மதுரை-திப்ருகார் சிறப்புத் தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரை - திப்ருகார் இடையே முன்பதிவுடன் கூடிய ஒரு வழிச் சிறப்பு தொடருந்து 1 மார்ச் 2021 முதல் வாரம் ஒரு முறை இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு இரயில் மதுரையிலிருந்து 1 மார்ச் 2021 (திங்கள் கிழமை) முற்பகல் 11.55 மணியளவில் புறப்பட்டு, அசாம் மாநிலத்தின் திப்ருகாருக்கு 4 மார்ச் 2021 அன்று (வியாழக் கிழமை) காலை 6.45 மணியளவில் சென்றடையும்.

எண் 06002 கொண்ட இந்த சிறப்பு இரயிலின் மொத்த பயண தூரம் 3643 கிலோ மீட்டர், பயண நேரம் 67 மணி நேரம் மற்றும் நிறுத்தங்கள் 51 ஆகும்.

இந்த இரயிலில் குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதியுடன் கூடிய 1 பெட்டி, 4 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2 சரக்கு மற்றும் காப்பாளர் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.[1][2][3][4]

இந்த இரயில் நின்று செல்லும் தொடருந்து நிலையங்கள்[தொகு]

இந்த சிறப்பு இரயில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலத்தின் 51 நகரங்களின் தொடருந்து நிலையங்களில் நின்று செல்லும்.[5]

  1. கொடை ரோடு
  2. திண்டுக்கல்
  3. திருச்சிராப்பள்ளி
  4. அரியலூர்
  5. விருத்தாச்சலம்
  6. விழுப்புரம்
  7. செங்கல்பட்டு
  8. தாம்பரம்
  9. சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்
  10. சூலூர் பேட்டை
  11. கூடூர்
  12. நெல்லூர்
  13. ஓங்கோல்
  14. விஜயவாடா
  15. ஏலூரு
  16. இராஜமுந்திரி
  17. விசாகப்பட்டினம்
  18. பெர்காம்பூர்
  19. குர்தா ரோடு
  20. புவனேஸ்வர்
  21. கட்டாக்
  22. பலாசோர்
  23. ஹிஜில்லி
  24. டாடா நகர்
  25. புருலியா
  26. ஜாய்சந்தி பஹார்
  27. ஆசன்சோல்
  28. ஆண்டல், மேற்கு வர்த்தமான் மாவட்டம்
  29. துர்க்காபூர்
  30. சியுரி
  31. ராம்புர்ஹாட்
  32. பக்கூர்
  33. நியூ ஃபாரக்கா
  34. மால்டா நகரம்
  35. பார்சோய்
  36. கிஷன்கஞ்ச்
  37. நியூ ஜல்பைகுரி
  38. நியூ மேனகுரி
  39. துப்குரி
  40. நியூ கூச்பெஹார்
  41. நியூஅலிபூர்த்துவார்
  42. பாக்கிராகிரம்
  43. கோக்ரஜார்
  44. நியூ பொங்கைகான்
  45. ராங்கியா
  46. நியூ மிஸாமாரி
  47. ரங்கபாரா வடக்கு
  48. விஸ்வநாத் சிர்லி
  49. ஹர்முட்டி
  50. வடக்கு லக்கீம்பூர்
  51. தேமாஜி

மேற்கோள்கள்[தொகு]

  1. மதுரை-திப்ருகார் சிறப்பு ரயில் மார்ச் 1-ம் தேதி இயக்கம்
  2. Southern Railway announces more special trains
  3. மதுரை - திப்ருகர் சிறப்பு ரயில்
  4. மதுரையில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகருக்கு சிறப்பு ரெயில்
  5. 06002/Madurai - Dibrugarh One Way Special