனர் என்று அந்தக் குறிப்பாணை தெரிவித்தது:

இவ்வாறு செய்யக்கூடாது என சிறப்பு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. <redacted> மட்டுமே இது போன்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்ட ஒரே இடமாகும்.

அந்த இடத்தின் பெயர் தெளிவில்லாமல் இருந்தாலும், அது குரூம் ஏரி தான் என்பதை டே நம்புவதற்கு சூழ்நிலைச் சந்தர்ப்பங்கள் வழிவகுத்தன. டே குறிப்பிட்டபடி:

வேறு விதமாகக் கூறுவதானால் குரூம் ஏரியைப் போல உலகில் வேறு எந்த இடமும் இவ்வளவு பிரத்யேகமானதாக இல்லை என CIA கருதியது.[46][47]

அந்தப் படங்கள் வகைபிரிக்கப்பட வேண்டுமா என்று ஏஜென்சிகளின் கூட்டமைப்புக்களுக்கு இடையே வாதம் ஏற்பட்டதை அந்தக் குறிப்பாணை விவரிக்கிறது. பாதுகாப்புத் துறை ஏஜென்சிகள் அவைகளை வகைபிரிக்கவேண்டும் என்றும் NASA மற்றும் மாநில துறை அந்த வகைப்பிரித்தலுக்கு எதிராகவும் வாதிட்டனர் என்று அது விவரிக்கிறது. வகைபிரிக்கப்படாத படங்களின் சட்ட உரிமை, கடந்தகாலத்தை அடிப்படையாகக் கொண்டே வகைபிரிக்கப்பட வேண்டும் என்று அந்தக் குறிப்பாணையே கேள்வி எழுப்பியது.

குறிப்பாணையில் உள்ள குறிப்புரைகள் DCI (மத்தியப் புலனாய்வு இயக்குநர்) கோல்பியாலே கையால் எழுதப்பட்டதாகத் தெரிகிறது, அதில்:

அவரே அதை எழுப்பினார்—மாகாணத் துறை மக்கள் அவ்வாறே உறுதியாக நம்பினர். ஆனால் அவர் எனக்கு முடிவெடுக்கும் நிலையைக் கொடுத்தார் (DCI)—அதிலிருந்து பாதுகாப்புக்காக நான் சில கேள்விகளைக் ஒப்புக் கொண்டேன்:

  1. USSR முதலிலிருந்தே இதைக் கொண்டுள்ளது
  2. இதிலிருந்து உண்மையில் என்ன தெரியவருகிறது?
  3. அது தெரியவந்தால் அங்கு வகைபிரிக்கப்பட்ட USAF பணி நடைபெறுகிறது என நாம் கூறுவோம் அல்லவா?

விண்வெளி ஆய்வுக்கூட உளக்காட்சிக் குறித்த கலந்துரையாடலின் விளைவுகளைத் தடைநீக்கம் செய்யப்பட்ட ஆவணங்கள் வெளிப்படுத்தாது. விண்வெளி ஆய்வுக்கூடம் 4 இன் மீதமுள்ள புகைப்படங்களுடன் சேர்த்து, அரசாங்கக் கூட்டமைப்பின் செயற்கைக்கோள் படக் காப்பகத்தில் இந்தப் புகைப்படங்களும் காணப்பட்ட போதும், 2007 ஆம் ஆண்டு டே கவனித்ததற்கு முன்னதாக யாரும் அதைக் கவனித்ததாக எந்தப் பதிவேட்டிலும் இல்லை என்ற கருத்தை மறைமுக வாதங்கள் நிரூபித்தன.[48]

யு.எஃப்.ஒ. மற்றும் ஏரியா 51 குறித்த பிற சதிக் கோட்பாடுகள்

[தொகு]

அசாதாரணமான நிகழ்வுகளின் அறிக்கைகளுடன் அதனுடைய இரகசிய இயல்பு மற்றும் வகைபிரிக்கப்பட்ட விமான ஆராய்ச்சியுடன் இருக்கும் சந்தேகத்திற்கிடமற்ற தொடர்பு ஆகியவை சேர்ந்து, ஏரியா 51 ஒரு நவீன UFO மற்றும் சதிக் கோட்பாடுகளின் மையமாவதற்கு வழிவகுத்தது. ஏரியா 51 இல் நிகழும் செயல்களாக அவ்வகைக் கோட்பாடுகளில் கூறப்படுவனவற்றில் சில:

