தன்னுடல் தாக்குநோய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தன்னுடல் தாக்குநோய்கள் (Autoimmune disease) என்பவை உடலினுள்ளேயே இருக்கும் பொருட்கள், உயிரணுக்கள், இழையங்களுக்கு எதிராக தொழிற்படும் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் மிகை இயக்கத்தால் ஏற்படும் நோய்களாகும். அதாவது உடலானது தன்னுடலில் உள்ள சில பகுதிகளை நோய்க்காரணியாக தவறாக அடையாளப்படுத்துவதால், தனக்கு எதிராக தானே தொழிற்படும் நிலையாகும். இது குறிப்பிட்ட உடலுறுப்பில் ஏற்படுவதாகவோ, அல்லது உடலின் வெவ்வேறு இடங்களில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட வகையான இழையத்தில் ஏற்படுவதாகவோ இருக்கலாம். இவ்வகையான நோய்களுக்கான சிகிச்சையாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை குறைக்கவல்ல அல்லது தணிக்கவல்ல மருந்துகள் பயன்படுத்தப்படும்.