தி காஷ்மீர் பைல்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி காஷ்மீர் ஃபைல்ஸ்
இயக்கம்விவேக் அக்னிஹோத்திரி
கதைவிவேக் அக்னிஹோத்திரி
சௌரப் எம். பாண்டே
இசைஇசை ரோகித் சர்மா
பாடல்கள்: சொப்னில் பந்தோத்கர்
நடிப்பு
ஒளிப்பதிவுஉதய்சிங் மொகித்
படத்தொகுப்புசாங்க் ராஜாதியக்ஷா
கலையகம்ஜீ ஸ்டூடியோஸ்
அபிசேக் அகர்வால் கலையகம்
விநியோகம்ஜீ ஸ்டூடியோஸ்
வெளியீடு11 மார்ச்சு 2022 (2022-03-11)
ஓட்டம்170 நிமிடங்கள் [1]
நாடுஇந்தியா
மொழிஇந்தி
மொத்த வருவாய்400 கோடி ரூபாய் [2]

தி காஷ்மீர் ஃபைல்ஸ் (The Kashmir Files) 11 மார்ச் 2022 அன்று வெளியான இந்தி மொழி நாடகத் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தின் கதையை எழுதி, இயக்கியவர் விவேக் அக்னிஹோத்திரி ஆவார். இதனை ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்தது வெளியிட்டது.[3] இந்தத் திரைப்படம் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் காஷ்மீரத்தை விட்டு வெளியேறியதை அடிப்படையாகக் கொண்டது.[4] இதில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி, சின்மயி மண்டலேகர், பிரகாஷ் பெலவாடி மற்றும் புனித் இஸ்ஸார் ஆகியோர் நடித்துள்ளனர்.[5] இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.[9] நேர்மறையானவர்கள் அனுபம் கெர் போன்ற நடிகர்களின் நடிப்பைப் பாராட்டினர்.

அரியானா, மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் இப்படத்திற்கு மாநில கேளிக்கை வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திரைப்படம் வெளியான மூன்று நாட்களுக்குள் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றது. சிறு செலவில் எடுத்த இந்த இந்தி திரைப்படம் பல வசூல் சாதனைகளை படைத்துள்ளது.[10][11]

கதைக் கரு[தொகு]

காஷ்மீர் தீவிரவாத இசுலாமிய கிளர்ச்சியாளர்களின் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட, காஷ்மீரிலிருந்து இந்து பண்டிதர் குடும்பங்கள் வெளியேறியதை, தில்லி பேராசிரியை ராதிகா மேனன், தனது மாணவன் கிருஷ்ண பண்டிட்க்கு, இந்திய இராணுவத்தால் தான் காஷ்மீர் பண்டிதர்கள் வெளியேறியதாக திரித்துக் கூறினார். முதலில் இதனை உண்மை என நம்பிய கிருஷ்ண பண்டிட், பின்னர் காஷ்மீர பண்டித குடும்பங்கள் ஏன், எப்படி, எவ்வாறு காஷ்மீரை விட்டு வெளியேறினார்கள் என்பதை அறியும் பயணத்தைச் சுற்றியே இத்திரைப்படம் உள்ளது.

நடிகர்கள் & நடிகைகள்[தொகு]

  1. மிதுன் சக்கரவர்த்தி - பிரம்மா தத் எனும் ஐஏஎஸ் அதிகாரி
  2. அனுபம் கெர் - புஷ்கர் நாத் பண்டிதர்
  3. தர்ஷன் குமார் - கிருஷ்ண பண்டிட் எனும் மாணவன்
  4. பல்லவி ஜோஷி - ராதிகா மேனன்
  5. சின்மயி மண்லெகர் - பரூக் அகமது தார்
  6. பிரகாஷ் பெலவாடி - மருத்துவர் மகேஷ் குமார்
  7. புனீத் இஸ்ஸார் - காவல்துறை தலைமை இயக்குநர்
  8. பாஷா சும்பிலி - சாரதா பண்டிதர்
  9. சௌரவ் வர்மா - அப்சல்
  10. மிருணாள் குல்கர்னி - இலெட்சுமி தத்
  11. அதுல் சிறீவஸ்தவா - விஷ்ணு ராம்
  12. அமான் இக்பால் - கரண் பண்டிதர்