  • விழுந்து நொறுங்கிய வேற்றுலக விண்கலத்தின் (ரோஸ்வெலில் மீட்கப்பட்டது என்று நம்பப்படுகிற பொருட்களையும் சேர்த்து), சேகரிப்பு, பரிசோதனை, மற்றும் மீள் பொறியியல், அங்கே வாழ்பவர்களின் ஆய்வு (உயிரோடு இருப்பவர் மற்றும் இறந்தவர்), மற்றும் வேற்றுலகத் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு வானூர்திகள் உற்பத்தி செய்யப்படுவது.
  • புவிக்கப்பாலானவைகளுடன் சந்திப்புகள் அல்லது கூட்டுப் பணிகள்.
  • விநோதமான ஆற்றல் வாய்ந்த ஆயுதங்கள் (SDI அல்லது பிற பயன்பாட்டிற்காக, மற்றவை) அல்லது வானிலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் உருவாக்கம்.
  • காலப் பயணம் மற்றும் டெலிப்போர்டேஷன் தொழில்நுட்பங்களின் உருவாக்கம்.
  • அரோரா திட்டத்துடன் தொடர்பான அசாதாரணமான மற்றும் விந்தையான பயண முறைமைகளை உருவாக்குதல்.
  • நம்பப்படுகிற தெளிவில்லாத ஓர் உலக அரசாங்கம் அல்லது மெஜஸ்டிக் 12 நிறுவனம் தொடர்பான செயல்பாடுகள்.

கண்டம் கடக்கும் நிலத்துக்கீழ் இருக்கும் இரயில்சாலை அமைப்பு, உருமறைக்கப்பட்டதும் நிலக்கீலில் தண்ணீர்ப்பட்டால் தற்காலிகமாகத் தென்படும் உருமறையும் விமானத்தளம் (லூயிஸ் காரலின் செஷயர் பூணையைக் குறிக்கும் விதமாக "செஷயர் ஏர்ஸ்டிரிப்" என்று செல்லப்பெயரிடப்பட்டது), மேலும் வேற்றுலக தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பொறியியல் ஆகியவை குரூம் அல்லது அங்கிருந்து 8.5 மைல்கள் தெற்கில் இருக்கும் பாப்பூஸ் ஏரியில் இருக்கும் நிலத்தடி வசதிகளில் அமைந்திருந்தன என்பது குறித்து பல கோட்பாடுகள் விவாதிக்கின்றன. குரூமில் இருக்கும் தெளிவாகத் தெரியக்கூடிய தரையிரங்கும் ஓடுபாதையை செயற்கைக்கோள் படங்கள் பொதுவாக கிடைக்ககூடியதாக வெளிக்காட்டுகிறது. ஆனால் பாப்பூஸ் ஏரியில் உள்ளவற்றை அவை காட்டுவதில்லை.

ஏரியா 51 இல், OXCART மற்றும் NERVA போன்ற சோதனை திட்டப்பணிகளில் பணிபுரிந்தவர்கள், அவர்கள் அறியாமலேயே UFO கவனத்தையும் மற்ற வதந்திகளையும் அவர்களுடைய பணி (2,850 OXCART சோதனை விமானங்களையும் சேர்த்து) தூண்டிவிட்டது என்று ஒப்புக்கொள்கின்றனர்:[6]

The shape of OXCART was unprecedented, with its wide, disk-like fuselage designed to carry vast quantities of fuel. Commercial pilots cruising over Nevada at dusk would look up and see the bottom of OXCART whiz by at 2,000-plus mph. The aircraft's titanium body, moving as fast as a bullet, would reflect the sun's rays in a way that could make anyone think, UFO.[6]

