செம்பருத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்பருத்தி
Hibiscus 'Brilliant'
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: மால்வேல்ஸ்
குடும்பம்: மால்வேசியே
பேரினம்: ஹைபிஸ்கஸ்
இனம்: ரோசா-சினென்ஸிஸ்
இருசொற் பெயரீடு
ஹைபிஸ்கஸ் ரோசா-சினென்ஸிஸ்
L.

செம்பருத்தி அல்லது செவ்வரத்தை (Hibiscus rosa-sinensis) என்பது இந்தியா,இலங்கை போன்ற வரள்வலய இடங்களில் வளரும் தாவர இனம் ஆகும். இது செடி இனத்தை சார்ந்தது. இதன் பூ மருத்துவ குணங்களை கொண்டதாகும். இது கிழக்கு ஆசியாவில் தோன்றிய ஒரு தாவரமாகும். இது சீன ரோஜா எனவும் அழைக்கப்படுகிறது[1] . இது மலேசியாவின் தேசிய மலராகும். இது பொதுவாக அழகுத்தாவரமாக வளர்க்கப்படுகிறது.

பெயர்கள்[தொகு]

இது சப்பாத்துச் செடி, ஜபம், செம்பரத்தை போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. செம்மை நிறத்தில் இதன் மலர்கள் காணப்படுவதால், ‘செம்’பரத்தை என்று பெயர் பெற்றது.[2] ஆயுர்வேதத்தில் இது ஜபா புஸ்பா, ருத்ர புஷ்ப, ரக்த கார்பாச என்றும் அழைக்கப்படுகிறது

பதியமுறை இனப் பெருக்கம்[தொகு]

இச்‌செடி விதைகளின் மூலம் இனப்பெருக்கம் செய்வதில்லை.பெரும்பாலும் விதைகள் உருவாக்கப்படுவதில்லை. தண்டுத் துண்டம் மூலம் பதியமுறையில் எளிதாக இனம் பெருக்கலாம். ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி ரோசா-சினென்சிஸ் பெரும்பாலான மற்ற இனங்கள் போல் குரோமோசோம்களின் மேற்பட்ட முழு செட், உள்ளன. இதில் பலதொகுதியாக்கும் இயல்பு எனப்படும் மரபணு பண்பு, பல தாவர இனங்கள் ஒன்றாகும். பலதொகுதியாக்கும் இயல்பு ஒரு பக்க விளைவு பிள்ளைகள் பற்றிய புறத்தோற்றப் பண்புகள் அடிப்படையில் முன் போயிருக்கிறார்கள் என்று அனைத்து தலைமுறைகளின் சிறப்பியல்புகளை அனைத்து (அல்லது எந்த) ஒரு சாத்தியமான சீரற்ற வெளிப்பாடு அனுமதிக்கிறது, பெற்றோர், அல்லது உண்மையில் எந்த மூதாதையர் இருந்து வேறுபட்டு இருக்கும் ஒரு நிலையில் உள்ளது. இந்த பண்பு கொண்ட, எச் ரோசா-சினென்சிஸ் புதிய பெயரிடப்பட்ட வகைகள் உருவாக்கி பல விளைவாக புதிய நாற்றுகள் மற்றும் பெரும்பாலும் பளிச்சென தனிப்பட்ட மலர்கள் வெளிப்படுத்துகின்றன மற்றும் தீர்ப்பு போட்டிகள் பிடித்து, கடந்து வந்த பொழுதுபோக்காக மற்றும் recross[தெளிவுபடுத்துக] வகைகள் பிரபலமாக உள்ளது. மரபணு வாய்ப்புகளை சேர்க்க, ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி ரோசா-சினென்சிஸ் வெற்றிகரமாக குளிர்-ஹார்டி கலப்பினங்கள் (குளிர், ஹார்டி ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி பயிரிடு பார்க்க) உற்பத்தி, குளிர் எதிர்ப்பு ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி moscheutos மற்றும் பல வட அமெரிக்க ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி இனங்கள் கலப்பினம்.

பெரும்பாலும் இந்த சிலுவைகள் சந்ததி மலட்டு இருக்கிறது, ஆனால் சில இன்னும் மாறும் சிக்கலான மற்றும் இறுதியான ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி ரோசா-சினென்சிஸ் வகைகள் ஒரு கிட்டத்தட்ட வரம்பற்ற வாய்ப்பு அதிகரிக்கும், வளமான இருக்கும். இது மேலும் குளிர் பகுதிகளில் தொலைவுகளுக்கு உட்பட உலகம் முழுவதும் இந்த வெப்பமண்டல தாவரங்கள் பயிற்சி இந்த பொழுதுபோக்கு மேலும் உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புக்கள், சங்கங்கள், வெளியீடுகள், மற்றும் கையேடுகள் உருவாக்கிய பொழுதுபோக்காக,,, கவர்கிறது

பயன்கள்[தொகு]

  • இச்செடியின் பூக்கள் தலை முடி அழகுக்காக பல வழிகளில் பயன்படுகிறது.
  • இதனை பசிபிக் தீவுகளில் உணவாகவும் மக்கள் உட்கொள்கின்றனர்.
  • சீன மருத்துவ முறைகளிலும் இந்தப் பூ பயன்படுகிறது.
  • இந்தியாவின் பல பகுதிகளில் அழகுப்பொருளாகவும், தலையில் சூடிக்கொள்ளவும், கடவுளை வழிபடவும் இந்த செடியின் பூ பயன்படுகிறது.
  • காலணிகளை பொலிவூட்டவும் இந்த பூவின் இதழ்களை பயன்படுத்தலாம்.
  • ஜமாய்க்காவில் இந்தப் பூவை வயிற்றில் உண்டான கருவை கலைக்கவும் பயன்படுத்துகின்றனர்.

மருத்துவக் குணங்கள்[தொகு]

செவ்வரத்தையின் மனதுக்கு சுகமளிக்கும் அழகுத் தோற்றம்
  • செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.
  • வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணமாக்கும். (பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.)
  • கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் கருஉருவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. (செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.)
  • மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். (செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும்.)
  • வெள்ளைப்படுதலைக் குணமாக்கும். (செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.[மேற்கோள் தேவை]

இச் செடி இரசியா போன்ற குளிர் நாடுகளில் காலநிலைமாற்றங்களை தாண்டி வளரக்கூடியது. எனவே இது வீடுகளில் அலங்காரச்செடியாக வளர்க்கப்படுகின்றது. இரு மீற்றர் (மீட்டர்) வளர்ந்த செடி அங்கு 250$-க்கு விற்கப்படுகின்றது.

பூக்கள்[தொகு]

மலர் மற்றும் மொட்டு

பூக்கள் பல நிறங்களிலும், பல அடுக்கு இதழ்களை கொண்டதாகவும் காணப்படுகின்றன. இது தவிர கலப்புப் பிறப்பாக்கம் மூலமும் பல்நிற பூக்களை உருவாக்க முடியும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "USDA GRIN Taxonomy". Archived from the original on 8 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "செக்கச் சிவந்த செம்பரத்தை". கட்டுரை. இந்து தமிழ். 9 பெப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 10 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பருத்தி&oldid=3577297" இலிருந்து மீள்விக்கப்பட்டது