துட்டகைமுனு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துட்டைகைமுனு அல்லது துட்டகாமினி (சிங்களம், දුටුගැමුණු duṭugämuṇu) (சிங்கள வழக்கில் துடுகெமுனு) இலங்கை வரலாற்றில் கி.மு. 101 முதல் கி.மு. 77 வரை ஆட்சி செய்ததாக மகாவம்சம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு அரசனாவான். இவனே அனுராதபுரத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த தமிழ் அரசனான எல்லாளனுடன் போரிட்டவனாவான்.
இவனை, சிங்கள அரசனாகவும்[1], மாபெரும் வீரனாகவும், இலங்கை முழுதும் பௌத்தம் பரவுவதற்கு காரணமானவனாகவும் மகாவம்சம் இவனை போற்றி புகழ்கிறது.