நிலத்துக் கீழே மிகப்பெரிய இரயில்சாலை அமைப்பு இருப்பதை அவர்கள் மறுத்தாலும் ஏரியா 51 இன் பல நடவடிக்கைகள் (இன்னும் நடந்துகொண்டிருப்பதாகவே கருதப்படுகிறது) நிலத்திற்குக் கீழேயே நடைபெறுவது வழக்கம்.[6]

ஏரியா 51 சதிக் கோட்பாடுகளைப் பற்றிய நிகழ்வுகளைப் பற்றித் தெரியும் என்று பலர் குறிப்பிடுகிறார்கள். அமெரிக்க அரசாங்கம் வைத்திருந்த வேற்றுலக விண்கலத்திற்காக பணிபுரிய அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஏரியா 51 இன் S-4 இல் (பாப்பூஸ் ஏரியில் இருக்கும் ஒரு தளம்) அவர் பணிபுரிந்திருப்பதாக 1989 ஆம் ஆண்டில் பாப் லாசர் குறிப்பிட்டுள்ளார்.[49] அதே போல, 1996 ஆம் ஆண்டு புரூஸ் பர்கஸால் இயக்கப்பட்ட டிரீம்லாண்ட் என்ற ஆவணப்படத்தில், 71 வயதான இயந்திரப் பொறியாளர் ஒருவர் 1950களில் ஏரியா 51 இல் பணியாளராக பணியாற்றினார் என்று குறிப்பிடும்படியான ஒரு நேர்காணல் இடம்பெற்றிருந்தது. விழுந்து நொறுங்கிய புவிக்கப்பாலான கலத்திலிருந்த ஒரு தட்டை அடிப்படையாகக் கொண்டு "செயற்கையாக பறக்கும் தட்டு உருவாக்குதலில்" அவர் வேலை செய்தார் மற்றும் அமெரிக்க வானூர்தி ஓட்டுநர்களைப் பயிற்றுவிப்பதற்காக அது பயன்படுத்தப்பட்டது என்பதும் அவர் குறிப்பிட்டவைகளில் அடங்கியது. "J-ராட்" என்று பெயரிடப்பட்டு "உளக்கணிப்பு மொழிபெயர்ப்பாளர்" என்று விவரிக்கப்பட்ட ஓர் புவிக்காப்பாலான அமைப்புடன் வேலை செய்திருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.[50] ஏரியா 51 இல் வேற்றுலக நோய்க்கிருமிகளை குளோனிங் செய்வதில் பணிபுரிந்ததாகவும் "J-ராட்" என்று வேற்றுலக ஜந்துவிற்கு பெயரிடப்பட்டது என்றும் 2004 ஆம் ஆண்டு டான் புருஸ்ச் (டான் கிரெய்னின் மறுபெயர்) குறிப்பிட்டுள்ளார். புருஸ்சின் கல்வியியல் சான்றாவணங்கள் மிகவும் விவாதத்திற்கு உட்பட்டதாயிற்று. ஏனெனில் அவர் 1989 ஆம் ஆண்டு லாஸ் வேகாஸில் பேரல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார், அதே நேரத்தில் அவர் SUNYல் PhD பட்டத்தையும் வாங்கினார்.[51]

ஊடகத்திலும் பிரபலமான கலாச்சாரத்திலும் சித்தரிப்பு

[தொகு]

ஏரியா 51 பகுதியை புவிக்கப்பாலானவைகளுக்கான ஒரு புகலிடமாகத் தான் பிரபலமான கலாச்சாரங்கள் பெரும்பாலும் சித்தரிக்கின்றன. ஏரியா 51ஐ குறித்த ஏராளமான சதிக் கோட்பாடுகளின் காரணமாக பிரபலமான கலாச்சாரத்தில் குறிப்பாக அறிவியல் புதினம் போன்றவற்றில் அது அதிமுக்கியத்துவம் பெற்றது. பலவகையான படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அந்த இடத்தில் நடைபெறுவதாகக் கூறப்படும் கற்பனை நிகழ்வுகளைக் கொண்டிருக்கின்றன. பின்வருபவை அது போன்ற ஊடகத்தின் பட்டியலாகும்:

