ஃபியூமரிக் அமிலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஃபியூமரிக் அமிலம் | |
|---|---|
| (IUPAC) ஐயுபிஏசி பெயர் |
|
| பிற பெயர்கள் | மாறுபக்க-1,2-எத்திலீன் டைகார்பாக்சிலிக் அமிலம்; 2-பியூட்டீன்டையோயிக் அமிலம்; மாறுபக்க-பியூட்டீன்டையோயிக் அமிலம்; அல்லோமேலியிக் அமிலம்; போலெடிக் அமிலம்; டோனிடிக் அமிலம்; லிசெனிக் அமிலம். |
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| EC number | |
| en:KEGG | C00122 |
| Jmol-3D images | Image 1 |
| பண்புகள் | |
| வேதியியல் வாய்பாடு | C4H4O4 |
| மோலார் நிறை | 116.07 கி/மோல் |
| தோற்றம் | வெண் திண்மம் |
| அடர்த்தி | 1.635 கி/செமீ³, திண்மம் |
| உருகுநிலை |
287 °C |
| நீரில் கரைமை | 0.63 கி/100 மிலி |
| காடித்தன்மை எண் (pKa) | pka1 = 3.03, pka2 = 4.44 |
| தீநிகழ்தகவு | |
| EU classification | நமைச்சல் காரணி (Xi) |
| NFPA 704 |
|
| R-phrases | S36 |
| S-phrases | S2 S26 |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| கார்பாக்சிலிக் அமிலங்கள் தொடர்புடையவை |
மேலியிக் அமிலம் சக்சினிக் அமிலம் குரோடோனிக் அமிலம் |
| தொடர்புடைய சேர்மங்கள் | ஃபியூமரைல் குளோரைட் ஃபியூமரோ நைட்ரைல் டைமீதைல் ஃபியூமரேட் இரும்பு (II) ஃபியூமரேட் |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
ஃபியூமரிக் அமிலம் (Fumaric acid) (அ) மாறுபக்க-பியூட்டீன்டையோயிக் அமிலம் ஒரு வேதிச் சேர்மமாகும். இதன் வாய்பாடு: HO2CCH=CHCO2H. இந்த வெண் திண்மச் சேர்மம் நிறைவுறா டைகார்பாக்சிலிக் அமிலங்களின் இரண்டு மாற்றியங்களில் ஒன்றாகும். மற்றொன்று, மேலியிக் அமிலமாகும். ஃபியூமரிக் அமிலத்தில் கார்பாக்சிலிக் அமிலத்தொகுதிகள் மாறுபக்கத்திலும், மேலியிக் அமிலத்தில் ஒரேப்பக்கத்திலும் உள்ளன. ஃபியூமரிக் அமிலம் பழச் சுவையைக் கொண்டது. இதன் உப்புகளும், மணமியங்களும் ஃபியூமரேட்டுகள் என்றழைக்கப்படுகின்றன. ஃபியூமரிக் அமிலம், அமிலத் தன்மை சீராக்கியாக உணவுச் சேர்ப்பில் உபயோகப்படுத்தப்படுகின்றது (E எண்: E297).