வழக்கு[தொகு]

வழக்கு உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், இத்திரைப்படத்தை வெளியிட தடை கோரி பொது நலன் வழக்குத் தாக்கல் செய்தார்.[12] மேலும், இந்தத் திரைப்படம் இசுலாமியர்களை காஷ்மீரி பண்டிட்டுகளின் கொலையாளிகளாக சித்தரிக்கக்கூடும் என்ற அடிப்படையில் படத்தின் வெளியீட்டைத் தடுக்கக் கோரியது. அது இசுலாமியர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் மற்றும் அவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளது எனக்கூறப்பட்டது. தொழில்நுட்ப காரணங்களுக்காக மும்பை உயர்நீதிமன்றத்தால் பொது நல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.[13][13]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "The Kashmir Files". British Board of Film Classification. 9 March 2022. பார்க்கப்பட்ட நாள் 9 March 2022.
  2. தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட வசூல்
  3. "Vivek Agnihotri's The Kashmir Files to CLASH with Prabhas-starrer Radhe Shyam on March 11 : Bollywood News". Bollywood Hungama. 2022-02-08. பார்க்கப்பட்ட நாள் 2022-03-11.
  4. "Vivek Agnihotri's The Kashmir Files to go on floors next month". சினிமா எக்ஸ்பிரஸ். 1 January 2020. https://www.cinemaexpress.com/stories/news/2020/jan/01/vivek-agnihotris-the-kashmir-files-to-go-on-floors-next-month-16315.html. 
  5. Negi, Shrishti (2022-03-09). "The Kashmir Files Producer Pallavi Joshi: Am I Making the Film for Hindu Rashtra? I'm Just Telling a Story". News18. பார்க்கப்பட்ட நாள் 2022-03-11.
  6. "The Kashmir Files box office collection Day 1: Vivek Agnihotri film mints Rs 3.55 crore". The Indian Express (in ஆங்கிலம்). 13 March 2022. பார்க்கப்பட்ட நாள் 13 March 2022.
  7. "The Kashmir Files: Controversies and accolades surrounding the film". Dina Thanthi (in ஆங்கிலம்). 2022-03-14. Archived from the original on 2022-03-14. பார்க்கப்பட்ட நாள் 2022-03-14.
  8. "Netizens on Twitter reveal that the screening of The Kashmir Files has been stopped in cinema halls". Box Office Worldwide (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-03-12. பார்க்கப்பட்ட நாள் 2022-03-14.
  9. [6][7][8]
  10. The Kashmir Files Is Another Gadar - On Its Way To Create HISTORY, Box Office India, 14 March 2022, பார்க்கப்பட்ட நாள் 14 March 2022
  11. "The Kashmir Records Fantastic Weekend - Set For Extraordinary Run". Box Office India. 14 March 2022. https://www.boxofficeindia.com/report-details.php?articleid=6736. பார்த்த நாள்: 14 March 2022. 
  12. Keshri, Shweta (11 March 2022). "Vivek Agnihotri's The Kashmir Files releases today all over India". India Today. https://www.indiatoday.in/movies/bollywood/story/vivek-agnihotri-s-the-kashmir-files-releases-today-all-over-india-1924274-2022-03-11. 
  13. 13.0 13.1 Vidya (8 March 2022). "Plea against The Kashmir Files dismissed by Bombay High Court". India Today. பார்க்கப்பட்ட நாள் 2022-03-10.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_காஷ்மீர்_பைல்ஸ்&oldid=3744002" இலிருந்து மீள்விக்கப்பட்டது