  • 1947 ஆம் ஆண்டின் ரோஸ்வெல் UFO சம்பவத்திலிருந்து விழுந்து நொறுங்கிய தேடுதல் பணியில் இருக்கும் வாகனத்தை ஆய்வு செய்வதை 1996 ஆண்டு வெளிவந்த இண்டிபெண்டன்ஸ் டே என்ற ஆக்ஷன் திரைப்படம் காண்பிக்கிறது. திரைப்படத்தின் கதாநாயகர்கள் தளத்தின் விமானத்தளங்களில் இருந்துகொண்டு அவர்களுடைய இறுதித் தாக்குதலை நடத்தும்போது ராண்டி குவேய்டின் கதாப்பாத்திரமான ரசல் கேசி ஒரு சமயத்தில் நெவிடாவின் மாநில வரைபடத்தில் தளம் காண்பிக்கப்படவில்லை என்று கூறுவது, உண்மையை மறைமுகமாக வெளிக்காட்டும்.
  • 1947 ஆம் ஆண்டு ரோஸ்வெல் சம்பவத்திலிருந்து மீட்கப்பட்ட வேற்றுலகத் தொழில்நுட்பத்தைக் கொண்டு காலப் பயணக் கருவியைப் பயன்படுத்தி, ஒரு மறைவான தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் (NSA) நடவடிக்கை மூலம் அந்தத் தளம் நடத்தப்படுகிறது என்பது போல காண்பித்த, செவன் டேஸ் என்ற தொலைக்காட்சித் தொடர் பெரும்பாலும் ஏரியா 51 வளாகத்திலேயே படம்பிடிக்கப்பட்டிருந்தது.
  • டாம் ரைடர் 3 என்ற படத்தில் வரும் லாரா கிராஃப்ட் எனும் பாத்திரம் ஏரியா 51 பற்றி வெளிப்படுத்தும். அந்தப் படத்தில் "தனிமம் 115 என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த கல்லை அவள் கண்டு பிடிக்கவேண்டும்."
  • வீடியோ கேமான பெர்ஃபெக்ட் டார்கில் ஜோனா டார்க் ஏரியா 51 வழியாகச் செல்வார். அதில் இரகசிய ஏஜெண்டுகளைச் சந்தித்து, இறந்துவிட்டது என்று கருதப்படுகிற வேற்றுலக உயிரான "எல்விஸ்" என்பதின் பிரேதப்பரிசோதனைக் கூடத்தைக் கண்டுபிடித்து அதிலிருந்து வெற்றிகரமாக வெளிவருவதே அவளுடைய இலக்கு.
  • இந்தியானா ஜோன்ஸ் அண்ட் த கிங்டம் ஆஃப் த கிரிஸ்டல் ஸ்கல் என்ற படத்தின் ஆரம்பத்தில், "ஹாங்கர் 51" என்பது அரசாங்க கிடங்காக காட்டப்படுகிறது, அதே நேரம் ரெய்டர்ஸ் ஆஃப் த லாஸ்ட் ஆர்க் படத்தின் கடைசிப் பகுதியில் புனிதப் பேழை பத்திரப்படுத்தி வைக்கப்படுகிறது. அங்கு ரோஸ்வெல் வேற்றுலகவாசியை மீட்பதற்காக KGB ஏஜெண்டுகள் போகிறார்கள். கடைசியாக, படிகநிலை எலும்புக்கூட்டுடன் பலபரிமாண உருவங்களை வெளிக்காட்டுகிறார்கள். ரோஸ்வெல் மற்றும் ஏரியா 51க்கு இடையே இருக்கும் தொடர்புகளைக் குறித்த பிரபலமான நம்பிக்கைகளுக்கு ஒரு ஆதாரமாக 51 என்ற எண்ணை எழுத்தாளரான டேவிட் கூப் ஒப்புக்கொள்கிறார்.[52]
