சிட்ருலின்
| சிட்ருலின் | |
|---|---|
| (IUPAC) ஐயுபிஏசி பெயர் |
|
| பிற பெயர்கள் | 2-அமினோ-5-(கார்பமோயில்அமினோ) பென்டநோயிக் அமிலம் |
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| PubChem | |
| en:KEGG | D07706 |
| Jmol-3D images | Image 1 |
| பண்புகள் | |
| Molecular formula | C6H13N3O3 |
| Molar mass | 175.19 g mol-1 |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
சிட்ருலின் (Citrulline) ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய நல்லியல் வாய்பாடு: H2NC(O)NH(CH2)3CH(NH2)CO2H. சிட்ருலின், பாலூட்டிகள் அமோனியா கழிவுநீக்கத்திற்குப் பயன்படுத்தும் யூரியா சுழற்சி தடவழியில் உள்ள ஒரு முக்கிய இடைநிலை வேதிப் பொருளாகும். ஆர்னிதின் மற்றும் கார்பமோயில் பாஸ்பேட்டிலிருந்து சிட்ருலின் உருவாக்கப்படுகிறது. இவ்வினையானது, யூரியா சுழற்சியில் உள்ள மைய வினைகளுள் ஒன்றாகும். மேலும், நைட்ரிக் ஆக்சைடு உருவாக்கும் நொதி (Nitric oxide synthase) ஆர்ஜினின் அமினோ அமிலத்திலிருந்து நைட்ரிக் ஆக்சைடு உருவாக்கும்போது, சிட்ருலின் துணைவிளைபொருளாக உருவாகிறது. நேரடியாக சிட்ருலின் டி.என்.ஏ மூலக்கூறிலிருந்து குறிமுறையீடு செய்யப்படாவிடினும், புரதப்பெயர்ப்பிற்கு பின்னான மாற்றங்களினால் பல புரதங்களும் சிட்ருலினாக்கப்படுகின்றன. புரதங்களில் சிட்ருலின் படிவுகள், பெப்டைடுஆர்ஜினின் இமைன்நீக்கி நொதிகளால் (peptidylarginine deiminases) உருவாக்கப்படுகின்றது. முடக்குவாத நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சுழலான சிட்ருலினாக்கப்பட்ட புரதக்கூறு/புரதத்திற்கு எதிரான எதிர்ப்பான்கள் (பிறபொருளெதிரிகள்) நோயை கண்டறியப் பயன்படுகின்றன [1] [2]
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Uysal H, Nandakumar KS, Kessel C, Haag S, Carlsen S, Burkhardt H, Holmdahl R. (2010). "Antibodies to citrullinated proteins: molecular interactions and arthritogenicity.". Immunol Rev. 233 (1): 9-33.. PMID 20192990.
- ↑ Wegner N, Lundberg K, Kinloch A, Fisher B, Malmström V, Feldmann M, Venables PJ. (2010). "Autoimmunity to specific citrullinated proteins gives the first clues to the etiology of rheumatoid arthritis.". Immunol Rev. 233 (1): 34-54.. PMID 20192991.