சிறிமேகவண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறிமேகவண்ணன் (பொ.பி. 304 - 332) என்பவன் இலங்கையை ஆண்ட முதலாம் லம்பகர்ண அரசர்களுள் பத்தொன்பதாவது அரசன். இவன் இலங்கையின் பழைய மதமான தேரவாத பௌத்தத்தை ஆதரித்தான். பல விகாரைகளையும் பரிவேணைகளையும் கட்டிய இவன் கலிங்க நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட புத்தரின் பல் தாதுவை அநுராதபுரத்தில் வைத்துச் சிறப்பித்தான். இவன் காலத்தில் இந்தியப்பேரரசனான சந்திரகுப்தருக்கு தூதனுப்பி இலங்கையிலிருந்து புத்தகயாவிற்கு யாத்திரை செய்யும் புத்த பிக்குகளுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு வேண்டினான்.[1] இவனுக்குப் பிறகு இவன் தம்பியான இரண்டாம் சேட்டதிச்சன் (பொ.பி. 332 - 341) ஆண்டான்.

மேற்கோள்கள்[தொகு]

  1. சூல வம்சம், 37ஆம் பரிச்சேதம், 51-99

மூலநூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிமேகவண்ணன்&oldid=2201572" இலிருந்து மீள்விக்கப்பட்டது