  • ஸ்டார்கேட் SG-1 என்ற தொலைக்காட்சித் தொடர்களில், பிற கிரகங்களிலிருந்து பூமிக்குக் கொண்டுவரப்பட்ட புவிக்கப்பாலான தொழில்நுட்பத்தைப் பத்திரப்படுத்தி வைக்கும் மற்றும் ஆராய்ச்சி செய்யும் தளமாக ஏரியா 51 பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • NBC இல் ஒளிபரப்பான நைட் ரைடர்ஸ் என்ற தொடரின் மறுவுருவாக்கம் செய்யப்பட்ட தொடரின் நைட் டூ கிங்ஸ் பான் என்ற பகுதியில் மைக்கேல் நைட் KITTஐ மீட்பதற்காக ஏரியா 51 இல் இருக்கும் சேகரிப்புத் தளத்தின் வழியாகச் செல்வார். அதற்குப் பிறகு அது NSA ஏஜெண்டுகளால் எடுத்துச் செல்லப்பட்டுவிடும்.
  • திரைக்குப் பின்னால் இருந்துக்கொண்டு உலகத்தில் உள்ள எல்லா அம்சங்களையும் சூழ்ச்சியுடன் கட்டுப்படுத்திக் கையாளும் த பாட்ரியட்ஸ் என்று அழைக்கப்படும் குழுவின் தலைமை இடங்களில் ஒன்றாக ஏரியா 51 மாறியிருப்பதைப் போல் மெட்டல் கியர் என்ற தொடர்களில் காண்பிக்கப்பட்டிருக்கும்.
  • சூப்பர்மேன்: ரெட் சன் என்ற நகைச்சுவைப் படத்தில், J. எட்கர் ஹூவரின் ஆணையின் படி அபின் சரின் உடல் ஏரியா 51 இல் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும். சோவியத் யூனியனைத் தோற்கடிப்பதற்கு ஆயுதங்களை உருவாக்குவதற்காக, தளத்திற்கு லெக்ஸ் லூதர் வருவதற்கு ஜான் F. கென்னடி அனுமதி கொடுப்பார்.
  • ஆவணப்படத் தொடரான UFO ஹண்டர்ஸ், சீசன் டூ என்ற தொலைக்காட்சித் தொடர்களின் நிறைவுப் பகுதிக்காக 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏரியா 51 படம்பிடிக்கப்பட்டது. உயர் தெளிவுத்திறன் கொண்ட அந்நிகழ்ச்சி ஹிஸ்டரி சேனலில் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதியன்று ஒளிபரப்பப்பட்டது.
  • ஏரியா 51 என்று அழைக்கப்பட்ட வீடியோ கேம், மிட்வே கேம்ஸினால் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

