கெல்லீஸ்

ஆள்கூறுகள்: 13°05′08.8″N 80°14′39.7″E / 13.085778°N 80.244361°E / 13.085778; 80.244361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெல்லீஸ்
உப புறநகர்ப் பகுதி
கெல்லீஸ் is located in சென்னை
கெல்லீஸ்
கெல்லீஸ்
கெல்லீஸ் is located in தமிழ் நாடு
கெல்லீஸ்
கெல்லீஸ்
கெல்லீஸ் is located in இந்தியா
கெல்லீஸ்
கெல்லீஸ்
ஆள்கூறுகள்: 13°05′08.8″N 80°14′39.7″E / 13.085778°N 80.244361°E / 13.085778; 80.244361
நாடு India
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
ஏற்றம்33 m (108 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்600010
தொலைபேசி குறியீடு044xxxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்எழும்பூர், அயனாவரம், ஓட்டேரி, கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு (சென்னை), புரசைவாக்கம்
மாநகராட்சிபெருநகர சென்னை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிமத்திய சென்னை மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிஅண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி உறுப்பினர்தயாநிதி மாறன்
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்எம். கே. மோகன்
இணையதளம்https://chennaicorporation.gov.in

கெல்லீஸ், சென்னை[1][2][3] என்ற‌ உப புறநகர்ப்பகுதி, இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில், கீழ்ப்பாக்கம் புறநகர்ப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. வணிக நிறுவனங்கள், குடியிருப்புப் பகுதிகள் நிறைந்த கெல்லீஸ், போக்குவரத்து அதிகம் கொண்ட ஓர் ஊர். கெல்லீஸ் நகரை இணைக்கும் வண்ணம், மெற்றோ இரயில்வேயின், 2ஆம் கட்ட, மூன்றாவது வழித்தடம் (phase II, corridor 3), சுரங்கப்பாதை உருவாக தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.[4]

அமைவிடம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 33 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கெல்லீஸ் நகரின் புவியியல் ஆள்கூறுகள்: 13°05'08.8"N, 80°14'39.7"E (அதாவது, 13.085768°N, 80.244352°E) ஆகும்.

அருகிலுள்ள ஊர்கள்[தொகு]

கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், சேத்துப்பட்டு (சென்னை), அயனாவரம், ஓட்டேரி மற்றும் எழும்பூர் ஆகியவை கெல்லீஸுக்கு அருகிலுள்ள முக்கியமான ஊர்கள்.

போக்குவரத்து[தொகு]

சாலைப் போக்குவரத்து[தொகு]

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் பேருந்து சேவைகள் கெல்லீஸ் நகரை சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளுடன் இணைக்கின்றன.

தொடருந்து போக்குவரத்து[தொகு]

சுமார் 2 கி.மீ. அருகிலுள்ள சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம், கெல்லீஸ் நகர மக்கள் வெளிமாவட்டங்கள் சென்று வர பயனுள்ளதாக அமைந்துள்ளது. மேலும் எழும்பூர் மெற்றோ நிலையம் மூலம் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் போக்குவரத்திற்கு எளிதாக உள்ளது. சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள சென்னை மத்திய தொடருந்து நிலையம், வெளிமாநிலத் தொடர்புகளுக்கும் ஏற்றதாகப் பயன்படுகிறது.

மெற்றோ வழித்தடம்[தொகு]

சென்னையில் இரண்டாம் கட்ட மெற்றோ வழித்தடம் 3-க்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த வழித்தடம் மூன்றானது, மாதவரத்தில் ஆரம்பித்து, கெல்லீஸ் வழியாக சிறுசேரி சிப்காட் வரை அமைகிறது. இதன் நீளம் 45.8 கி.மீ. என வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் உயர்மட்டப் பாதைகள் மற்றும் சுரங்கப்பாதைகள் அடங்கும். மாதவரம் பால்பண்ணை ஆரம்பித்து, தபால் பெட்டி, முராரி மருத்துவமனை, மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட், பெரம்பூர் மெட்ரோ, அயனாவரம், ஓட்டேரி, பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, டவுட்டன் சந்திப்பு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ் வரை 9 கி.மீ. தூரத்திற்கு, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 இராட்சத துளையிடும் இயந்திரங்கள் மூலம் சுரங்கப்பாதைகள் தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 36.8 கி.மீ. தூரம் கெல்லீஸ் முதல், சேத்துப்பட்டு வழியாக சிறுசேரி சிப்காட் வரை மேலும் 8 இராட்சத துளையிடும் இயந்திரங்கள் மூலம் சுரங்கப்பாதைகள் தோண்டும் பணிகள் நடைபெறும்.[5][6][7] இதற்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணியினை 'எல் அண்ட் டி' (L & T) நிறுவனம் மேற்கொள்கிறது. 52 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.[8]

வான்வழிப் போக்குவரத்து[தொகு]

சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம், கெல்லீஸ் நகரிலிருந்து சுமார் 21 கி.மீ.‌ தொலைவிலுள்ளது.

அரசியல்[தொகு]

கெல்லீஸ் நகரானது, அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் மத்திய சென்னை மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Find link". edwardbetts.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-15.
  2. "Eliya Muraiyil Piniagatrum Deiveega Mooligaigal- A Book of Siddha Simple Medicine". Bharathi Puthakalayam. பார்க்கப்பட்ட நாள் 2022-10-14.
  3. "யாருடையது இந்த தோட்டம்". Bharathi Puthakalayam. பார்க்கப்பட்ட நாள் 2022-10-15.
  4. Bureau, The Hindu (2022-10-13). "Chennai Metro's phase II tunnelling work gets under way at Madhavaram". www.thehindu.com (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-10-20.
  5. "சென்னையில் 2வது கட்ட மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணிகள்: முதல்வர் தொடங்கி வைத்தார்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-10-14.
  6. "சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: முதல்வர் தொடக்கிவைத்தார்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-10-14.
  7. "சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ பணிகள்.. சுரங்கப் பாதை கட்டுமான பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!". News18 Tamil. 2022-10-13. பார்க்கப்பட்ட நாள் 2022-10-15.
  8. "சென்னை கெல்லீஸ் முதல் தரமணி வரை மெட்ரோ ரயிலுக்காக சுரங்கப் பாதை: `எல் அண்ட் டி' நிறுவனம் அமைக்கிறது". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-10-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெல்லீஸ்&oldid=3782536" இலிருந்து மீள்விக்கப்பட்டது