செனானி

ஆள்கூறுகள்: 33°02′06″N 75°16′34″E / 33.035°N 75.276°E / 33.035; 75.276
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செனானி
பேரூராட்சி
செனானி is located in ஜம்மு காஷ்மீர்
செனானி
செனானி
ஜம்மு காஷ்மீரில் செனானியின் அமைவிடம்
செனானி is located in இந்தியா
செனானி
செனானி
செனானி (இந்தியா)
ஆள்கூறுகள்: 33°02′06″N 75°16′34″E / 33.035°N 75.276°E / 33.035; 75.276
நாடு India
ஒன்றியப் பகுதிஜம்மு காஷ்மீர்
மாவட்டம்உதம்பூர்
வருவாய் வட்டம்செனானி
ஏற்றம்1,062 m (3,484 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்2,620
Demographics
 • எழுத்தறிவு88.91%
 • பாலின விகிதம்809 / 1000
மொழிகள்
 • அலுவல் மொழிகள்[1]தோக்ரி மொழி, ஆங்கிலம், இந்தி, காஷ்மீரி மொழி, உருது
 • வட்ட்டார மொழிகள்தோக்ரி மொழி, இந்தி, காஷ்மீரி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்182141
தொலைபேசி குறியீடு01992
வாகனப் பதிவுJK-14
இணையதளம்udhampur.nic.in

செனானி (Chenani), இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் ஜம்மு பகுதியில் உள்ள உதம்பூர் மாவட்டத்தில் அமைந்த செனானி வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். இமய மலையை 9.2 கிலோ மீட்டர் வரை அளவிற்கு குடைந்ந்து நிறுவப்பட்ட சியாமா பிரசாத் முகர்ஜி சுரங்கச் சாலை செனானி ஊரையும், பத்னிடாப் அருகே உள்ள நஷ்ரி ஊரையும் இணைக்கிறது. செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை

அமைவிடம்[தொகு]

பிர் பாஞ்சல் மலைத்தொடரில் 1062 மீட்டர் (3,487 அடி) உயரத்தில், தாவி ஆறு பாயும் செனானி நகரம், ஜம்மு நகரத்திற்கு வடகிழக்கில் 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் அருகே அமைந்த தொடருந்து நிலையம் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உதம்பூரில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 7 வார்டுகளும், 525 வீடுகளும் கொண்ட நகரத்தின் செனானி பேரூராட்சியின் மக்கள் தொகை 2,620 ஆகும். அதில் ஆண்கள் 1,448 மற்றும் பெண்கள் 1,172 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 809 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10.19% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 88.91% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 2.71% மற்றும் 1.83% ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 75.92%, இசுலாமியர் 21.68%, பௌத்தர்கள் 0.08%, சீக்கியர்கள் 2.06% மற்றும் கிறித்தவர்கள் 0.27% [2]

போக்குவரத்து[தொகு]

தற்போது சாலைப் போக்குவரத்து மட்டும் உள்ளது. கன்னியாகுமரி - சிறீநகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 44 செனானி வழியாகச் செல்கிறது. சியாமா பிரசாத் முகர்ஜி சுரங்கச் சாலையால் பனிச்சரிவு இடையீடு இன்றி தற்போது ஆண்டு முழுவதும் ஜம்மு-சிறீநகர் சாலைப்போக்கு நடைபெறுகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செனானி&oldid=3728768" இலிருந்து மீள்விக்கப்பட்டது