குறிப்புகள்

[தொகு]
பொது
குறிப்பிடுக
  1. பீட்டர் W. மெர்லினால் எழுதப்பட்ட டிரீம்லாண்ட்: பிப்டி இயர்ஸ் ஆப் சீக்ரட் ஃப்லைட் டெஸ்டிங் இன் நெவிடா
  2. ரிச், p. 57, "...ஒரு ஸ்ப்ராலிங் தளம், சில நகராட்சிக்குரிய விமான நிலையங்களை விட மிகவும் பெரிதானது மற்றும் நுட்பமான வான்வழித் திட்டங்களுக்கான ஒரு பரிசோதனை எல்லைப்பகுதி" என்று 1977 ஆம் ஆண்டு குரூமில் இருந்துகொண்டு ரிச் குரூமைப் பற்றி விவரிக்கிறார்
  3. நெவிடாவில் இருக்கும் ஹிண்டர்சனின் குரூமில் முன்பு சேவையில் இருந்த தபால் பெட்டியான, இரகசியம் வெளியான பாதுகாப்பு செய்முறை ஏட்டின் தலைப்பை சுட்டிக்காட்டி, குரூமில் AFFTC டிடாச்மெண்ட் 3 இருக்கிறது என்று ஏரியா 51 ஆய்வாளரான கிளன் காம்பெல் கூறுகிறார். AFFTC-DET3 முன்பு மேலாளராக இருந்த விண்வெளி வீரரான கார்ல் E. வால்ஸ் NASA வாழ்க்கை வரலாறு!: "ஏரியா 51 இஸ் எட்வர்ட்ஸ் DET 3" பரணிடப்பட்டது 2010-12-06 at the வந்தவழி இயந்திரம், கிளன் காம்பெல், குரூம் லேக் டெசர்ட் ராட் , 6/17/96 ; "கார்ல் E. வால்ளின் (ஓய்வுப்பெற்ற USAF கர்னல்) வாழ்க்கை வரலாறு, NASA லிண்டன் B. ஜான்சன் விண்வெளி மையம்
  4. "பிலாக் பிராஜக்ட்ஸ் அட் குரூம் லேக்: இண்டூ த 21ஸ்ட் சென்சரி", பீட்டர் W. மெர்லின்
  5. ரிச், p. 56 ரிச் எழுதுவதாவது "கெல்லி [U2வின் வடிவமைப்பாளரான ஜான்சன்] இளம் மற்றும் களங்கமில்லாத விமான குழுவினர்களைக் கவர்வதற்காக விளையாட்டாக பாரடைஸ் ரான்ச் என்று இந்த இடத்திற்கு செல்லப்பெயரிட்டார்"
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 Jacobsen, Annie. "The Road to Area 51". Los Angeles Times, 5 April 2009.
  7. பேட்டன், p. 3, பாரடைஸ் ரான்ச், வாட்டர்டவுன், குரூம் லேக் மற்றும் ஹோம் பேஸ் ஆகியவற்றை மாற்றுப் பெயர்களாகப் பட்டியலிடுகிறது.
  8. டெய்லி ஏவியேட்டர் - ஹோமி ஏர்போர்ட் பரணிடப்பட்டது 2008-04-05 at the வந்தவழி இயந்திரம், என்ற கட்டுரை 2008 ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று பெறப்பட்டது.
  9. குரூம் பகுதிக்கான FAA வானூர்தி பயணவரைபடம்
  10. US ஆற்றல் துறை. பரணிடப்பட்டது 2010-06-15 at the வந்தவழி இயந்திரம்நெவிடா செயலக அலுவலகம். பரணிடப்பட்டது 2010-06-15 at the வந்தவழி இயந்திரம்அமெரிக்க அணு சோதனைகள்: 1945 ஆம் ஆண்டு ஜூலையிலிருந்து 1992 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை (2000 டிசம்பர்) பரணிடப்பட்டது 2010-06-15 at the வந்தவழி இயந்திரம்
  11. NTS வரைபடம் இடவிளக்கவியல் சம்பந்தப்பட்ட வரைப்படத்தின் மேல் வைத்து வெவ்வேறு பகுதிகளை காண்பிக்கிறது பரணிடப்பட்டது 2008-02-16 at the வந்தவழி இயந்திரம், நெவிடா மாநிலம் — சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு
  12. அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு இணையதளத்தில் விவரிக்கப்பட்ட NTS வரைபடம்
  13. ரெட் ஈகல்ஸ்:அமெரிக்காஸ் சீக்ரட் MiGs , ஸ்டீவ் டேவிஸ், ஆஸ்ப்ரே வெளியீடு, 2008 செப்டம்பர், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84603-378-0
  14. லாக்ஹீட் ஸ்டீல்த்:த இவல்யூஷன் ஆப் அன் அமெரிக்கன் ஆர்சினல் , பில் சுவீட்மன், மோட்டர்புக்ஸ், 2001 செப்டம்பர், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7603-0852-7
  15. "சுக்கோயிஸ் இன் த US (அஃபிஷியலி)" பரணிடப்பட்டது 2010-03-21 at the வந்தவழி இயந்திரம், பில் ஸ்வீட்மன், ஏவியேஷன் வீக் , 2009 மே 7
  16. 17.0 17.1 17.2 ஷாடோ ஃபிலைட்ஸ்: சோவியத் யூனியனுக்கு எதிரான அமெரிக்காவின் இரகசிய விமானப் போர் , கர்டிஸ் பீபில்ஸ், 2000, பிரிஸிடியோ பத்திரிக்கை, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89141-700-1.
  17. ரிச், pp. 141-144, விவரிப்பதாவது, U2 சோதனை வானூர்தி ஓட்டுனரான டோனி லீவையர் இடம் தேர்ந்தெடுப்பதற்காக டெத் வேலிக்கு அருகில் சிறிது தூரத்தில் இருக்கும் பகுதியை பார்வையிட்டார், அப்போது அவர் சொன்னதாவது, "நான் இதற்கு, பத்திற்கும் கூடுதலான மதிப்பெண்களைக் கொடுத்தேன்... சுமார் அரை மைல்கள் இருக்கும் வறண்ட ஏரிப்படுகை" என்றார். வடிவமைப்பாளரான கெல்லி ஜான்சன் மற்றும் CIA அதிகாரியான ரிச்சர்ட் பெஸ்ஸில் மற்றும் ஜான்சனிடம் லீவர் ஏரியைக் காண்பிப்பித்து ஓடு பாதையை "ஏரியின் தெற்குப் பகுதியில்" அமைப்பதற்காக முடிவு செய்வதை விவரித்தார்.
  18. ரிச், pp. 56-60
  19. 20.0 20.1 20.2 "ஏரியா 51 தளத்தின் மீள்பார்வை", ஜோன் பைக், அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு
  20. "டாப் சீக்ரட் U.S. ஏர் பேஸ் ஷோ குரோத்-ன் படங்கள்", மேரி மோட்டா, space.com, 2000 ஏப்ரல் 23, ".... 30 வருடங்களுக்கு முன்னதாக பிரபலமாகாத தளத்தில் முதலில் எடுக்கப்பட்ட படங்களிலிருந்து, அந்த பகுதி நன்றாகவே விரிவடைந்திருக்கிறது என்பதை புகைப்படங்கள் காண்பிக்கின்றன."
  21. Google Earth / Digital Globe படங்களை அடிப்படையாகக் கொண்டு அளவீடுகள், ஓடுபாதை நிலை மற்றும் ஒழுங்கமைத் தகவல்கள் 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று மீட்டெடுக்கப்பட்டன.
  22. Jeppesen-Sanderson, Inc. (2007). "Jeppesen Flightstar Airport Database". Archived from the original on 2008-09-13. பார்க்கப்பட்ட நாள் 2007-10-01. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  23. 24.0 24.1 கேட்காதே, சொல்லாதே: ஏரியா 51க்கு ஏர்போர்ட் ஐடெண்டிஃபையர் கிடைத்தது
  24. ஹால், ஜார்ஜ். ஸ்கின்னர், மைக்கில். ரெட் ஃபிலாக், மோட்டர்புக்ஸ் இண்டர்நேஷனல், 1993, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87938-759-9, p.49: "டிரீம்லாண்டிற்கு மேல் விமானத்தை ஓட்டுவது தவிர்க்கப்பட்டது என்று சொல்வது ஒரு பொய்யுரையாகும்..."
  25. பேட்டன், p10
  26. "ஏரியா 51 கள்வர்கள் பிரச்சனையைக் கிளருகிறார்கள்" கெவின் பால்சன், செக்கியூரிட்டி ஃபோக்கஸ் 2004, மே 25
  27. "சாலை உணர்கருவிகள்", டிரீம்லாண்ட் பொழுதுபோக்கு இடம்
  28. "புதிய ஏரியா 51 சாலை உணர்கருவிகள்", டிரீம்லாண்ட் பொழுதுபோக்கு இடம்
  29. UTM 11 605181E 4124095N (NAD27) இடத்திற்கான USGS 1:24K/25K டோப்போ வரைபடம்[தொடர்பிழந்த இணைப்பு] (map via TopoQuest.com)
  30. ஜியோபாயிண்ட் குரூம் தாதுச் சுரங்கத்திற்கான, NV USGS 1:24K/25K டோப்போ வரைபடம் (map via TopoQuest.com)
  31. "விமானநிலையங்கள் மற்றும் லாண்டிங் ஸ்டிரிப்ஸ், 2002" பரணிடப்பட்டது 2011-01-04 at the வந்தவழி இயந்திரம், நெவிடா போக்குவரத்துத் துறை, cf பிரிவு R-4808N
  32. லாஸ் வேகாஸ் பிரிவுசார்ந்த வானூர்தி பயணவரைபடம், தேசிய வானூர்தி பயணவரைப்படம் அலுவலகம், ஒன்றிணைந்த வான்பிறப்பியல் நிர்வாகம் (2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி சரிபார்க்கப்பட்டது)
  33. "நிலங்களின் கூட்டமைப்பு மற்றும் இந்திய இடப்பங்கீடுகள்" பரணிடப்பட்டது 2011-10-17 at the வந்தவழி இயந்திரம், அமெரிக்காவின் தேசிய வரைபடநூல் , அமெரிக்க உள்துறை அமைச்சகம், ஆவண ID: pagefed_nv7.pdf இண்டீரியர்-ஜியலாஜிகல் கருத்தாய்வு, ரெஸ்டன், வர்ஜீனியா-2003
  34. "கொரோனா படம்". Archived from the original on 2008-09-12. பார்க்கப்பட்ட நாள் 2009-10-23.
  35. டேராசர்வர் படம்
  36. Stephen Regenold (2007-04-13). ""Lonesome Highway to Another World?"". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 2007-07-08.
  37. Glenn Campbell (1994). "Secret Base Cheats Local Tax Rolls". The Groom Lake Desert Rat. Archived from the original on 2017-11-30. பார்க்கப்பட்ட நாள் 2007-07-08. In the 93-94 tax year, the Air Force paid taxes of $65,517 on a property assessment (for "Buildings and Improvements" plus "Other Personal Property") of $2,517,781. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  38. "ஏரியா 51 / காட்ச் 22" பரணிடப்பட்டது 2017-03-27 at the வந்தவழி இயந்திரம் பிரிவு, 60 நிமிடங்கள் அலைபரப்பு 1996, மார்ச் 17.
  39. ஏரியா 51 சம்பந்தட்ட வழக்குகளுக்கு தீர்ப்பளிக்கும் நீதிபதிகளின் கூட்டமைப்பு பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் கெய்த் ரோஜர்ஸ், லாஸ் வேகாஸ் ரிவியூ-ஜர்னல் , 2002, ஜூன் 4
  40. காசா V பிரவுனர் -இல் US 9வது சுற்றுத் தீர்மானம் மற்றும் அது தொடர்பான பிரோஸ்ட் V பெர்ரி, லேக், விட்னல்
  41. 2000 தலைமை தீர்மானங்கள்
  42. 2002 தலைமை தீர்மானங்கள்
  43. 2003 தலைமை தீர்மானங்கள்
  44. 21-Sun-2006/news/7488359.html "ஏரியா 51 வேலையாட்களிடமிருந்து வார்னிங் ஃபார் எமர்ஜென்சி ரிஸ்பாண்டர்ஸ் மறைக்கப்பட்டது", கேய்த் ரோஜர், லாஸ் வேகாஸ் ரிவியூ-ஜர்னல், 2006, மே 21
  45. Dwayne A. Day (January 9, 2006). "Astronauts and Area 51: the Skylab Incident". The Space Review. பார்க்கப்பட்ட நாள் 2006-04-02.
  46. Presidential Determination No. 2003-39
  47. Dwayne A. Day (26 November 2007). "Secret Apollo". The Space Review. பார்க்கப்பட்ட நாள் 2009-02-16.
  48. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-05-30. பார்க்கப்பட்ட நாள் 2009-10-23.
  49. டிரீம்லாண்ட் , ஸ்கை தொலைக்காட்சிக்கான (1996) டிரான்ஸ்மீடியா மற்றும் டாண்டிலியன் இயக்கம்.
  50. Sheaffer, Robert (November/December 2004). Tunguska 1, Roswell 0. 28. Committee for Skeptical Inquiry. http://www.csicop.org/si/2004-11/. பார்த்த நாள்: 2009-10-23. 
  51. Rinzler, J.W. (2008). The Complete Making of Indiana Jones. Random House. p. 249. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780091926618. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)

புற இணைப்புகள்

[தொகு]
பொது
வரைபடங்கள் மற்றும் புகைப்படங்கள்

37°14′25″N 115°49′07″W / 37.240203°N 115.818558°W / 37.240203; -115.818558

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏரியா_51&oldid=3791396" இலிருந்து மீள்விக்கப்பட்டது